ஸ்ரீ சூர்ய பஹார்
ஸ்ரீ சூர்ய பஹார் | |
---|---|
![]() ஸ்ரீ சூர்ய பஹாரின் நுழைவு வாயில் | |
இருப்பிடம் | கோல்பாரா, அசாம், இந்தியா |
ஆயத்தொலைகள் | 26°6′31″N 90°42′27″E / 26.10861°N 90.70750°E |
வகை | சரணாயாலம் |
ஸ்ரீ சூர்ய பஹார் (Sri Surya Pahar) என்பது இந்தியாவின் அசாமில் ஒரு குறிப்பிடத்தக்க ஆனால் ஒப்பீட்டளவில் அறியப்படாத தொல்பொருள் தளமாகும். இது கோல்பாராவிலிருந்து தென்கிழக்கில் சுமார் 12 கி.மீ தொலைவில், குவகாத்திக்கு வடமேற்கே 132 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.[1] கோல்பாரா இதன் அருகிலுள்ள நகரமாகும்.
பின்னணி[தொகு]
ஒரு மலைப்பாங்கான நிலப்பரப்பான இங்கு பல பாறைகளில் வெட்டப்பட்ட சிவ இலிங்கங்கள், தூண்கள், இந்து, பௌத்த சமண சமயங்களின் தெய்வங்கள் போன்றவை சுமார் ஒரு கி.மீ பரப்பளவில் சிதறிக்கிடக்கின்றன. இந்த இடம் சூர்ய மலைகளை (பஹார்) மையமாகக் கொண்டுள்ளது. இது சிவலிங்கங்களால் நிரம்பியுள்ளது.[2] பிரபலமான நம்பிக்கை என்னவென்றால், இரண்டாவது காசியைக் கட்டியெழுப்புவதற்காக 99999 சிவலிங்கங்கள் இங்கு வியாசரால்பொறிக்கப்பட்டன. (காசியில் 1,00000 சிவலிங்கங்கள் இருந்தன) மேலும், ஒரு காலத்தில் இது இப்பகுதியில் புனிதமான புனித யாத்திரை தளங்களில் ஒன்றாக இருந்தது. இந்த மலைகளில் எத்தனை லிங்கங்கள் இருந்தன என்பதற்கு வரலாற்று ஆதாரங்கள் எதுவும் இல்லை. ஆனால் நூற்றுக்கணக்கான லிங்கங்கள் இன்றும் உள்ளன. அவை சிறியதாகவும் பெரியதாகவும், மலையடிவாரத்தின் எல்லா இடங்களிலும் சிதறிக்கிடக்கின்றன. பல நூற்றாண்டுகள் புறக்கணிப்பாஅலும், ஆக்கிரமிப்புக்குப் பிறகும் விரிவான பகுதியை உள்ளடக்கியது. மலையில் உள்ள லிங்கங்களின் (மற்றும் பிற தெய்வங்கள் மற்றும் நினைவுச்சின்னங்கள்) சரியான எண்ணிக்கை இன்னும் அறிவியல் பூர்வமாக கணக்கிடப்படவில்லை.
தொல்பொருள் ஆய்வு[தொகு]
சில ஆண்டுகளுக்கு முன்பு, சில தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இங்கு ஒரு சில சிவலிங்கங்களையும் ஒரு சில வீடுகளையும் கண்டுபிடித்தனர் - சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் இதைச் சுற்றி ஒரு செழிப்பான நாகரிகம் இருந்துள்ளது என்ற நீண்டகால நம்பிக்கையை உறுதிப்படுத்திய கண்டுபிடிப்புகள் காணப்பட்டன. கலைரீதியாக வடிவமைக்கப்பட்ட செங்கற்களைக் கொண்ட வீடுகளின் சிக்கலான மற்றும் விஞ்ஞான வடிவமைப்புகள் சில தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களை இப்பகுதியின் வரலாற்றைக் கண்டுபிடிப்பது பண்டைய அசாம் மற்றும் இந்தியாவின் வரலாற்றைப் புரிந்துகொள்வதை மாற்றும் என்று நம்புவதற்கு வழிவகுத்தது. ஒரு சில அறிஞர்கள், சீன அறிஞர்கள் பிரபல சீனப் பயணி சுவான்சாங்கின் குறிப்புகளைக் குறிப்பிட்டு, பிரக்ஜோதிசபூர் அல்லது பிராக்ஜோதிச இராச்சியத்தின் குமார் பாஸ்கர வர்மனின் (600-650) தலைநகராக குவகாத்தி இருந்ததில்லை என்றும் ஸ்ரீ சூர்ய பஹார்தான் இருந்துள்ளது என்று குறிப்பிடுகின்றனர். இந்த கூற்றை வலுப்படுத்த அருகிலுள்ள பக்லேதெக்கின் தொல்பொருள் தளத்தின் கண்டுபிடிப்புகள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. இந்தத் தளம் பிரம்மபுத்ரா ஆற்றங்கரைக்கு மிக அருகில் இருப்பதால், இது கடந்த காலத்தில் ஒரு முக்கியமான வர்த்தக மையமாகவோ அல்லது நிர்வாக இடமாகவோ இருந்திருக்கலாம்.
இத்தளத்தின் மற்றொரு முக்கியமான முக்கியத்துவம் என்னவென்றால், இது ஒரு காலத்தில் மூன்று மதங்களின் சங்கமமாக இருந்துள்ளது. இங்கு காணப்படும் எண்ணற்ற சிற்பங்கள் ,இந்து மதம், பௌத்தம், சமண மதத்தைச் சேர்ந்த பிற நினைவுச்சின்னங்களிலிருந்து இது தெளிவாகிறது.





மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Surya temple,Surya pahar temple,Surya pahar,Assam". Religiousportal.com. 1980-01-01. http://www.religiousportal.com/suryapahartemple.html.
- ↑ "Surya Pahar, Goalpara | Surya Pahar Photos | Goalpara Tourist Places". Holidayiq.com இம் மூலத்தில் இருந்து 2013-01-28 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130128184953/http://www.holidayiq.com/Surya-Pahar-Goalpara-Sightseeing-881-17174.html.
- Choudhary, R. D. (1998), Art Heritage of Assam, Aryan Books International
- Buruah, B. K. (1988), Temples & Legends of Assam, Bharatiya Vidya Bhavan