கீழப்பெரும்பள்ளம் நாகநாதர் கோயில்
கீழப்பெரும்பள்ளம் நாகநாதர் கோயில் | |
---|---|
பெயர் | |
பெயர்: | கீழப்பெரும்பள்ளம் நாகநாதர் கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | கீழப்பெரும்பள்ளம் |
மாவட்டம்: | மயிலாடுதுறை |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | நாகநாதர் |
உற்சவர்: | சோமாஸ்கந்தர் |
தாயார்: | சவுந்தர்யநாயகி |
தல விருட்சம்: | மூங்கில் |
தீர்த்தம்: | நாகதீர்த்தம் |
ஆகமம்: | காமிகம் |
வரலாறு | |
அமைத்தவர்: | சோழர்கள் |
கீழப்பெரும்பள்ளம் நாகநாதர் கோயில் என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ள சிவத்தலம் ஆகும். [1]
இத்தலத்தின் மூலவர் நவக்கிரங்களில் ஒருவரான கேது தலமாகும்.
இச்சிவாலயத்தின் மூலவரை நாகநாதர் எனவும், அம்பாள் சவுந்தர்யநாயகி எனவும் அழைக்கப்படுகின்றார்.
அமைப்பு[தொகு]
நுழைவாயிலில் இறைவன் தேவியுடன் காளைமீது அமர்ந்த நிலையில் உள்ள சுதைச்சிற்பம் உள்ளது. வாயிலைக் கடந்து உள்ளே சென்றதும் விநாயகர், பலிபீடம், நந்தியைக் காணலாம். மூலவராக நாகநாதர் உள்ளார். கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி உள்ளார். மூலவர் சன்னதியின் இடப்புறம் கேது சன்னதி உள்ளது. திருச்சுற்றில் விநாயகர், வள்ளிதெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், துர்க்கை, யோக நரசிம்மர், லட்சுமி நாராயணர், கஜலட்சுமி, சண்டிகேஸ்வரர் சன்னதிகள் உள்ளன.
விழாக்கள்[தொகு]
- சிவராத்திரி
- ஐப்பசி அன்னாபிசேகம்
- பங்குனி வாசுகி உற்சவம்
- பிரதோசம்
தலசிறப்பு[தொகு]
இச்சிவத்தலம் கேதுவுக்கு உரியதாகும்.