உத்தர காண்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்


சீதையை வால்மீகி ஆசிரமத்தில் சேர்த்தல், லவன்-குசர்கள் பிறப்பு மற்றும் வால்மீகி லவ-குசர்களுக்கு கல்வி மற்றும் போர் பயிற்சி கற்றுத் தருதல் மற்றும் இராமகாதையை எடுத்துரைத்தல்

உத்தர காண்டம் (Uttara Kanda) வால்மீகி எழுதிய இராமாயணம், யுத்த காண்டத்துடன் நிறைவுகிறது. பின்னர் அயோத்தியில் நடந்த இராமர்-சீதை, லவன்-குசன் ஆகியவர்களின் வரலாற்றுச் செய்திகளை உத்தர காண்டம் கூறுகிறது. இக்கண்டத்தில் வதந்தியான பொய்ச் செய்தியை நம்பி, கர்ப்பிணியான சீதையை, இராமர் காட்டிற்கு அனுப்புவதும், காட்டில் சீதை வால்மீகி முனிவரின் ஆசிரமத்தில் அடைக்கலமாகத் தங்குவதும், ஆசிரமத்தில் சீதை லவன்-குசன் எனும் இரட்டைக் குழந்தைகளைப் பெறுவதும், வால்மீகி முனிவர் லவ-குசர்களுக்கு, போர்க்கலையையும், மேலும் தான் இயற்றிய இராமாயணத்தையும் இலவ-குசர்களுக்கு கற்பித்தலும் கூறப்படுகிறது.

அசுவமேத யாகம்[தொகு]

சீதையின் உருவ பொம்மையைத் தனருகில் வைத்துக் கொண்டு, இராமர் அசுவமேத யாகம் செய்வதும், பல நாடுகளை சுற்றி வர அனுப்பப்பட்ட வேள்விக் குதிரையை, இலவ-குசர்கள் கட்டி வைத்தலும், வேள்விக் குதிரைகளை மீட்க வந்த சத்துருக்கனன், பரதன், இலக்குமணன் முதலானோர்களை இலவ-குசர்கள் போரில் வெல்வதும், இறுதியில் இராமரே நேரில் வந்து, இலவ-குசர்களை சந்தித்து வேள்விக் குதிரையுடன், லவ-குசர்களையும் அயோத்திக்கு அழைத்துச் செல்வதும், சீதை பிளவுண்ட பூமியில் இறங்கி இறத்தலும், இராமர் ஆயிரம் ஆண்டுகள் அயோத்தியை ஆண்ட பின்னர், இராமன் தனது நாட்டின் பகுதிகளை இலவ- குசர்களுக்குப் பிரித்துக் கொடுத்தல் போன்ற விவரங்கள் உத்தர காண்டத்தில் உள்ளது. இராமர் வைகுந்தம் செல்லும் நேரம் நெருங்கி விட்டதை அறிந்து, தனது உடன்பிறப்புகளுடன் பூவுலகை விட்டு வைகுந்தம் ஏகும் வரை உத்தர காண்டத்தில் கூறப்படுகிறது.

இராமாயணச் சொற்பொழிவுகளில்[தொகு]

இராமாயணக் கதாகாலட்சேபங்களிலும், [1]உபன்யாசங்களிலும் [2]உபன்யாசங்களிலும் இராமர் பட்டாபிசேகத்துடன் சொற்பொழிவை நிறைவு செய்வர். துன்பியலாக முடியும் உத்தர காண்டப் பகுதியை எடுத்துரைப்பதில்லை என்பது மரபாக உள்ளது.

பிரபல கலாசாரத்தில்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உத்தர_காண்டம்&oldid=2293096" இருந்து மீள்விக்கப்பட்டது