கோல்பாரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கோல்பாரா
நகரம்
கோல்பாரா ஆற்றில் படகுப் போக்குவரத்து
கோல்பாரா ஆற்றில் படகுப் போக்குவரத்து
கோல்பாரா is located in Assam
கோல்பாரா
கோல்பாரா
இந்தியாவின் அசாம் மாநிலத்தில் கோல்பாரா நகரத்தின் அமைவிடம்
கோல்பாரா is located in இந்தியா
கோல்பாரா
கோல்பாரா
கோல்பாரா (இந்தியா)
ஆள்கூறுகள்: 26°10′N 90°37′E / 26.17°N 90.62°E / 26.17; 90.62ஆள்கூறுகள்: 26°10′N 90°37′E / 26.17°N 90.62°E / 26.17; 90.62
நாடு இந்தியா
மாநிலம்அசாம்
மாவட்டம்கோல்பாரா
அரசு
 • நிர்வாகம்கோல்பாரா நகராட்சி மன்றம்
ஏற்றம்35 m (115 ft)
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்48,911
மொழி
 • அலுவல்அசாமி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்783123-783101[1]
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுIN-AS
வாகனப் பதிவுAS-18
இணையதளம்goalpara.gov.in

கோல்பாரா (Goalpara) இந்தியாவின் அசாம் மாநிலத்தில் உள்ள கோல்பாரா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், நகராட்சியும் ஆகும். இது அசாம் மாநிலத் தலைநகரான கவுகாத்திக்கு மேற்கே 134 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள்து.

புவியியல்[தொகு]

கோல்பாரா நகரம் பிரம்மபுத்திரா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.[2]இது கடல்மட்டத்திலிருந்து 114 அடி உயரத்தில் உள்ளது. கோல்பாரா நகரத்தைச் சுற்றிலும் ஹலுகண்டா மலைகள் உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 19 வார்டுகளும், 11,617 வீடுகளும் கொண்ட கோல்பாரா நகரத்தின் மொத்த மக்கள்தொகை 53,430 ஆகும். அதில் 26,970 ஆண்கள் மற்றும் 26,460 பெண்கள் உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 6125 (11.46%) ஆகவுள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 981 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 83.77% ஆகவுள்ளது. மக்கள்தொகையில் இந்துக்கள் 44.99%, முஸ்லீம்கள் 53.65%, கிறித்தவர்கள் 0.83% மற்றும் பிறர் 0.53% ஆகவுள்ளனர்.[3] இந்நகரத்தில் வங்காளதேச முஸ்லீம்கள் மக்கள்தொகை பெரும்பான்மையாக உள்ளது. [4]

தொடருந்து நிலையம்[தொகு]

கவுகாத்தி-கொல்கத்தா-தில்லி-சென்னை-மும்பை-பெங்களூரு-திருவனந்தபுரம் செல்லும் தொடருந்துகள், கோல்பாரா தொடருந்து நிலையம் வழியாகச் செல்கிறது. [5][6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Pin Code of Goalpara". citypincode.in. பார்த்த நாள் 2014-05-18.
  2. Falling Rain Genomics, Inc - Goalpara
  3. Goalpara Population Census 2011
  4. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. மூல முகவரியிலிருந்து 2004-06-16 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2008-11-01.
  5. Goalpara Railway Station
  6. GOALPARA TOWN GLPT Railway Station Trains Schedule
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோல்பாரா&oldid=2954319" இருந்து மீள்விக்கப்பட்டது