மார்தாண்ட சூரியன் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மார்தாண்ட சூரியன் கோயில்
மார்தாண்ட சூரியன் கோயில் சன்னதி
ஆள்கூறுகள்:33°44′44″N 75°13′13″E / 33.74556°N 75.22028°E / 33.74556; 75.22028ஆள்கூறுகள்: 33°44′44″N 75°13′13″E / 33.74556°N 75.22028°E / 33.74556; 75.22028
பெயர்
வேறு பெயர்(கள்):மார்தாண்டன் கோயில்
பெயர்:சூரியன் கோயில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:ஜம்மு காஷ்மீர்
மாவட்டம்:அனந்தநாக் மாவட்டம்
அமைவு:அனந்தநாக்
கோயில் தகவல்கள்
மூலவர்:சூரியன்
வரலாறு
கட்டப்பட்ட நாள்:கி பி 8-ஆம் நூற்றாண்டு
அமைத்தவர்:லலிதாத்தியன்

மார்தாண்ட சூரியன் கோயில் (Martand Sun Temple) இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அனந்தநாக் நகரத்திலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள சூரிய பகவானுக்கு அர்பணிக்கப்பட்ட இந்துக் கோயில் ஆகும்.[1] இக்கோயிலின் மூலவர் சூரிய பகவான் ஆவார்.

வரலாறு[தொகு]

மார்தாண்ட சூரிய கோயிலின் சிதிலங்கள், ஆண்டு 1868

மார்தாண்ட சூரியன் கோயிலை கார்கோடப் பேரரசின் மூன்றாம் மன்னர் லலிதாத்தியன் கி பி எட்டாம் நூற்றாண்டில் கட்டினார்.[2][3] கிபி 725-756 காலத்தில் கட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது.[4] மார்தாண்ட சூரியன் கோயிலின் அஸ்திவாரம் கி பி 370 – 500 கால கட்டத்தில் அமைக்கப்பட்டது. கோயில் அமைப்பு கார்கோடகப் பேரரசன் இரணாதித்தியன் காலம் முதல் துவக்கப்பட்டது.[5][6]

கி பி 15ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில், சிக்கந்தர் பட்சிகான் எனும் இசுலாமிய ஆட்சியாளாரால் மார்த்தாண்ட சூரியன் கோயில் முழுவதுமாக சிதைக்கப்பட்டது.[7][8]

கோயில் அமைப்பு[தொகு]

மார்த்தாண்ட சூரியன் கோயில் காந்தாரம், சீனம், கிரேக்க கட்டிடக் கலை நயத்தில் கட்டப்பட்டுள்ளது.[9][10]

220 அடி நீளமும், 142 அகலமும் கொண்ட சூரிய கோயில் வளாகத்தில் 84 சிறிய சன்னதிகள் கொண்டிருந்தது.[11] இக்கோயிலில் வேத கால தெய்வங்களான சூரியன், விஷ்ணு, கங்கை, யமுனையின் அழகிய சிற்பங்கள் உள்ளது.[12]

Temple ruins as seen from the entrance to the main temple structure
கோயில் முதன்மைப் பகுதிக்குச் செல்லும் நுழைவாயிலிலிருந்து காணும் இடிபாடுகளின் தோற்றம்
புனரமைக்கப்பட்ட மார்த்தாண்ட சூரியன் கோயிலின் ஓவியம், ஆண்டு 1870
கோயில் நுழைவு வாயில்
மார்தாண்ட சூரியன் கோயிலில் அழகிய சிற்பங்கள்

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த தலம்[தொகு]

ஜம்மு காஷ்மீரில் உள்ள இக்கோயிலை, இந்தியத் தொல்லியல் ஆய்வகம், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இடமாக அறிவித்துள்ளது.[13] இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தால் பாதுகாக்கப்பட வேண்டிய இடங்களில் ஒன்றாக இச்சூரியன் கோயிலும் அறிவிக்கப்பட்டுள்ளது.[14]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Kamlesh Moza. "Prominent Holy Places in Kashmir".
  2. Animals in stone: Indian mammals sculptured through time By Alexandra Anna Enrica van der Geer. பக். Ixx. https://books.google.com/books?id=oQ3quxh9gsgC&pg=PR70&dq=martand+sun+temple&hl=en&sa=X&ei=xKqGT5TqBZCnrAfJ5eSwBg&ved=0CGQQ6AEwCTgU#v=onepage&q=martand%20&f=false. 
  3. India-Pakistan Relations with Special Reference to Kashmir By Kulwant Rai Gupta. பக். 35. https://books.google.com/books?id=mksji5FVKwsC&pg=PA35&dq=martand+sun+temple&hl=en&sa=X&ei=xaGGT9uYN8rTrQf8qJnoBg&ved=0CE8Q6AEwBjgK#v=onepage&q=martand%20sun%20temple&f=false. 
  4. The Early Wooden Temples of Chamba. பக். 50, 66. https://books.google.com/books?id=kMwUAAAAIAAJ&pg=PA50&dq=martand+sun+temple&hl=en&sa=X&ei=xaGGT9uYN8rTrQf8qJnoBg&ved=0CEsQ6AEwBTgK#v=onepage&q=martand%20sun&f=false. 
  5. "Tourist places in south Kashmir". alpineinpahalgam.com. பார்த்த நாள் 8 July 2012.
  6. "Martand House of Pandavs". Search Kashmir. பார்த்த நாள் 11 July 2012.
  7. Hindu temples were felled to the ground and for one year a large establishment was maintained for the demolition of the grand Martand temple. But when the massive masonry resisted all efforts, it was set on fire and the noble buildings cruelly defaced.-Firishta, Muhammad Qãsim Hindû Shãh; John Briggs (translator) (1829–1981 Reprint). Tãrîkh-i-Firishta (History of the Rise of the Mahomedan Power in India). New Delhi
  8. India: A History. Revised and Updated By John Keay. https://books.google.com/books?id=AUPZt-4yqzQC&pg=PT260&dq=martand+sun+temple+destroyed&hl=en&sa=X&ei=LaqGT56mAsfPrQe8opzFBg&ved=0CD4Q6AEwAw#v=onepage&q=martand%20sun%20temple%20destroyed&f=false. 
  9. Al-Hind, the Making of the Indo-Islamic World, Volume 1 By André Wink. 1991. பக். 250–51. https://books.google.com/books?id=bCVyhH5VDjAC&pg=PA250&dq=martand+sun+temple&hl=en&sa=X&ei=_6GGT8mMOs7trQeqz8XCBg&ved=0CFQQ6AEwBjgU#v=onepage&q=martand%20sun%20temple&f=false. 
  10. Arts Of India By Krishna Chaitanya. பக். 7. https://books.google.com/books?id=8EGUpX1O0hoC&pg=PA7&dq=martand+sun+temple&hl=en&sa=X&ei=UaiGT6KoJcbprAeVgL3MBg&ved=0CEsQ6AEwBDgU#v=onepage&q=martand%20sun%20temple&f=false. 
  11. Encyclopædia Britannica: a new survey of universal knowledge: Volume 12, pp:965
  12. Kak, Ram Chandra. "Ancient Monuments of Kashmir". பார்த்த நாள் 8 November 2014.
  13. "Archaeological survey of India protected monuments". heritageofkashmir.org. பார்த்த நாள் 11 August 2012.
  14. "Protected monuments in Jammu & Kashmir". asi.nic.in, Archaeological surey of india. பார்த்த நாள் 29 October 2012.

வெளி இணைப்புகள்[தொகு]