வசுதேவர்
Appearance
இந்து தொன்மவியலின் படி வசுதேவர் (அல்லது) வாசுதேவர் வட மொழியில் வாசுபாய், வாஜ்பாய் என்று அழைக்கப்படுகிறார். வாசுதேவர்–தேவகி இணையரின் எட்டாவது குழந்தை கிருட்டிணன் ஆவார். வசுதேவரின் உடன் பிறந்தாளான குந்தி, பாண்டு மன்னனின் மனைவி ஆவார். கிருஷ்ணர் வசுதேவரின் மகனாதலால் வாசுதேவன் என்றழைக்கப்படுகிறார். கிருஷ்ணரை கம்சனிடமிருந்து காக்க, வசுதேவர் கிருஷ்ணரை கூடையில் எடுத்துக் கொண்டு, யமுனை ஆற்றரைக் கடந்து பிருந்தாவனத்தில் உள்ள நந்தகோபன் -யசோதை தம்பதியரிடம் ஒப்படைத்தார்.
வசுதேவர் கம்சனின் உடன்பிறந்தாளான தேவகியை மணமுடித்தார். இவரது முதல் மனைவி ரோகிணி தேவி. இவர்களுக்குப் பிறந்த மகன் பலராமர் மகள் சுபத்திரை ஆவார்.