அசுவத்தாமன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குருச்சேத்திரப் போரில், அசுவத்தாமன் நாராயண கணையை ஏவுதல்

அசுவத்தாமன், மகாபாரதக் கதைமாந்தர்களுள் ஒருவன். இவன், துரோணாச்சாரியாருடைய மகனாவான். இவன் இந்துக்களின் நம்பிக்கைப்படி, ஏழு சிரஞ்சீவிகளுள் ஒருவன். துரோணாச்சாரியார் இவன்மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்தார். குருச்சேத்திரப் போரின், அசுவத்தாமன் இறந்துவிட்டதாகக் தருமர் மூலம் கூறப்பட்ட வதந்தியை நம்பித் துரோணர் கவலையில் இருந்தபோது இளவரசன் திருஷ்டத்யும்னனின் வாளுக்கு இரையாகித் துரோணர் காலமானார்.

குருச்சேத்திரப் போரின் 18-ஆம் நாள் இரவில், கௌரவர் பக்கம் உயிர்பிழைத்திருந்த மூவரில் இவனும் ஒருவன். தனது தந்தையை நயவஞ்சகமாக கொன்ற பாண்டவர் படைகளின் தலைமைப்படைத்தலைவர் திருஷ்டத்யும்னனை தூக்கத்தில் இருக்கும்போது கொன்று பழி தீர்த்தவன். பாண்டவர்களின் ஐந்து குலக்கொழுந்துகளையும் (உபபாண்டவர்கள்), பாண்டவர் தவிர மற்ற பாண்டவ படைவீரர்களை அதே இரவில் கொன்றான்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அசுவத்தாமன்&oldid=3230909" இருந்து மீள்விக்கப்பட்டது