வானரம்

வானரர்கள், வனத்தில் வாழ்வதால் வானரர்கள் என்பர்.[1][2] இராமாயணத்தில் அனுமன், சுக்கிரீவன், வாலி போன்றாேர் வானர இனத்தைச் சார்ந்தவர்கள். இராவண வதத்திற்காக மகாவிஷ்ணு ராமராக அவதரிப்பார் என்று தீர்மானமானவுடன் அவரோடு சேர்ந்து அவருக்கு உதவியாக இருப்பதற்காக, தேவர்கள் வானரக் கூட்டமாக பூவுலகில் பிறவி எடுக்கும் என்பதும் முடிவாகியது. அதனால்தான் ராமாயணத்தில் வரும் வானரங்கள், மனித உருவம் எடுத்துக் கொள்ள கூடிய சக்தி படைத்தவையாக இருந்தன.