மல்ல அரசு
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |

பண்டைய இதிகாச கால நாடுகள்
மல்ல நாடு (Malla Kingdom) பரத கண்டத்தின் வடக்கில் கோசல நாட்டிற்கும், விதேகத்திற்கும் இடையே அமைந்திருந்தது. மல்ல நாடு மகாஜனபத நாடுகளில் ஒன்றாக விளங்கியது. தருமரின் இராசசூய வேள்விக்காக நிதி திரட்ட, பீமன் பரத கண்டத்தின் கிழக்கு நாடுகளை வெல்லச் சென்ற போது, மல்ல நாட்டவர்களையும் வென்று திறை பெற்றதாக மகாபாரதம் கூறுகிறது.
மகாபாரதக் குறிப்புகள்[தொகு]
குரு நாட்டின் அன்மை நாடுகள்[தொகு]
மகாபாரதம், விராட பருவம், அத்தியாயம் 1-இல், குரு நாட்டின் அண்டைய நாடுகளைப் பற்றி அருச்சுனன் கூறுகையில் மல்ல நாட்டுடன், பாஞ்சாலம், சூரசேனம், சேதி நாடு, மத்சய நாடு, தசார்ன நாடு, சௌராட்டிர நாடு, சால்வ நாடு, அவந்தி நாடு, குந்தி நாடுகளையும் குறிப்பிடுகிறார்.