உள்ளடக்கத்துக்குச் செல்

அனிருத்தன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அனிருத்தனும் உஷாவும்

அனிருத்தன் (Aniruddha) (சமக்கிருதம்: अनिरुद्ध) கிருஷ்ணனின் பேரனு, பிரத்தியுமனனின் மகனும் ஆவார். கிருஷ்ணனின் பேரனாக மட்டுமின்றி அவரின் ஐந்து நிலைகளுள் ஒன்றாகக் கருதப்படுபவன். சங்கர்ஷணன், பிரத்தியுமணன், அனிருத்தன், புருசோத்தமன், வாசுதேவன் என்பவை அந்த ஐந்து நிலைகள்[1]

அனிருத்தன் என்ற வடமொழிச் சொல்லுக்கு கட்டுப்படுத்த இயலாதவன் என்று பொருள். இன்றும் கேரளத்தில் இப்பெயர் உள்ளவர்களைக் காணலாம்.

அனிருத்தனைப் பாணாசூரன் மகள் உஷா மையல் கொண்டு கவர்ந்து சென்றாள். இதனால் துவாரகை தரப்பிற்கும், அசுரர் தரப்பிற்கும் போர் நிகழ்ந்தது. பாணாசுரன் சிறந்த சிவபக்தனாதலால் இது சிவனுக்கும் கிருஷ்ணனுக்கும் இடையிலான போராயிற்று. இறுதியில் சிவனே கிருஷ்ணன். கிருஷ்ணனே சிவன் என்ற தத்துவம் உணர்த்தப்பட்டு, அனிருத்தனுக்கும், உஷாவுக்கு திருமணம் நடைபெற்றது.

வைணவ மரபில் சங்கர்சனர்[2], பிரத்தியுமனன் மற்றும் அனிருத்தன் ஆகியோர் வாசுதேவ கிருஷ்ணனின் அம்சங்களாக போற்றப்படுகிறார்கள்.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  • Dowson - Classical Dictionary of Hindu Mythology
  1. தமிழ் இணையக்கல்விக்கழகப் பாடப்பகுதி
  2. "SANKARSHANA – "THE BEHOLDER OF THE UNIVERSE"". Archived from the original on 2017-06-04. பார்க்கப்பட்ட நாள் 2016-10-21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனிருத்தன்&oldid=3801504" இலிருந்து மீள்விக்கப்பட்டது