திருவாவடுதுறை ஆதீன பரம்பரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருவாடுதுறை ஆதீன பரம்பரை 12 ஆம் நூற்றாண்டில் தொடங்கி, 14 ஆம் நூற்றாண்டு வரை தொடர்கிறது. சிவஞான போதம் என்னும் நூலை இயற்றிய மெய்கண்டார் (1125-1175) இதன் முதல் குரு. எனவே இதனை ‘மெய்கண்டார் பரம்பரை’ என்றும், ‘மெய்கண்டார் சந்தானம்’ என்றும் குறிப்பிடுகின்றனர். இவர்களாலும், இவருக்கு முந்தைய இருவராலும் இயற்றப்பட்ட நூல்கள் மெய்கண்ட சாத்திரங்கள் என வழங்கப்படுகின்றன.

திருக்கைலாய பரம்பரைத் திருவாவடுதுறை ஆதினம் குருபரம்பரை விளக்கம்

மெய்கண்டார் மாணாக்கர் இருவர். ஒருவர் சிவஞான சித்தியார், இருபா இருபது ஆகிய நூல்களை இயற்றிய அருணந்தி சிவாசாரியார் (1180-1275). மற்றொருவர் மணவாசகம் கடந்தார் (1225-1275).

அருணந்தி சிவாசாரியார் மாணாக்கர் சதமணிக் கோவை நூலை இயற்றிய கடந்தை மறைஞான சம்பந்தர் (1275-1300). இவரது மாணாக்கர் இருவர். ஒருவர் கொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார் (1300-1325). மற்றொருவர் மச்சுச் செட்டியார் என்னும் அருள் நமச்சிவாயர் (1300-1330)

மச்சுச் செட்டியார் மாணாக்கர் இருவர். ஒருவர் சித்தர் சிவப்பிரகாசர். இவர் எந்த நூலும் இயற்றவில்லை. நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் இவரது கருத்துக்களைப் பின்பற்றியவர் மூவலூர் நமசிவாய மூர்த்தி (1525). இவர் திருவாடுதுறை ஆதீன முதல் குரு.

மச்சுச் செட்டியாரின் மற்றொரு மாணாக்கர் காழி கங்கைகொண்டார் (1310-1340). இவரும் எந்த நூலும் செய்யவில்லை. இவரது மாணாக்கர் காழி – பழுதை கட்டி சிற்றம்பலநாடி (1325-1350) இவரால் எழுதப்பட்ட நூல்கள் பல.

கருவிநூல்[தொகு]

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, பாகம் 2, பதிப்பு 2005
  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினான்காம் நூற்றாண்டு, பதிப்பு 2005

காண்க[தொகு]