முல்தான் சூரியக் கோயில்
முல்தான் சூரியக் கோயில் | |
---|---|
பஞ்சாப், பாக்கிஸ்தான்-இல் உள்ள இடம் | |
அமைவிடம் | |
நாடு: | பாகிஸ்தான் |
மாநிலம்: | பஞ்சாப் |
மாவட்டம்: | முல்தான் மாவட்டம் |
அமைவு: | முல்தான் |
ஆள்கூறுகள்: | 30°07′55.9″N 71°26′27.9″E / 30.132194°N 71.441083°E |
கோயில் தகவல்கள் | |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | இந்து கட்டிடக் கலை |
முல்தான் சூரியக் கோயில் (Sun Temple of Multan), பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள முல்தான் நகரத்தில் அமைந்துள்ளது. இக்கோயில் சூரிய பகவானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்துக் கோவில் ஆகும். இதன் காலம் பொ.ஊ. 614 அல்லது அதற்கும் முன்னர் ஆகும்.[1][2][3]
வரலாறு
[தொகு]தொன்ம வரலாறு
[தொகு]கிருஷ்ணரின் மகன் சாம்பன் தனக்கு பீடித்திருந்த தொழு நோய் நீங்க இக்கோயிலின் சூரிய பகவானை வேண்டியதாக பாகவத புராணம் கூறுகிறது.[4][5][6]
மத்திய கால வரலாறு
[தொகு]சீன பௌத்த யாத்தீகர் யுவான் சுவாங் பொ.ஊ. 641-ஆம் ஆண்டில் இக்கோயிலுக்கு வருகை புரிந்தது குறித்து தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். மேலும் இச்சூரியக் கோயிலில் சிவன், கௌதம புத்தர் சன்னதிகள் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.[7] பாரசீக வரலாற்று அறிஞர் அல்-பிருனி பொ.ஊ. 11-ஆம் நூற்றாண்டில் முல்தான் நகரத்திற்கு வருகை புரிந்த போது இச்சூரியக் கோயிலை பற்றி விவரித்துள்ளார்.
முல்தான் சூரியக் கோவிலை அழித்தல்
[தொகு]பொ.ஊ. 10-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பஞ்சாப் பகுதியை ஆட்சி செய்த இசுலாமிய ஆட்சியாளர்கள் இச்சூரியக் கோயில வளாகத்தில் மசூதி மற்றும் முல்தான் நகரத்தையும் எழுப்பினர்.[8] 11-ஆம் நூற்றாண்டில் கஜினி முகமது இச்சூரியக் கோயிலை முற்றிலும் சிதைத்து அழித்தான்.[8] இக்கோயில் இசுலாமியர்களால் சிதைக்கப்பட்டதால் இந்துக்கள் இச்சூரியக் கோயிலுக்கு வருகை தருவதை நிறுத்தினர் என அல்-பிருனி தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.[9]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Journal of Indian history: golden jubilee volume. T. K. Ravindran, University of Kerala. Dept. of History. 1973. p. 362.
- ↑ Avari, Burjor (2013). Islamic Civilization in South Asia: A History of Muslim Power and Presence in the Indian Subcontinent (in ஆங்கிலம்). Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-415-58061-8.
- ↑ [1] பரணிடப்பட்டது 2016-02-01 at the வந்தவழி இயந்திரம் Survey & Studies for Conservation of Historical Monuments of Multan. Department of Archeology & Museums, Ministry of Culture, Government of Pakistan.
- ↑ Parampanthi, Swami Bangovinda (1987). Bhagawan Parashuram and evolution of culture in north-east India. p. 171. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788170350330.
- ↑ Pratāpa, Mahendra; Jafri, Saiyid Zaheer Husain (2008). Region in Indian History By Lucknow University. Dept. of Medieval & Modern Indian History. p. 79. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788179752050.
- ↑ Ancient India and Iran: a study of their cultural contacts by Nalinee M. Chapekar, pp 29-30
- ↑ Pāṇḍeya, Lālatā Prasāda (1971). Sun-worship in ancient India. p. 172.
- ↑ 8.0 8.1 Flood, Finbarr Barry (2009). Objects of Translation: Material Culture and Medieval "Hindu-Muslim" Encounter. Princeton University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780691125947.
- ↑ Wink, Andre (2002). Al-Hind, the Making of the Indo-Islamic World: Early Medieval India and the Expansion of Islam 7Th-11th Centuries. Brill. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780391041738.