குந்தி நாடு
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
குந்தி நாடு (Kunti Kingdom) பண்டைய பரத கண்ட நாடுகளில் ஒன்றாகும். இந்நாட்டை ஆண்ட புகழ் பெற்ற யது குலத்தின் போஜர் பிரிவு மன்னர் குந்தி போஜனின் பெயரால் விளங்கியது. குந்தி நாடு மத்திய இந்தியாவில் அவந்தி நாட்டின் வடக்கில் அமைந்திருந்திருந்தது.
யது குலத்தின் 18 பிரிவினர்கள்
[தொகு]வலுமிக்க மகத நாட்டு மன்னன் ஜராசந்தனின் தொடர் அச்சுறுத்தல் காரணாமாக யது குலத்தின் விருஷ்ணிகள், அந்தகர்கள், சேதிகள், சூரசேனர்கள், குந்திகள், போஜர்கள் உட்பட 18 கிளைக் குழுவினர்கள், பரத கண்டத்தின் மேற்கு, மத்தியப் பகுதிகளில் குடியேறி, துவாரகை, போஜ நாடு, குந்தி நாடு, சூரசேனம், விதர்ப்பம், மச்சய நாடு, சால்வ நாடு போன்ற பகுதிகளை ஆண்டனர்.
மகாபாரத குறிப்புகள்
[தொகு]குரு நாட்டின் மன்னர் பாண்டுவின் முதல் மனைவியும், பாண்டவர்களில், தருமன், வீமன் மற்றும் அருச்சுனன் ஆகியவர்களின் தாயுமான குந்தி, குந்தி நாட்டின் மன்னர் குந்தி போஜனின் தத்து மகள் ஆவார். கிருஷ்ணரின் தந்தையான வசுதேவரின் உடன்பிறப்பான குந்தியின் இயற்பெயர் பிருதை ஆகும்.
இதனையும் காண்க
[தொகு]உசாத்துணை
[தொகு]- மகாபாரதம், சபா பருவம், பகுதி 14
மேற்கோள்கள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]