தரங்கம்பாடி
தரங்கம்பாடி | |||
அமைவிடம் | 11°02′N 79°50′E / 11.03°N 79.84°Eஆள்கூறுகள்: 11°02′N 79°50′E / 11.03°N 79.84°E | ||
நாடு | ![]() | ||
பகுதி | சோழ நாடு | ||
மாநிலம் | தமிழ்நாடு | ||
மாவட்டம் | மயிலாடுதுறை | ||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||
மாவட்ட ஆட்சியர் | |||
மக்கள் தொகை • அடர்த்தி |
23,191 (2011[update]) • 1,776/km2 (4,600/sq mi) | ||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
பரப்பளவு | 13.06 சதுர கிலோமீட்டர்கள் (5.04 sq mi) | ||
குறியீடுகள்
| |||
இணையதளம் | www.townpanchayat.in/tharangampadi |
தரங்கம்பாடி (ஆங்கிலம்:Tranquebar), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள மயிலாடுதுறை மாவட்டத்தின் 4 பேரூராட்சிகளில் ஒன்றாகும்.[3] தரங்கம்பாடி வட்டத்தின் தலைமையிடமும், பேரூராட்சியுமான தரங்கம்பாடியின் கடற்கரையில் தரங்கம்பாடி மாசிலாமணிநாதர் கோயில் உள்ளது.
தரங்கம்பாடியில்தான் இந்தியாவின் முதல் அச்சு இயந்திரத்தின் மூலம் பைபிள் அச்சிடப்பட்டது. டேனீஷ் காரர்களின் கோட்டை இன்றும் உள்ளது.
அமைவிடம்[தொகு]
காவேரி ஆறு, வங்காள விரிகுடாவில் கலக்கும் கழிமுகத்தில், காரைக்காலுக்கு வடக்கே 15 கிமீ தொலைவில் தரங்கம்பாடி பேரூராட்சி உள்ளது.
நாகப்பட்டினத்திலிருந்து 34 கிமீ தொலைவில் அமைந்த தரங்கம்பாடிக்கு அருகில் மயிலாடுதுறை 31 கிமீ; சீர்காழி 31 கிமீ தொலைவில் உள்ளது. தரங்கம்பாடிக்கு அருகமைந்த தொடருந்து நிலையம் 13 கிமீ தொலைவில் உள்ள காரைக்காலில் உள்ளது.
சிதம்பரம் - நாகப்பட்டினம், பொறையார் - மயிலாடுதுறை, மயிலாடுதுறை - நாகப்பட்டினம், காரைக்கால் - பொறையார் செல்லும் பேருந்துகள் தரங்கம்பாடி வழியாகச் செல்கின்றன.
பேரூராட்சியின் அமைப்பு[தொகு]
13.06 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும், 172 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி பூம்புகார் (சட்டமன்றத் தொகுதி)க்கும், மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]
மக்கள் தொகை பரம்பல்[தொகு]
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 5482 வீடுகளும், 23,191 மக்கள்தொகையும் கொண்டது.[5] [6]
வெளி இணைப்புகள்[தொகு]
ஆதாரங்கள்[தொகு]
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ LocalBodies of MAYILADUTHURAI DISTRICT
- ↑ தரங்கம்பாடி பேரூராட்சியின் இணையதளம்
- ↑ http://www.townpanchayat.in/tharangampadi/population
- ↑ Tharangambadi Population Census 2011