கிராதர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கிராதர்கள் ரிக் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மலைவாழ் இனத்தவர் ஆவர்.

ரிக் வேதம் தரும் செய்திகள்[தொகு]

ஒரு காலத்தில் இமயமலை முழுவதும் மலைக்கோட்டைகள் கட்டி அதில் நகரங்கள் அமைத்து, கிராத இனத்தவர்கள் வாழ்ந்தனர். இவர்களின் நிறம் மற்றும் முகச்சாடை மங்கோலிய இன மக்களின் சாயலுடன் ஒத்திருக்கும். இவர்கள் ரிக்வேத கால ஆரியர்களின் முதன்மையான பகைவர்கள்.

கிராதர்களின் வாழ்விடம்[தொகு]

சமஸ்கிருத மொழியில் ‘கிராதர்’ எனப்படுவோரை தற்கால அறிஞர்கள் மோன்-க்மேர் என்பர். கிழக்கு நோபாளத்தை இன்றும் கிராத இராச்சியம் என்றே அழைக்கின்றனர். கிராதர்கள் நேபாளம், திபெத் மற்றும் சீனா இனங்களுடன் தொடர்பு உள்ளவர்களாகக் கருதப்படுகிறார்கள்

ஆரியர்களின் பகைவர்கள்[தொகு]

இமயமலைவாசிகளான கிராதர்களின் மலைக்கோட்டைகளை, புரங்கள் என்றும் நகரங்களை புரி என்றும் அழைப்பர். இந்த புரங்களையும், புரிகளைகளையும் ஆரியர்கள் கைப்பற்றி அழித்த சான்றுகள் ரிக் வேதத்தில் அதிகமான செய்யுட்களில் விவரிக்கப்படுகிறது. ரிக்வேத கால முனிவர்களான பாரத்துவாசர், வசிட்டர், விசுவாமித்திரர் போன்றவர்கள் கிராதர்களை போரில் வெல்ல ஆரிய அரசர்களுக்கு அனைத்து வகைகளிலும் உதவி புரிந்தனர். மேலும் கிராதர்களை போரில் வெல்ல ஆரிய அரசர்கள் ரிக்வேத கால கடவுளர்களிடம் வேண்டிக் கொண்டனர். ஆரிய அரசர்களால் வெற்றி கொள்ள முடியாத, நூறு கற்கோட்டைகளுடைய நகரங்கள் கொண்ட சம்பரான் என்ற கிராதர் இன அரசனை, புரு வம்சத்து திவோதசு என்ற ஆரிய அரசன் அழித்தான். திவோதசு, புரு வம்சத்தை சார்ந்த கிளை இனமான பரதன் வம்சத்தை சார்ந்தவன். திவோதசு ஆண்ட பகுதி மேற்கில் ராவி ஆறும், கிழக்கில் யமுனை ஆறு வரை ஆகும்.

இதனையும் காண்க[தொகு]

ஆதார நூற்கள்[தொகு]

  • ரிக்வேத கால ஆரியர்கள், ஆசிரியர், ராகுல் சாங்கிருத்யாயன், அலைகள் வெளீட்டகம், சென்னை
  • ரிக்வேதம், மூன்று தொகுதிகள், அலைகள் வெளீட்டகம், சென்னை
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிராதர்கள்&oldid=3096940" இருந்து மீள்விக்கப்பட்டது