மயிலாடுதுறை மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மயிலாடுதுறை மாவட்டம்
மாவட்டம்
தமிழ்நாட்டில் மயிலாடுதுறை மாவட்டத்தின் அமைவிடம்
தமிழ்நாட்டில் மயிலாடுதுறை மாவட்டத்தின் அமைவிடம்
நாடு இந்தியா
மாநிலம்TamilNadu Logo.svg தமிழ்நாடு
நிலப்பரப்புசோழ நாடு
நிர்மாணித்தவர்எடப்பாடி க. பழனிசாமி
வட்டங்கள்குத்தாலம், மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி
பரப்பளவு
 • மொத்தம்1,172
பரப்பளவு தரவரிசை38
ஏற்றம்11
மக்கள்தொகை
 • மொத்தம்9,17,000
 • தரவரிசை34
 • அடர்த்தி782
மொழிகள்
 • அலுவல்முறைதமிழ்
நேர வலயம்IST (ஒசநே+5:30)
PIN609001
வாகனப் பதிவுTN 82

மயிலாடுதுறை மாவட்டம் என்பது தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். நாகப்பட்டினம் மாவட்டத்தின் மயிலாடுதுறை வருவாய் கோட்டத்தில் இருந்த 4 வருவாய் வட்டங்களைக் கொண்டு தமிழ்நாட்டின் 38ஆவது மாவட்டமாக மயிலாடுதுறை உருவாக்கப்படும் என்று 24 மார்ச் 2020 அன்று தமிழக முதல்வர் எடப்பாடி க. பழனிசாமி சட்டமன்றத்தில் அறிவித்தார்.[1][2][3][4][5]

இதன் மாவட்ட நிர்வாகத் தலைமையிடமாக மயிலாடுதுறை உள்ளது. புதிய மயிலாடுதுறை மாவட்டம் அமைப்பதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு ஏப்ரல் 7, 2020 அன்று வெளியிட்டது.[6]


பிரபலங்கள்[தொகு]

 • தமிழின் முதல் புதினமான பிரதாப முதலியார் சரித்திரம் எழுதிய மாயூரம் வேதநாயகம் பிள்ளை நகர முன்சீப்பாக இந்த ஊரில் தான் பணிபுரிந்தார்.
 • குன்றக்குடி அடிகள்
 • ’கல்கி’ ரா. கிருஷ்ணமூர்த்தி
 • கோமல் அன்பரசன்
 • தமிழ் திரையுலகின் புகழ் பெற்ற எம். கே. தியாகராஜ பாகவதர்
 • சதுரங்க விளையாட்டு வீரர் விஸ்வநாதன் ஆனந்த்
 • திரை இயக்குநர் விஜய டி. ராஜேந்தர்
 • திரை இயக்குநர் கே. எஸ். கோபாலகிருஷ்ணன்
 • திரை இயக்குநர் மல்லியம் ராஜகோபால்
 • அன்பாலயா பிரபாகரன்
 • மக்கள் சக்தி இயக்கம் நிறுவனர் எம். எஸ். உதயமூர்த்தி
 • திரை ஒளிப்பதிவாளர் ஆர். டி. ராஜசேகர்
 • நடிகை பிரியா ஆனந்த்
 • திரை இசை அமைப்பாளர் சௌதர்யன்
 • முனைவர் துரை.குணசேகரன்
 • இந்திய சதுரங்க கிராண்ட் மாஸ்டர் விசுவநாதன் ஆனந்த்.

தொழில் நிலவரம்[தொகு]

குறிப்பிட்டு சொல்லும்படியான தொழிலகங்கள் இவ்வூரில் இல்லையென்றாலும், மக்களின் முதன்மை தொழிலாக விவசாயமே இருந்துவருகிறது.

நகரின் முக்கிய சுற்றுபுற ஊர்களான குத்தாலம், மங்கைநல்லூர், வைத்தீஸ்வரன்கோயில், செம்பனார்கோயில் உள்ளிட்ட சிறுநகர மக்களும் அப்பகுதிகளைச் சுற்றியுள்ள கிராமப்புற மக்களும் வேளாண்மையையே முதல் தொழிலாக மேற்கொள்ளுகின்றனர். காவிரியில் நீர்வரத்து இல்லாத போதும் நிலத்தடிநீர் பாசனம் கைகொடுப்பதால் டெல்டா வட்டாரத்தில் உள்ள ஊர்களில் இன்றும் முப்போகம் விளையும் பகுதியாக இது திகழ்கிறது.

அதேபோல நகர்புறத்தில் வசிக்கும் மக்களில் பலர் அரசு பணியாளர்களாக இருப்பதோடு மற்றவர்கள் தனியார் நிறுவனங்களிலும் பணி புரிகின்றனர்.

இவர்கள் தினம் அருகில் உள்ள நகரங்களுக்கு வேலை நிமித்தமாக பேருந்து அல்லது இரயில் மார்க்கமாக சென்று வருவதும் குறிப்பிடத்தக்கது.

வருவாய் வட்டங்கள்[தொகு]

 1. மயிலாடுதுறை வட்டம்
 2. சீர்காழி வட்டம்
 3. குத்தாலம் வட்டம்
 4. தரங்கம்பாடி வட்டம்

நகராட்சிகள்[தொகு]

 1. மயிலாடுதுறை
 2. சீர்காழி

பேரூராட்சிகள்[தொகு]

 1. குத்தாலம்
 2. தரங்கம்பாடி
 3. மணல்மேடு
 4. வைத்தீசுவரன்கோவில்

ஊராட்சி ஒன்றியங்கள்[தொகு]

 1. மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியம்
 2. சீர்காழி ஊராட்சி ஒன்றியம்
 3. குத்தாலம் ஊராட்சி ஒன்றியம்
 4. செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியம்
 5. கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியம்

அரசியல்[தொகு]

மயிலாடுதுறை மாவட்டம் ஒரு நாடாளுமன்றத் தொகுதியும், மூன்று சட்டமன்றத் தொகுதிகளும் கொண்டது.

நாடாளுமன்ற உறுப்பினர்
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி எஸ். இராமலிங்கம்
சட்டமன்ற உறுப்பினர்கள்
சீர்காழி (சட்டமன்றத் தொகுதி) பி. வி. பாரதி
மயிலாடுதுறை (சட்டமன்றத் தொகுதி) வி. இராதாகிருஷ்ணன்
பூம்புகார் (சட்டமன்றத் தொகுதி) எஸ். பவுன்ராஜ்

வழிபாடு & சுற்றுலா இடங்கள்[தொகு]

படக்காட்சிகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]