உள்ளடக்கத்துக்குச் செல்

கோப நாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோபர்கள் நாடு அல்லது கோப இராச்சியம் (Gopa Rashtra or Gopa kingdom) பண்டைய சமசுகிருத இலக்கியங்களில் பரத கண்டத்தின் மத்திய மற்றும் மேற்குப் பகுதிகளை, விருஷ்ணி குலத்தில் பிறந்த ஸ்ரீகிருஷ்ணரின் முன்னோர்கள் ஆண்டதாக கூறப்படுகிறது.

கல்வெட்டுக் குறிப்புகளின் கோபா நாடு, சாளுக்கியப் பேரரசில் தற்கால மகாராட்டிரம் மற்றும் கோவா பகுதிகளை உள்ளடக்கியதாக இருந்தது. [1] குப்தப் பேரரசர் ஸ்கந்தகுப்தர் மற்றும் சாளுக்கியர் காலத்திய ஜூனாகத் கல்வெட்டுக் குறிப்புகளில், கோப நாடு, ஆடு, மாடுகள் மேய்க்கும் யாதவர்கள் வாழ்ந்த பகுதி என ஆவணப்படுத்தியுள்ளது.[2][3]

கௌடில்யர், கோப இராச்சிய மக்கள் வேளாண்மை, கால் நடைகளை மேய்த்தல் மற்றும் ஆயுதம் தாங்கி போர் புரியும் ஆற்றல் படைத்தவர்கள் என தனது நூலில் குறித்துள்ளார். [2] மகாபாரதத்தின் பீஷ்ம பருவத்தின், அத்தியாயம் 9-இல் குறித்த பாண்டு இராச்சியம், கோப இராச்சியம், மல்ல இராச்சியம், அஸ்மகம் ஆகியவைகள் இணைந்து தற்கால மகாராட்டிரம் உருவாகியுள்ளது.[4] கோவா எனும் சொல் ஆடு, மாடுகள் மேய்க்கும் இனத்தவர்கள் வாழ்ந்த கோப இராச்சியத்திலிருந்து உருவானது.[5]

வரலாறு

[தொகு]

பண்டைய பரத கண்டத்தின் கோப இராச்சியம் குறித்து மகாபாரத இதிகாசத்தில் கூறப்பட்டுள்ளது. [6]

முன்னர் கோப இராஷ்டிரத்தின் பகுதியாக கோவா இருந்தது. கோப இராஷ்டிரம் எனும் பெயரே (தற்கால கோவா பகுதி) கோமாந்த், கோமாந்தகம், கோபராஷ்டிரம் என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.[7]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Mahajan, Malati (1989). A cultural history of Maharashtra and Goa: from place name inscriptions. Sundeep Prakashan. p. 79.
  2. 2.0 2.1 Shastri, Ajay Mitra (1992). The Age of the Vākāṭakas (in ஆங்கிலம்). Harman Publishing House. p. 69. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788185151519. பார்க்கப்பட்ட நாள் 31 March 2016.
  3. India Today International (in ஆங்கிலம்). Living Media India Limited. பார்க்கப்பட்ட நாள் 31 March 2016.
  4. Vaidya, Chintāmana Vināyaka (1921). History of Mediæval Hindu India: (being a History of India from 600 to 1200 A.D.) ... (in ஆங்கிலம்). Oriental Book Supplying Agency. p. 259. பார்க்கப்பட்ட நாள் 31 March 2016.
  5. Anthropological Survey of India (1995). The Scheduled Castes (in ஆங்கிலம்). Oxford University Press. p. xxiv. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788171547609. பார்க்கப்பட்ட நாள் 31 March 2016.
  6. Debroy, Bibek (2015). The Mahabharata (in ஆங்கிலம்). Penguin UK. pp. Chapter 870(10). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788184756814. பார்க்கப்பட்ட நாள் 18 June 2016.
  7. Souza, edited by Teotonio R. de (1990). Goa through the ages (in ஆங்கிலம்). New Delhi: Concept Pub. Co. p. 4. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788170222590. பார்க்கப்பட்ட நாள் 18 June 2016. {{cite book}}: |first1= has generic name (help)
  • Kisari Mohan Ganguli, The Mahabharata of Krishna-Dwaipayana Vyasa Translated into English Prose, 1883-1896.

வெளி இணைப்புகள்

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=கோப_நாடு&oldid=2978738" இலிருந்து மீள்விக்கப்பட்டது