நவக்கிரகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நவகிரகங்கள் - ராஜா ரவி வர்மாவின் ஓவியம்.

இந்துக்களின் வழிபாட்டுக்குரியதாயமைந்த ஒன்பது கிரகங்கள் நவக்கிரங்கள் எனப்படும்.கிரகம் எனும் சமசுகிருத சொல்( ग्रह ) ஆளுகைப்படுத்தல்—(seizing, laying hold of, holding[1]) எனும் பொருளுடையது. நவக்கிரகம்(சமசுகிருதம்: नवग्रह ), ஒன்பது ஆளுகைக்காரர்கள் எனப் பொருள்படும். புவியிலுள்ள உயிர்க்கூறுகளை ஆளுகைக்குட்படுத்துகின்ற அண்டவெளிக்கூறுகளாக இவை கருதப்படுகின்றன.

நவக்கிரக அமைப்பு

அவை:

 1. சூரியன் (நவக்கிரகம்)
 2. சந்திரன் (நவக்கிரகம்)
 3. செவ்வாய் (நவக்கிரகம்)
 4. புதன் (நவக்கிரகம்)
 5. குரு (நவக்கிரகம்)
 6. சுக்ரன் (நவக்கிரகம்)
 7. சனி (நவக்கிரகம்)
 8. இராகு (நவக்கிரகம்)
 9. கேது (நவக்கிரகம்)

என்பவையாகும்.


இந்திய சோதிட நூலின்படி கோள்கள் ஒன்பது ஆகும். இவை சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, இராகு, கேது என்பனவாகும். தற்கால அறிவியல் அடிப்படையில் இவைகளில் சில மட்டுமே உண்மையான கோள்கள். சூரியன் ஒரு விண்மீன் (நட்சத்திரம்). சந்திரன் பூமியின் துணைக்கோள். இராகு, கேது இரண்டும் விண் பொருட்களே அல்ல. இவை நிழற் கோள்கள் எனப்படுகின்றன அதாவது இல்லாத கிரகங்களாக கருதப்படுகின்றன..

நவகிரகங்கள் லிங்கத்தை வழிபடும் காட்சியைக் காட்டும் கி.மு. அஜந்தா சிற்பம்


கோள்கள் மனிதர் மீதும், உலகில் நடைபெறுகின்ற நிகழ்வுகள் மீதும் செல்வாக்குச் செலுத்துகின்றன என்ற நம்பிக்கையே சோதிடத்தின் அடிப்படையாகும். புவி அண்டத்தின் மையத்தில் இருக்க, சூரியன் உட்பட்ட எல்லாக் கோள்களும் அதனைச் சுற்றி வருகின்றன என்ற பழங்கால நம்பிக்கைக்கு ஏற்பவே சோதிடத்தில் கோள்களின் இயக்கங்கள் கணிக்கப்படுகின்றன. பண்டைய இந்தியப் பண்பாட்டில் இராகு, கேது தவிர்ந்த ஏழு கோள்களும் தேவர்கள் எனவும், அவர்கள் வெவ்வேறு குண இயல்புகளைக் கொண்டவர்கள் எனவும் கருதினார்கள். இக் கோள்கள், அவரவர் குண இயல்புகளுக்கு ஏற்ப உலகுக்கும் அதில் வாழும் மக்களுக்கும் நன்மையையோ தீமையையோ செய்கிறார்கள் எனச் சோதிட நூல் கூறுகிறது.

ஒரு குறிப்பிட்ட நேரத்தில், புவிக்குச் சார்பாக விண்வெளியில் கோள்கள் இருக்கும் நிலையும், ஒவ்வொரு கோளும் ஏனைய கோள்களின் நிலைகளோடு கொண்டுள்ள தொடர்பும் புவியில் இடம்பெறும் நிகழ்வுகள் மீது அவை ஏற்படுத்துகின்ற தாக்கத்தைப் பாதிக்கின்றன என்று சோதிடம் கருதுகிறது.

நவகிரகங்களின் தமிழ்ப் பெயர்கள்[தொகு]

 1. சூரியன் (Sun) - ஞாயிறு,கதிரவன்
 2. சந்திரன் (Moon) - திங்கள்
 3. செவ்வாய் (Mars) - நிலமகன், செவ்வாய்
 4. புதன் (Mercury) - , கணக்கன், புலவன்
 5. குரு (Jupiter) - சீலன், பொன்னன்,வியாழன்
 6. சுக்கிரன் (Venus) - சுங்கன், கங்கன்,வெள்ளி
 7. சனி (Saturn) - காரி, முதுமகன்
 8. ராகு (Raghu) - கருநாகன்
 9. கேது (Kethu) -செந்நாகன்

[2]

நவக்கிரகங்கள்[தொகு]

நவக்கிரகம், பிரித்தானிய அருங்காட்சியகம்.மூலம் ஒரிஸா இ-வ: சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், சுக்கிரன், சனி, இராகு, கேது நவக்கிரகம், பிரித்தானிய அருங்காட்சியகம்.மூலம் ஒரிஸா இ-வ: சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், சுக்கிரன், சனி, இராகு, கேது
நவக்கிரகம், பிரித்தானிய அருங்காட்சியகம்.மூலம் ஒரிஸா இ-வ: சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், சுக்கிரன், சனி, இராகு, கேது

நவக்கிரக கோயில்கள்[தொகு]

 1. சூரியனார் கோவில்
 2. திங்களூர் கைலாசநாதர் கோயில்
 3. சீர்காழி வைத்தீசுவரன் கோயில்
 4. திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்
 5. ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் கோயில்
 6. கஞ்சனூர் அக்கினீஸ்வரர் கோயில்
 7. திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில்
 8. திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்
 9. கீழப்பெரும்பள்ளம் நாகநாதர் கோயில்

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. Sanskrit-English Dictionary by Monier-Williams, (c) 1899
 2. http://ammandharsanam.com/magazine/April2011unicode/page021.php அம்மன் தரிசனம் நவகிரகங்களின் தமிழ் பெயர்கள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=நவக்கிரகம்&oldid=2093098" இருந்து மீள்விக்கப்பட்டது