சூரியக் கோயில்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கதார்மல் சூரியக் கோயில் வளாகம், அல்மோரா மாவட்டம், உத்தராகண்ட்
சூரியத் தேரின் சக்கரம்

சூரியக் கோயில்கள் ( Sun temples ) என்பது மத அல்லது ஆன்மீக நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படும் ஒரு கட்டிடமாகும். அதாவது பிரார்த்தனைகளுக்காவும் தியாகங்களுக்காகவும் இது அமைக்கப்பட்டது. சூரியனுக்காக அர்ப்பணிக்கப்பட்டது. இத்தகைய கோயில்கள் பல்வேறு கலாச்சாரங்களால் கட்டப்பட்டவை. இந்தியா, சீனா, எகிப்து, யப்பான் , பெரு உள்ளிட்ட உலகம் முழுவதும் இது போன்றக் கோயில்கள் பரவலாக காணப்படுகின்றன. சில கோயில்கள் இடிந்து கிடக்கின்றன. சில அகழ்வாராய்ச்சி, பாதுகாப்பு அல்லது மறுசீரமைப்புக்கு உட்பட்டுள்ளன. மேலும் சில உலகப் பாரம்பரியக் களங்களாக தனித்தனியாக அல்லது கொனார்க் போன்ற பெரிய களத்தின் ஒரு பகுதியாக பட்டியலிடப்பட்டுள்ளன. [1]

சீனா[தொகு]

மேற்கு புனித வாயில், சூரியன் கோயில் (பெய்ஜிங்)

சீனாவின் பெய்ஜிங்கில் உள்ள சூரிய ஆலயம் 1530ஆம் ஆண்டில் மிங் வம்சத்தின் போது ஜியாஜிங் பேரரசரால் கட்டப்பட்டது, [2] இதில் பூமிக்கும் சந்திரனுக்கும் அர்ப்பணிக்கப்பட்ட புதிய கோயில்களும், சுவர்க்க ஆலயத்தின் விரிவாக்கமும் இருந்தது. அனைத்து கோயில்களையும் உள்ளடக்கிய ஓராண்டுகால சடங்குகளின் ஒரு பகுதியாக, உண்ணாவிரதம், பிரார்த்தனை, நடனம், விலங்கு பலி ஆகியவற்றை உள்ளடக்கிய விரிவான வழிபாட்டு நடவடிக்கைகளுக்கு ஏகாதிபத்திய அரசவையால் சூரிய ஆலயம் பயன்படுத்தப்பட்டது. [3] இக்கோயிலில் சிவப்பு நிறம் முக்கியமானதாக இருக்கிறது. இது சூரியனுடன் தொடர்புடையது. உணவு மற்றும் வைன் பிரசாதங்களுக்கான சிவப்பு பாத்திரங்கள் மற்றும் விழாக்களில் சக்கரவர்த்தி அணியும் சிவப்பு ஆடைகள் உட்பட. இந்தக் கோயில் இப்போது ஒரு பொது பூங்காவின் ஒரு பகுதியாக உள்ளது. [4]

எகிப்து[தொகு]

ஊசர்க்காபு கோவிலின் திட்டம்

பண்டைய எகிப்தில், ஏராளமான சூரிய கோவில்கள் இருந்தன. இந்த பழைய நினைவுச்சின்னங்களில் இரண்டாம் ராமேசசுவின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட அபு சிம்பெல் என்னும் இடத்திலுள்ள இரண்டு பாரிய பாறைக் கோயில்களான அபு சிம்பெல் கோயில்கள், [5] எகிப்தின் ஐந்தாம் வம்சத்தின் ஊசர்க்காபு, நியுசெரே காலத்தில் கட்டப்பட்ட வளாகங்களில் இரண்டு மட்டுமே இன்று இருக்கின்றன. [6] ஐந்தாவது வம்ச கோவில்கள் வழக்கமாக மூன்று கூறுகளைக் கொண்டிருந்தன. அதிக உயரத்தில் ஒரு பிரதான கோயில் கட்டிடம், ஒரு சிறிய நுழைவாயில் கட்டிடத்திலிருந்து ஒரு யுரமான பாதை மூலம் அணுகப்பட்டது. [7] 2006 ஆம் ஆண்டில், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கெய்ரோவில் ஒரு சந்தையின் அடியில் இடிபாடுகளைக் கண்டறிந்தனர். இது இரண்டாம் ராமேசஸால் கட்டப்பட்ட மிகப்பெரிய கோயிலாக இருக்கலாம். [8] [9]

இந்தியத் துணைக் கண்டம்[தொகு]

கொனார்க் சூரியக் கோயிலின் அகலப் பரப்புக் காட்சி


இந்தியத் துணைக் கண்டத்தின் சூரியக் கோயில்கள் இந்து தெய்வமான சூர்ய தேவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டன. [10] ஒடிசாவின் கொனார்க்கிலுள்ள கொனர்க் சூரியக் கோயிலும் (கருப்பு பகோடா என்றும் அழைக்கப்படுகிறது). இக்கோவில் சூரியனுடைய தேர் வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது. [11] [12]

குசராத்த்தின் மொதெராவிலுள்ள சூரியன் கோயிலும் அவற்றில் மிக முக்கியமானது. இவைகள் பொ.ச. 1026-1027இல் கட்டப்பட்டன. படையெடுப்பால் அழிக்கப்பட்ட நிலையில் இவை இரண்டும் இப்போது இடிபாடுகளாக இருக்கின்றன.

கொனார்க் சூரியக் கோயில் கீழைக் கங்க வம்சத்தைச் சேர்ந்த முதலாம் நரசிம்மதேவன் [13] [14] என்பவரால் 1250 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. இந்து சமய மரபுகளில் ஒன்றான சௌரவ மதத்தில் சூரிய பகவான்தான் முக்கியக் கடவுள். அதன்பேரிலேயே சூரியபகவானுக்காக இந்த கோவில் எழுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது. இங்குள்ள சிலைகள் மிகவும் பிரசித்தம். அத்தனையும் நுண்ணிய வேலைப்பாடு கொண்டவை. கடவுள்கள், நடனமாடும் மங்கையர், குதிரைகள், யானைகள், சிங்கங்கள் சிற்பங்களாய் அமைக்கப்பட்டுலுள்ளன.

Temple ruins as seen from the entrance to the main temple structure
மார்த்தாண்ட சூரியன் கோயில் முதன்மைப் பகுதிக்குச் செல்லும் நுழைவாயிலிலிருந்து காணும் இடிபாடுகளின் தோற்றம்

குசராத்து சூரியக் கோயில், சௌராட்டிர தேசத்தை ஆண்ட சோலாங்கி வமிச மன்னர் முதலாம் பீமதேவனின் மனைவியால், மொதெரா நகரத்தில், கி. பி., 1026 இல் கட்டி சூரிய பகவனுக்கு அர்பணிக்கப்பட்டது. அழகிய சிற்பங்களும் கலை நுணுக்கங்களுடன் கூடிய இப்பெரிய சூரியன் கோயில் தற்போது இந்தியத் தொல்லியல் துறை வசம் உள்ளது.

குசராத்து சூரியக் கோயிலிலுள்ள சூரிய குளத்தின் அகலப்பரப்பு காட்சி

இந்தியத் துணைக்கண்டத்திலுள்ள மற்ற சூரிய கோயில்கள் பின்வருமாறு:

இன்கா பேரரசு[தொகு]

மேலே சாண்டோ டொமிங்கோவின் கான்வென்ட்டுடன் குரிகாஞ்சா

பின்வருபவை இன்டியின் கொலம்பியாவுக்கு முந்தைய கோயில்கள் (இன்கா கடவுள் சன்):

 • பெருவின் குசுக்கோவில் உள்ள குரிகாஞ்சா இன்கா பேரரசின் மிக முக்கியமான கோயிலாக இருந்தது. [25]
 • பெருவின் ககுசுக்கோவிலுள்ள முயுக் மார்கா.
 • பெருவின் வில்காசுவாமனில் வில்காவமன் .

மற்றவைகள்[தொகு]

இதைத் தவிர மேலும் பல நாடுகளில் சூரியனுக்கு கோயில் தளங்கள் உள்ளன:

 • தெற்கு மெக்ஸிகோவில் உள்ள பாலென்கேயின் மாயன் தளத்தில் உள்ள கிராஸ் வளாகத்தில் கோவிலில் உள்ள சூரியன் கோயில், பொ.ச. 200 முதல் 900 வரை கட்டப்பட்டது. [26] [27]
 • குவாத்தமாலாவின் எல் ஸோட்ஸின் மாயன் தளத்தில் உள்ள ஐந்தாம் நூற்றாண்டில் கைவிடப்பட்ட சூரியன் கோயில். [28]
 • யப்பானில் பல ஷின்டோ ஆலயங்கள் உள்ளன. இதில் சூரிய தெய்வமான அமதெரசுவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது:
 • ஈஸ் பெரிய கோவில், ஈஸ் மாகாணம் [29] [30]
 • காமானுராவில் பொ.ச.710இல் நிறுவப்பட்ட அமனாவா ஷின்மி ஆலயம்
 • மியாசாக்கி மாகாணத்தின் தகாச்சிஹோவில் அமனோவாடோ-ஜின்ஜா. [31]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Sun Temple, Konârak". UNESCO. பார்க்கப்பட்ட நாள் 9 January 2014.
 2. "Temple of Heaven: an Imperial Sacrificial Altar in Beijing". World Heritage List. UNESCO. பார்க்கப்பட்ட நாள் 13 January 2014.
 3. "Traditional life in China: Ruling". Victoria and Albert Museum. Archived from the original on 13 January 2014. பார்க்கப்பட்ட நாள் 13 January 2014.
 4. "A man walks across a frozen pond at Ritan Park". Times of India. 27 January 2012. பார்க்கப்பட்ட நாள் 13 January 2014.
 5. "Pharaonic monuments in Aswan". State Information Service, Egypt. பார்க்கப்பட்ட நாள் 9 January 2014.
 6. Texts from the Pyramid Age. Society of Biblical Literature. https://books.google.com/books?id=qeApebusL_0C. 
 7. Encyclopedia of the Archaeology of Ancient Egypt. Routledge. https://books.google.com/books?id=XNdgScxtirYC&pg=PA86. 
 8. Stefan Lovgren (1 March 2006). "Giant Ancient Egyptian Sun Temple Discovered in Cairo". National Geographic News. பார்க்கப்பட்ட நாள் 11 January 2014.
 9. "Ancient sun temple uncovered in Cairo". NBC News. 28 February 2006. பார்க்கப்பட்ட நாள் 11 January 2014.
 10. A. Bhatnagar; William Livingston; W. C. Livingston (2005). Fundamentals of Solar Astronomy. World Scientific Publishing. பக். 28. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9789812567871. https://books.google.com/books?id=fe7XDuxCYjcC&pg=PA28. 
 11. Robert Ebersole (1957). Black Pagoda. University of Florida Press. பக். 7. http://ufdc.ufl.edu/AA00010118/00001/23x. 
 12. "Official website". Tourism Department, Government of Odisha. பார்க்கப்பட்ட நாள் 9 January 2014.
 13. Robert Ebersole (1957). Black Pagoda. University of Florida Press. பக். 34. http://ufdc.ufl.edu/AA00010118/00001/50j. 
 14. "Fall of Konark". Tourism Department, Government of Odisha. Archived from the original on 19 ஜூன் 2009. பார்க்கப்பட்ட நாள் 13 January 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
 15. "District Anantnag". Anantnag District Administration. Archived from the original on 22 December 2013. பார்க்கப்பட்ட நாள் 9 January 2014.
 16. "A lesser-known sun temple at Katarmal". http://www.tribuneindia.com/2002/20020817/windows/site.htm. 
 17. "Katarmal Sun temple, Almora". Nainital Tourism. பார்க்கப்பட்ட நாள் 9 July 2013.
 18. "Modhera sun temple". Gujarat Tourism. Archived from the original on 28 September 2011. பார்க்கப்பட்ட நாள் 9 January 2014.
 19. "A visit to the Sun Temple" இம் மூலத்தில் இருந்து 9 ஜனவரி 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140109153404/http://www.hindu.com/mp/2009/02/28/stories/2009022850370400.htm. . The Hindu. 28 February 2009. Archived from the original பரணிடப்பட்டது 2014-01-09 at the வந்தவழி இயந்திரம் on 9 January 2014. Retrieved 9 January 2014.
 20. "Sun rays touch Arasavalli deity". The Hindu. 10 March 2011. பார்க்கப்பட்ட நாள் 9 January 2013.
 21. "A Little Known Sun Temple At Palia" (PDF). Government of Odisha. April 2006. Archived from the original (PDF) on 9 ஜனவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 9 January 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
 22. Journal of Indian history: golden jubilee volume. T. K. Ravindran, University of Kerala. Dept. of History. https://books.google.com/books?id=GPcgAAAAMAAJ&q=Aditya. 
 23. A glossary of the tribes and castes of the Punjab and North-West ..., Volume 1 By H.A. Rose. https://books.google.com/books?id=-aw3hRAX_DgC&pg=PA489. 
 24. Archaeology in India. Archaeological Survey of India. https://books.google.com/books?id=VR-2AAAAIAAJ&q=+ghumli. 
 25. Carolyn Dean (2010). A Culture of Stone: Inka Perspectives on Rock. Duke University Press. பக். 42. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0822393177. https://books.google.com/books?id=PEDybh23UdUC&pg=PA42. 
 26. "Non-Western — Temple of the Sun". California State University, Los Angeles. பார்க்கப்பட்ட நாள் 23 January 2014.
 27. "Temple of the Sun". Unaahil B'aak:The Temples of Palenque. Wesleyan University. Archived from the original on 16 ஜனவரி 2016. பார்க்கப்பட்ட நாள் 23 January 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Unknown parameter |= ignored (help)
 28. Ker Than (20 July 2012). ""Dramatic" New Maya Temple Found, Covered With Giant Faces". National Geographic News. பார்க்கப்பட்ட நாள் 23 January 2014.
 29. Brian Bocking (2004), The meanings of Shinto (PDF), School of Oriental and African Studies, University of London, p. 267, பார்க்கப்பட்ட நாள் 13 January 2014
 30. "Sengū Renewal of the Ise Shrine in 2013: Tradition and Rituals". School of Oriental and African Studies, University of London. Archived from the original on 13 ஜனவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 13 January 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
 31. "Amano-iwato Shrine". Japan National Tourism Organization. பார்க்கப்பட்ட நாள் 13 January 2014.
 32. J. McKim Malville (1993). Prehistoric Astronomy in the Southwest. Johnson Books. பக். 91. https://archive.org/details/prehistoricastro0000malv_y8i5. 
 33. P. Charbonneau; O.R. White; T.J. Bogdan. "Solar Astronomy in the Prehistoric Southwest". High Altitude Observatory, University Corporation for Atmospheric Research. Archived from the original on 20 செப்டம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 23 January 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Unknown parameter |= ignored (help)
 34. "Sun Temple". U.S. National Park Service. பார்க்கப்பட்ட நாள் 11 January 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூரியக்_கோயில்கள்&oldid=3736478" இலிருந்து மீள்விக்கப்பட்டது