மயிலாடுதுறை வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மயிலாடுதுறை வட்டம் , தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள நான்கு வட்டங்களில் ஒன்றாகும்.[1]இந்த வட்டத்தின் தலைமையகமாக மயிலாடுதுறை நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 67 வருவாய் கிராமங்கள் உள்ளன. மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியம் இவ்வட்டத்தில் உள்ளது.

மக்கள்தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டம் 259,634 மக்கள்தொகை கொண்டது. மக்கள்தொகையில் 128,284 ஆண்களும், 131,350 பெண்களும் உள்ளனர். 65,163 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 63.5% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 86.01% மற்றும்பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1,024 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 24859 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 977 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 76,037 மற்றும் 1,042 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 91.26%, இசுலாமியர்கள் 5.85%, கிறித்தவர்கள் 2.47% மற்றும் பிறர் 0.42%ஆகவுள்ளனர்.[2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மயிலாடுதுறை_வட்டம்&oldid=3328155" இலிருந்து மீள்விக்கப்பட்டது