வீடுமர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கங்கை பீஷ்மரை சந்தனுவிடம் கையளிக்கும் காட்சி.

பீஷ்மர் மகாபாரதத்தின் தலையாய கதைமாந்தர்களில் ஒருவர் ஆவர். பீஷ்மர் சந்தனுவிற்கும் கங்கைக்கும் பிறந்தவர். சந்தனு துஷ்யந்தனுக்கும், பரதனுக்கும் அடுத்த அரசன் ஆவார். பீஷ்மர் அரசியலை தேவர்களின் குருவான பிரகஸ்பதியிடம் இருந்தும், வேதங்களை வசிஷ்ட முனிவரிடமிருந்தும், வில்வித்தையை பரசுராமரிடம் இருந்தும் கற்றுக்கொண்டார். தன் தந்தை, சத்தியவதி பால் கொண்ட விருப்பினை நனவாக்க, அரசாட்சியை துறந்தது மட்டுமன்றி, மணவாழ்க்கையையும் துறந்தார். இதனால் இவர் பெற்றதே இச்சா மரணம் - தான் விரும்பும் நாளில், விரும்பும் நேரத்தில் மட்டும் மரணம் என்ற வரமாகும். மகாபாரதப் போருக்குப் பின்னர் தருமனுக்கு நல்லுபதேசங்களையும், அதனைத் தொடர்ந்து விஷ்ணு சஹஸ்ரநாமம் எனும் பக்தி நூலையும் தந்துள்ளார்.

தேவ விரதன்[தொகு]

எட்டு வசுக்கள் வேத காலக் கடவுளர்கள். இயற்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் பிரதிபலிப்பவர்கள். வசிட்டரின் பசுவைத் திருடிய பாவத்துக்காக, அவர்கள் மனிதப் பிறவி எடுக்க வேண்டுமெனவும் அந்த எட்டுப் பேரின் தலைவனான பிரபாசன், தன் மனைவியின் ஆசையை நிறைவேற்றவே பசுக்களை திருடியதால் அதிககாலம் பூமியில் வாழ்வான் என்று வசிட்டர் சாபமிட்டார். என்வரும் தங்கள் தவறுக்காக மன்னிப்பு வேண்டினர். வசிட்டரும் அவர்களை மன்னித்து எட்டு வசுக்களில் ஏழு பேர் பிறந்த உடன் இறந்துவிடுவார் என்றும் பிரபாசன் மட்டும் அதிக காலம் வாழ்ந்து தர்மத்தினை காப்பான் என்றும் மேலும் அவன் பூமியில் வாழும் வரை அவனை வெல்பவர் எவரும் இருக்கமாட்டார் எனவும் தனது சாபத்தினை மாற்றினார். அந்த பிரபாசனே சந்திர வம்சத்தில் சந்தனு மற்றும் கங்கை தம்பதியருக்கு எட்டாவது மகனான தேவ விரதன் பின்னாளில் கங்கையின் மைந்தனென்று அழைக்கப் பட்ட பீஷ்மர் ஆவார். பீஷ்மரை வெல்ல அகிலத்தில் எவரும் இல்லாத பொழுதும், தன் தந்தைக்கு வழங்கிய வாக்குறுதியின்படி அஸ்தினாபுரத்தினை காக்க கௌரவர் பக்கம் நின்று யுத்தம்புரிந்தார், மேலும் தர்மம் பாண்டவர் பக்கம் இருந்ததால் தன் உயிரையும் விட்டுக்கொடுத்து, தர்மத்தை காத்தார்.

அம்பையின் சபதம்[தொகு]

தம்பி விசித்திரவீரியனுக்காக காசி மன்னனின் மூன்று அரசகுமாரிகளை, சுயம்வரத்தின் போது கவர்ந்து வந்தார். அப்போது அம்பை மட்டும் சால்வன் என்ற அரசகுமாரனை விரும்பியதையடுத்து, அவளை சால்வனிடம் அனுப்பிவைத்தார். சால்வன் அவளை ஏற்க மறுத்துவிட்டான். மீண்டும் அம்பை, பீஷ்மரிடம் வந்து தன்னை ஏற்கவேண்டினாள். பீஷ்மரோ தான் செய்துள்ள சபதத்தைக் கூறி ஏற்க மறுத்தார். "நான் எந்தப் பெண்ணுடனும் இருக்க மாட்டேன் என சபதம் மேற்கொண்டு இருக்கிறேன், சால்வனோ, விசித்ரவீர்யனோ உன்னை ஏற்காததால் நீ எங்கு போக விருப்பமோ அங்கே போகலாம்" என்று கூறிவிட்டார். இந்த அவமானத்திற்குப் பழி வாங்க ஒரு வீரனை உலகம் முழுக்க சுற்றித் தேடினாள், எல்லா சத்திரியர்களும் பீஷ்மருக்காக பயந்தார்கள். அவள் இறுதியில் பரசுராமனின் உதவியை நாடினாள், அவர் பீஷ்மரின் குரு. அம்பாவின் நிலையை அறிந்து அதிர்ந்துபோன பரசுராமர் தனது சீடருடன் சண்டையிட்டார், சண்டை பல நாட்கள், மாதங்கள் என நீடித்தது. இறுதியில் பரசுராமர் பீஷ்மரை யாராலும் தோற்கடிக்க முடியாது, அவராக மரணம் அடைவதைத் தவிர அவரை யாராலும் கொல்லவும் முடியாது சண்டையைத் தொடர்ந்தால் இருவரும் நிறைய ஆயுதங்களை விட்டுச்செல்லவேண்டிவரும் அவை உலகத்தையே அழித்துவிடும் என்பதால் சண்டையை நிறுத்திவிட வேண்டும் என்று பரசுராமன் சண்டையை நிறுத்தினார். குழம்பிய அம்பை, பீஷ்மரை கொல்ல தேவர்கள் எனக்கு வழி சொல்லாத வரை நான் ஊண், உறக்கம் கொள்ளப்போவதில்லை என சபதம் செய்து ஒற்றைக்காலில் நின்று சிவனை நோக்கி தவம் இருந்தாள். சிவன் அவள் முன் போன்றி "நீ பீஷ்மரின் மரணத்துக்கு காரணமாவாய் உனது அடுத்தப் பிறவியில்" என வரம் தந்து மறைந்தார். விரைவில் பீஷ்மர் மரணமடைய விரும்பிய அம்பா தீயில் குதித்து தற்கொலை செய்துகொண்டாள். ஊர்வசி, கங்கை, சத்தியவதி போன்ற பெண்கள் தங்களை விரும்பிய ஆண்களிடம் தான் விரும்பியதை பெற்றுக் கொண்டது மாதிரி இல்லாமல் அம்பை வெறும் அலங்காரப் பொருளாக கருதப்பட்டனர். [1]

போர்க்களத்தில் பெண்[தொகு]

சிகண்டியுடன் போர் செய்ய மறுக்கும் பீஷ்மர்

குருசேத்திரப் போரின் பத்தாம் நாள் போர்த் தொடங்கியவுடன்,அருச்சுனன் பீஷ்மரை நோக்கி பல அம்புகளை எய்தான்,எதுவும் அவரை அச்சுறுத்தவில்லை கோபம் கொண்ட கிருட்டிணன் தேரிலிருந்து கீழே குதித்து தனியே கீழே கிடந்த ஒரு சக்கரத்தை எடுத்துக் கொண்டு பீஷ்மரை தாக்க ஓடினார்."குருசேத்திரப் போரில் ஆயுதமே எடுக்க மாட்டேன்" என போருக்கு முன் சபதம் செய்துவிட்டு,இப்போது ஆயுதம் எடுத்துவட்டதை உணர்ந்து கிருட்டிணனை நோக்கி ஓடி "நான் பீஷ்மரைக் கொல்வேன்" என்று உறுதி எடுத்தான்."தனது மரண நேரத்தை தானே முடிவு செய்யும் வரத்தைப் பெற்றவராயிற்றே,அவரை கொல்ல முடியாது னாலும் அவரை செயல் இழக்கச் செய்தால், அவர் உடலை அசைக்க முடியாதபடி படுக்கவைத்துவிட்டாலே போதும்" "ஆனால் அவர் கையில் வில் இருக்கும் வரை அது முடியாது"."அப்படியானால் அவரை வில்லைப் பிடிக்காதபடி செய்" என்றார் கிருட்டிணன். "போர்க்களத்தில் வில்லை கீழே வைக்கமாட்டார்" என்றான் அருச்சுனன்."ஒரு பெண் நின்றால் கூட வில்லை வைக்க மாட்டாரோ?" என்று கிண்டலாக கேட்டார் கிருட்டிணன்."ஆனால் பெண்கள் போர்களத்தில் அனுமதிக்கப்படுவதில்லை"முடிவைத் தேடாமல் பிரச்சனையை மட்டுமே மனதில் கொண்டு பதில் சொன்னான் -அருச்சுனன்."திரௌபதியின் மூத்த சகோதரன் சிகண்டி ஆணா? பெண்ணா? அருச்சுனா சிகண்டி ஓர் ஆண் என்று நீ நம்பினால் தேரில் அவனை ஏற்றிக் கொண்டு போ,சிகண்டி ஒரு பெண் என்று பீஷ்மர் எண்ணினால் பீஷ்மர் வில்லை கீழே வைத்துவிட்டு நீ போர் விதிகளை மீறிவிட்டாய் என்று கூறுவார்,அவரை வெற்றி கொள்ள அதுதான் உனக்கு வாய்ப்பு"."இது அநியாயம்"-அருச்சுனன், அது ஒவ்வொருவர் கருத்தைப் பொறுத்தது-கிருட்டிணன்.[1]

அம்புப்படுக்கையில் வீடுமர்[தொகு]

அம்புகளின் படுக்கையில் வீடுமர்

சிகண்டி அருச்சுனன் தேரில் ஏறிக்கொண்டு பீஷமரை நோக்கி சவால்விட்டான்,சிகண்டியைக் கண்டதும் முற்பிறப்பில் தன்னை கொல்வேன் என்று வஞ்சினமுரைத்த பெண்ணென்றுணர்ந்து, பெண்ணை கொல்லல் அறமாகாது என்று வில்லை தாழ்த்தினார் பீஷ்மர்.இது தான் சமயம் என்றார் கிருட்டிணன்,சிகண்டியின் பின்னால் நின்ற அருச்சுனன் சரமாரியாக அம்புகளை பீஷ்மரை நோக்கி எய்தான்.மாபெரும் வீரரின் உடலை அம்புகள் துளைப்பதைக் கண்டு துரியோதனன் பிரமித்துப்போய் நின்றான், கௌரவர்களின் படைத்தலைவர் தன் தேரிலிருந்து கீழே விழுந்தார்.அவரது உடல் தரையில் விழாதபடி அம்புகள் தாங்கிக்கொண்டு இருந்தன.ஆயினும் தன் தந்தைக்காக கடவுளர்களிடம் பெற்ற இச்சா மரண வரத்தினால், அம்புப் படுக்கையில் இருந்தும் உயிர் நீங்காமல்,இருந்தார்.பீஷ்மர் கடவுளின் ஆயிரம் நாமங்களை (சஹஸ்வர நாமம்) சபிக்கத் தொடங்கினார்,அவர் அவற்றைச் சொல்லச் சொல்ல சூரியன் வடக்கு நோக்கி நகர்வதை பாண்டவர்கள் பார்த்தார்கள்.போர் முடிந்த பௌர்ணமியிலிருந்து எட்டாம் நாள் பீஷ்மர் உயிர் துறந்தார். [1]

வீடுமர் அம்புப்படுக்கையில் இருந்து அரனின் கடமைகள் குறித்துப் பாண்டவர்களுக்கு அறிவுரை கூறும் காட்சி

வெளி இணைப்பு[தொகு]

சான்றாவணம்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Jaya-An Illustrated Retelling of the MAHABHARATA-DEVDUTT PATTANAIK

இதனையும் காண்க[தொகு]

குருச்சேத்திரப் போர்

தலைமுறை அட்டவணை[தொகு]

பிரதிபன்சுனந்தா
கங்கைசந்தனுசத்தியவதிபராசரர்பாக்லீகர்தேவாபி
பீஷ்மர்சித்திராங்கதன்விசித்திரவீரியன்வியாசர்சோமதத்தன்
(அம்பிகா மூலம்) (அம்பாலிகா மூலம்)(தாசி மூலம்)
திருதராட்டிரன்பாண்டுவிதுரன்பூரிசிரவஸ்2 மகன்கள்


"https://ta.wikipedia.org/w/index.php?title=வீடுமர்&oldid=3356625" இருந்து மீள்விக்கப்பட்டது