உள்ளடக்கத்துக்குச் செல்

ராசலீலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராசலீலை, பிரேம் மந்திர், பிருந்தாவனம்
ராசலீலையில் ஈடுபடும் பாலகிருஷ்னர் மற்றும் ராதை , 19ஆம் நூற்றாண்டு ஓவியம், ராஜஸ்தான்

ராச லீலை (Rasa lila) (சர்வதேச சமசுகிருத ரோமனாக்க அரிச்சுவடி rāsa-līlā) (இந்தி: रास लीला) என்பது ஸ்ரீகிருஷ்ணர் கோகுலத்தில் வளர்ந்து கொண்டிருந்த போது கோபியர் மற்றும் ராதையுடன் ஆடிய ஆட்டங்களே ராச லீலை என்பர். இது குறித்து பாகவத புராணம், கீத கோவிந்தம் போன்ற சமசுகிருத மொழி இலக்கியங்களில் விரிவாக கூறுகிறது. கதக் மற்றும் மணிப்புரி நடனங்கள் ராச லீலை அடிப்படையில் வளர்ந்தது.[1]

ராச லீலை என்பதற்கு அழகுணர்ச்சியுடன் ஆடுவது என்று பொருள்.[2]

இரவு நேரத்தில் பாலகிருஷ்ணரின் புல்லாங்குழல் இசை கேட்டு மயங்கிய கோபியர்கள் தத்தமது வீடுகளை விட்டு வெளியே வந்து, பாலகிருஷ்ணருடன் தனிமையில் இரவு முழுவதும் ராசலீலை நடனத்தில் ஈடுபடுவர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Richmond, Farley P.; Darius L. Swann; Phillip B. Zarrilli (1993). Indian theatre: traditions of performance. Motilal Banarsidass Publ. p. 197. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-208-0981-5.
  2. Schweig, G.M. (2005). Dance of divine love: The Rasa Lila of Krishna from the Bhagavata Purana, India's classic sacred love story. Princeton University Press, Princeton, NJ; Oxford. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-691-11446-3.

நூல்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Rasa Lila
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராசலீலை&oldid=3947358" இலிருந்து மீள்விக்கப்பட்டது