சிங்கள நாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

சிங்கள நாடு (Sinhala Kingdom) தற்கால சிங்கள மொழி பேசும் ஸ்ரீலங்காவின் தெற்கு, தென்கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளை கொண்டிருந்தது. சிங்கள நாடு கி மு 543-இல் நிறுவப்பட்டது. அனுராதபுரம், உருகுணை, உபதிஸ்ஸ நுவாரா, பாண்டுதேவ, தம்பதெனிய, பொலன்னறுவை இராச்சியம், தம்பதெனிய, கம்பளை, கோட்டை, சீதாவக்கை மற்றும் கண்டி அரச மரபினர் சிங்கள நாட்டை ஆண்டனர். [1]

சிங்கள அரச மரபுகள்[தொகு]

சிங்கள நாட்டை ஆண்ட அரச மரபுகள்;

மகாபாரதக் குறிப்புகள்[தொகு]

சிங்களக் குடிகளின் தோற்றம்[தொகு]

வசிட்டர் வளர்த்த காமதேனு பசுவை, விசுவாமித்திரரின் படைவீர்ர்கள் இழுத்து கவர்ந்து செல்லும் போது, காமதேனுவின் வால் பகுதியிலிருந்து, பல்லவ வீரர்களும், பால் சுரக்கும் மடிப்பகுதியிலிருந்து திராவிடர்களும், சகர்களும், வயிற்று பகுதியிலிருந்து யவனர்களும், சாணத்திலிருந்து சவரர்களும், சிறுநீரிலிருந்து காஞ்சி வீர்ர்களும், வாயிலிருந்து பௌண்டரர்களும்; கிராதர்களும், சிங்களவர்களும், காசர்களும், மிலேச்ச வீர்ர்கள் தோன்றி விசுவாமித்திரரின் படை வீர்ர்களை கொன்று குவித்தனர் எனக் கூறுகிறது.

பண்டைய சமஸ்கிருத இலக்கியங்களில் பசுவானது பூமிக்கு நிகராக, புனிதமாகப் போற்றப்பட்டுள்ளது. இப்புராதன நிகழ்வு பண்டைய பரத கண்டத்து பழங்குடிகள் ஒன்று சேர்ந்து ஒரு கறவைப் பசுவை காப்பதற்கு, வசிட்ட முனிவருக்கு எவ்வாறு துணை நின்றார்கள் என்பதை எடுத்துக் கூறுகிறது.(மகாபாரதம், ஆதி பருவம், அத்தியாயம் 177)

தருமரின் இராசசூய வேள்வியில்[தொகு]

பாண்டவர்கள், இந்திரப்பிரஸ்தம் எனும் நகரை நிறுவிய பின்னர் தருமன் நடத்திய இராசசூய வேள்வியில் கலந்து கொண்ட பரத கண்டத்து மன்னர்களின் பட்டியலில் சிங்கள நாட்டு அரசனையும் குறிப்பிட்டுள்ளது. (மகாபாரதம், சபா பருவம், அத்தியாயம் 33)

இராசசூய வேள்வி முடிந்த பின்னர் பரத கண்டத்து மன்னர்கள், தரும ராசாவுக்கு வழங்கிய பரிசுப் பொருட்கள் குறித்த பட்டியலில், சிங்கள நாட்டு மன்னன் பரிசாக வழங்கிய முத்துகளையும் மற்றும் யாணைகளையும் குறித்த விவரம் உள்ளது.

குருச்சேத்திரப் போரில் சிங்களவர்கள்[தொகு]

குருச்சேத்திரப் போரில் கௌரவர் அணியின் படைத்தலைவர் துரோணர் வகுத்த கருட வடிவ வியூகத்தின் கழுத்துப் பகுதியில், சிங்களவர்கள், கலிங்கர்கள், பரத கண்டத்தின் கிழக்கத்திய சூத்திரர்கள், ஆபிரர்கள், சகர்கள், யவனர்கள், காம்போஜர்கள், சூரசேனர்கள், தராதரர்கள், மத்திரர்கள் மற்றும் கேகயர்கள், ஆயிரக்கணக்கான யாணைப்படைகளுடனும், தேர்ப்படைகளுடனும், தரைப்படை வீரர்களுடனும் அணிவகுத்து நின்று இருந்தனர் எனக் கூறுகிறது. (மகாபாரதம், துரோண பருவம், அத்தியாயம் 20)

மேற்கோள்கள்[தொகு]

  1. [1]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிங்கள_நாடு&oldid=2282253" இருந்து மீள்விக்கப்பட்டது