ரே கல்வெட்டுக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரே கல்வெட்டுக்கள்
கிரேக்கப் பாக்திரியாப் பேரர்சர் மெனாண்டரால் பிராமி எழுத்துமுறையில் பிராகிருத மொழியில் நிறுவப்பட்ட ரே கல்வெட்டுக்கள், காலம்: கிமு இரண்டாம் நூற்றாண்டு - கிபி முதலாம் நூற்றாண்டு
எழுத்துபிராமி எழுத்து, பிராகிருத மொழி
உருவாக்கம்கிமு 2-ஆம் நூற்றாண்டு முதல் கிபி 2-ஆம் நூற்றாண்டு வரை
இடம்ரே தொல்லியல் களம், பதேபூர் மாவட்டம், உத்தரப் பிரதேசம், இந்தியா
தற்போதைய இடம்ரே, பதேபூர் மாவட்டம், உத்தரப் பிரதேசம், இந்தியா

ரே கல்வெட்டுக்கள் (Reh Inscription) இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் பதேபூர் மாவ்ட்டத்தில் உள்ள ரே தொல்லியல் களத்தில் 1979-இல் உடைந்த நிலையில் இக்கல்வெட்டுப் பலகை கண்டுபிடிக்கப்பட்டது. இக்கல்வெட்டுக்கள் சிவலிங்கத்தின் பீடத்தில் பிராமி எழுத்துமுறையில் பிராகிருத மொழியில் உள்ளது. இக்கல்வெட்டின் காலம் கிமு இரண்டாம் நூற்றாண்டு முதல் கிபி இரண்டாம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலம் ஆகும். [1] இக்கல்வெட்டில் கிரேக்கப் பாக்திரியாப் பேரர்சர் மெனாண்டரைக் குறித்த செய்திகள் உள்ளது.[2]

ரே கல்வெட்டின் தமிழ் மொழிபெயர்ப்பு: இந்தோ-கிரேக்கப் பேரரசர் மெனாண்டரை மன்னாதி மன்னர், பெரும் மீட்பர் மற்றும் வெல்லமுடியாதவர் எனக்குறிப்பிட்டுள்ளது.

அடிக்குறிப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. A. D. H. Bivar (1985), Review: Reh Inscription of Menander and the Indo-Greek Invasion of the Gaṅgā Valley by G. R. Sharma, The Journal of the Royal Asiatic Society of Great Britain and Ireland, No. 1 (1985), Cambridge University Press, pages 94-96
  2. Richard Salomon (1998). Indian Epigraphy: A Guide to the Study of Inscriptions in Sanskrit, Prakrit, and the Other Indo-Aryan Languages. Oxford University Press, USA. p. 141. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-509984-3.

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரே_கல்வெட்டுக்கள்&oldid=3185436" இலிருந்து மீள்விக்கப்பட்டது