வித்தியாதரர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வித்தியாதர இணையர்கள்

வித்தியாதரர்கள் (Vidyadhara) (சமஸ்கிருதம் Vidyādhara, என்பதற்கு பெரும் அறிவு உடையவர்கள் எனப் பொருள். இந்து சமயத்தில் உயர் ஆன்மாக்களான வித்தியாதர்ர்கள் மந்திர ஜால விந்தைகளை நன்கு கற்றறிந்தவரகள்.[1] கயிலை மலை சிவனின் உதவியாளாக வித்தியாதரர்கள் பணிவிடை செய்கின்றனர்.[2] வித்தியாதரர்களை உபதேவதைகள் ஆவார்.[3] பௌத்த சமய நூல்களில் வித்தியாதரகளைப் பற்றிய குறிப்புகள் உள்ளது.[4]

புராணம் மற்றும் பிற நூல்கள்[தொகு]

வானில் பறக்கும் வித்தியாதரர்

அக்னி புராணத்தில், ஆண் - பெண் வித்தியாதரர்கள் மலர் மாலகள் அணிந்து கொண்டு, அரம்பையர்கள், யட்சர்கள், யட்சினிகள், கந்தர்வர்கள், கிண்ணரர்கள் போன்ற உயர் ஆன்மா கொண்ட தேவதைகளுடன் வானுலகில் சஞ்சரிப்பர்கள் எனக் கூறுகிறது.[3]

பாகவத புராணம் சித்ரகேது என்பவன் வித்தியாதர்களின் அரசன் எனக்கூறுகிறது.[5]

சமணத்தில்[தொகு]

சமண நூல்களில் வித்தியாதர்ர்கள், அசுரர்கள். வானரர்கள், போன்று பறத்தல் போன்ற மாய சக்தி ஆற்றல் கொண்டவர்கள் என்றும், வித்தியாதர இனத்தின் இரண்டு குலத்தில் பிறந்தவர்களே இராவணன் மற்றும் வாலி என்றும் கூறுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வித்தியாதரர்கள்&oldid=2577427" இருந்து மீள்விக்கப்பட்டது