உள்ளடக்கத்துக்குச் செல்

புதன் (இந்து சமயம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புதன்
அதிபதிபுதன்
தேவநாகரிबुध
தமிழ் எழுத்து முறைபுதன்
வகைநவக்கிரகம்
கிரகம்புதன் கோள்
துணைஇலா

இந்துத் தொன்மவியலில், புதன் (Budha, சமக்கிருதம்: बुध) என்பது மெர்க்குரி கோளுக்குக் கொடுக்கப்பட்ட பெயரும், நிலாவின் (தாராவுடன் அல்லது ரோகினியுடன்) மகனும் ஆவார். இவர் வணிகர்களின் கடவுளும் அவர்களின் பாதுகாப்புமாகும்.

தோற்றம்

[தொகு]

சந்திர தேவன் சிவபெருமானை நோக்கி தவமிருந்து அவர் அருளால் கிரக அந்தஸ்தினைப் பெற்றார். அத்துடன் பிரஜாபதியான தட்சனின் இருபத்து ஏழு நட்சத்திரங்களையும் மணம் முடித்தார். அதனால் ஆணவம் கொண்டவராக மாறினார். அத்துடன் தேவர்களின் குருவான பிரகஸ்பதியின் மனைவி தாரையை கவர்ந்து சென்று அசுரர்களின் குருவான சுக்கிராச்சாரியாருடன் இணைந்தார். தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் போர் மூண்டது.

பிரம்ம தேவர் அந்தப் போரை நிறுத்தி, சந்திர தேவரிடமிருந்து தாரைவை மீட்டார். ஆனால் தாரா கற்பமாக இருந்தார் என்பதால் பிரகஸ்பதி அவரை ஏற்கவில்லை. தாராவிற்கு குழந்தை பிறந்த பொழுது, அக்குழந்தை அழகும், ஒளியும் உடையதாக இருந்தது. அதனால் புதன் என்று அழைக்கப்பட்டார். [1]

புகழ்பெற்றோர்

[தொகு]

இந்து தொன்மவியலில், புதன் ஒரு தெய்வமாவார். இவர் சந்திரனுக்கும் ரோகிணி[2] அல்லது தாராவிற்கும்[3][4] பிறந்த மகனாவார். தாரகாமயப் போர் பற்றிய புராணக் கதை, தாராயின் வழியே இவர் அவதரித்த நிகழ்வுகளை விவரிக்கிறது. புதன் இலா என்பவரை மணந்தார். இவர்களுக்குப் புரூரவன் என்ற மன்னன் மகனாகப் பிறந்தான்.

வேதத்தில் பஞ்சவிம்ச பிராமணம் என்ற வைதீக நூலில் புதனைப் பற்றிய தொடக்ககாலக் குறிப்புகளில் ஒன்று காணப்படுகிறது. சோதிடக் கோட்பாடுகளுக்கு அப்பாற்பட்ட சூழலில், சதபத பிராமணம் போன்ற பிற பழமையான நூல்களிலும் இத்தெய்வம் இடம்பெறுகிறார்.[2]

படிமவியல்/உருவவியல்

[தொகு]
செய்ப்பூர் சவகர் கலா கேந்திரத்தில் புதனின் ஓவியம்

ரோசன் தலால் அவரின் கூற்றுப்படி, புதனின் உருவவியல், அவரைப் பச்சை நிற உடலும், மஞ்சள் நிற ஆடையும் அணிந்து, சுழல்வாள் (வளைந்த வாள்), கதாயுதம், கேடயம் ஏந்திய நன்மையளிக்கும் ஓர் ஆண் தெய்வமாகச் சித்தரிக்கிறது.[5] அவர் எட்டு மஞ்சள் நிறக் குதிரைகள் பூட்டப்பட்ட தேரில் ஏறி வருவது போல் காட்டப்பட்டுள்ளார். சில சித்திரங்களில், இவர் நான்கு கரங்களுடன் சிங்கத்தின் மீது அமர்ந்து வருவது போலவும், புதன் கோவிலில் சிங்கத்தின் மீது ஏறி வருவது போலவும் சித்தரிக்கப்பட்டுள்ளார்.[6][7][8]

இவற்றையும் பார்க்க

[தொகு]

மேற்கோள்களும் குறிப்புகளும்

[தொகு]
  1. வாயு புராணம் - சோமன் வரலாறு பகுதி
  2. 1 2 Mahoney, Terry (2013). Mercury. Springer Science. p. 2. ISBN 978-1-4614-7951-2 via Google Books.
  3. Mani, Vettam (1975). Puranic Encyclopaedia: a Comprehensive Dictionary with Special Reference to the Epic and Puranic Literature. Motilal Banarsidass Publishers. p. 171. ISBN 978-0-8426-0822-0.
  4. Dalal, Roshen (2010). Hinduism: An Alphabetical Guide. Penguin Books India. pp. 394. ISBN 978-0-14-341421-6.
  5. Lochtefeld, James G. (2002). The Illustrated Encyclopedia of Hinduism. Vol. A–M. The Rosen Publishing Group. p. 324. ISBN 978-0-8239-3179-8.
  6. Dalal, Roshen. Hinduism: An Alphabetical Guide (in ஆங்கிலம்). Penguin Books India. ISBN 978-0-14-341421-6.
  7. "[no title cited]". University of Washington. Archived from the original on 18 May 2021. Retrieved 15 November 2019.
  8. Gray, Patrick (2015). Varieties of Religious Invention: Founders and their functions in history. Oxford University Press. p. 46, footnote [19]. ISBN 978-0-19-935972-1 via Google Books.

வெளி இணைப்புகள்

[தொகு]

வாயு புராணம் - தினமலர் கோயில்கள் தளம்



"https://ta.wikipedia.org/w/index.php?title=புதன்_(இந்து_சமயம்)&oldid=4637581" இலிருந்து மீள்விக்கப்பட்டது