கண்ணனின் 108 பெயர் பட்டியல்
கிருஷ்ணரின் பெயர்கள் மற்றும் சிறப்புப் பெயர்களின் பட்டியல் இந்துக்களின் கடவுளான கிருஷ்ணரின் பல்வேறு சிறப்புப் பெயர்களையும், பட்டப் பெயர்களையும், பாகவதம், விஷ்ணு புராணம், அரி வம்சம் போன்ற புராணங்களிலும் மற்றும் மகாபாரத இதிகாசத்திலும்[1] பல்வேறு இடங்களில் குறிக்கிறது. கிருஷ்ணரின் வானுலக இருப்பிடமாக கோலோகம் என பாகவதம் குறிக்கிறது. கிருஷ்ணரின் குழந்தைப் பருவத்திலும், பதின்ம வயதிலும் அருளிய லீலைகளால் கோபாலன், கோவிந்தன், தாமோதரன், வேணுகோபாலன், கோவர்தனன், இராதா கிருஷ்ணன், போன்ற சிறப்புப் பெயர்களாலும்;[2] கிருஷ்ணன் பெரியவனாக வளர்ந்த பின்னர் எண்மரை மனைவிகளாக அடைந்து, பாண்டவர்களின் நண்பராகி, குருச்சேத்திரப் போரில் அருச்சுனனின் தேரை ஓட்டியதால் பார்த்தசாரதி என்றும், அருச்சுனனுக்கு பகவத் கீதையையும்; உத்தவருக்கு உத்தவ கீதையையும் அருளியதால் கிருஷ்ணர், கீதாச்சாரியன் என்றும் ஜெகத் குரு என்றும் பெயர் பெற்றவர்.[3] கிருஷ்ணரின் வரலாற்று கதைகள் இந்தியா முழவதும் உள்ள அனைத்து மொழிகளின் இலக்கியங்களில் காணப்படுகிறது.[4][5]
கிருஷ்ணரின் உபதேசங்களை உலகம் முழுவதும் பரப்ப அகில உலக கிருஷ்ண பக்திக் கழகம் பல்வேறு நாடுகளில் செயல்படுகிறது.
கௌடிய வைணவ மரபில் கிருஷ்ணரின் 108 பெயர்கள்[தொகு]
சைதன்யர் நிறுவிய கௌடிய வைணவத்தில் கிருஷணரின் 108 பெயர்களை கூறுகிறது. அவைகள்:
பெயர் | பொருள் | பெயர் | பொருள் | |
---|---|---|---|---|
அச்சாலன் | தற்போதும் உள்ளவர் | அச்சுதன் | நழுவாதவர் | |
அற்புதன் | வியக்கத்தக்கவன் | ஆதிதேவன் | உண்மையான இறைவன் | |
ஆதித்தியன் | அதிதியின் மகன் | அஜென்மா | பிறப்பில்லாதவன் | |
அஜெயன் | பிறப்பையும், இறப்பையும் வென்றவன் | அட்சரன் | என்றும் நிலையானவன் | |
அமிர்தன் | மரணம் அற்றவன் | ஆனந்தசாகரன் | பெருங்கடலைப் போன்று பேரின்பமானவன் | |
அனந்தன் | அளவிட முடியாதவன் | அனந்தஜித் | என்றும் வெற்றியாளன் | |
அனயன் | தலைமை அற்றவர் | அனிருத்தன் | தடுத்து நிறுத்த முடியாதவன் | |
அபாரஜித் | வெல்லப்பட முடியாதவன் | அவ்வியக்தன் | படிகம் போன்று தூய்மையானவன் | |
பிகாரி | எங்கும் பயணம் செய்பவன் | பாலகோபாலான் | அனைவரையும் ஈர்க்கும் குழந்தை கிருஷ்ணன் | |
பாலகிருஷ்ணன் | குழந்தை கிருஷ்ணன் | சதுர்புஜன் | நான்கு கைகள் கொண்டவன் | |
தானவேந்திரன் | செல்வங்களை அருள்பவன் | தயாளன் | இரக்கத்தின் களஞ்சியம் | |
தயாநிதி | இரக்கமுள்ள அருளாளன் | தேவாதிதேவன் | தேவர்களின் தலைவர் | |
தேவகிநந்தன் | தேவகியின் மகன் | தேவேஷ்வா | அவதார புருஷன் | |
தர்மாதியட்சர் | தரும தேவன் | திரவின் | எதிரிகள் அற்றவன் | |
துவாரகாபதி | துவாரகையின் தலைவர் | கோபாலன் | ஆவினங்களுடன் விளையாடுபவன் | |
கோபாலப்பிரியன் | ஆவினங்களை நேசிப்பவர் | கோவிந்தன் | ஆவினங்கள், நிலம் மற்றும் முழு இயற்கையையும் அமைதிப்படுத்துபவர். | |
ஞானேஸ்வரன் | அறிவுக் கடவுள் | ஹரி | இயற்கையின் அதிபர் | |
இரண்யகர்பன் | "அனைத்தையும் படைப்பவர்" | ரிஷிகேசன் | அனைத்து உணர்வுகளுக்கும் அதிபர் | |
ஜெகத்குரு | பிரபஞ்சத்திற்கு குரு | ஜெகதீஷ்வரன் | பிரபஞ்சத்தின் இறைவன் | |
ஜெகன்நாதர் | பிரபஞ்சத்திற்கு தலைவர் | ஜெனார்தனன் | வரங்களை வழங்குபவர் | |
ஜெயந்தன் | அனைத்துப் பகைவர்களை வெல்பவன் | ஜோதிராதித்தியன் | சூரியனில் ஒளியாக விளங்குபவர் | |
கமலநாதன் | இலக்குமியின் நாதர் | கமலநயனன் | தாமரை வடிவக் கண்களை கொண்டவர். T | |
கம்சந்தகன் | கம்சனை கொன்றவர் | காஞ்சலோசனன் | தாமரைக் கண்ணன் | |
கேசவன் | நீண்ட, கரிய, சுருள் கொண்ட முடியைக் கொண்டவர் | கிருட்டிணன் | அனைவரையும் கவர்பவன் | |
இலக்குமிகாந்தன் | இலக்குமியின் கணவர் | லோகாதியட்சன் | மூவுலகின் நாயகன் | |
மதனன் | அன்பிற்கினியவன் | மாதவன் | இலக்குமியின் கணவர் | |
மதுசூதனன் | மது எனும் அரக்கனை கொன்றவர் | மகேந்திரன் | இந்திரனுக்குத் தலைவர் | |
மன்மோகன் | தடுமாறத மனம் உடையவன் | மனோகரன் | அழகின் அதிபதி | |
மயூரன் | மயிலிறகை மணிமகுடமாகக் கொண்டவன் | மோகனன் | வசீகரமானவன் | |
முரளி | புல்லாங்குழலை இசைப்பவன் | முரளிதரன் | புல்லாங்குழலை கையில் கொண்டவன் | |
முரளிமனோகரன் | குழல் ஊதி மயக்குபவன் | நந்தகுமாரன் | நந்தகோபரின் வளர்ப்பு மகன் | |
நந்தகோபாலன் | பசுக்கூட்டங்களின் மீது அன்பு பாராட்டுபவன் | நாராயணன் | அனைவருக்கும் புகழிடம் அளிப்பவர் | |
நவநீதசோரன் | வெண்ணெய் திருடி உண்பவன் | நிரஞ்சனன் | அப்பழுக்கற்றவன் | |
நிர்குணன் | குணங்களைக் கடந்தவன் | பத்மஹஸ்தன் | தாமரைத் தண்டு போன்ற கைகளை கொண்டவன் | |
பத்மநாபன் | தொப்புள் மீது தாமரையைக் கொண்டவன் | பரப்பிரம்மம் | முற்றான முழுமையான உண்மையானவன் | |
பரமாத்மா | அனைத்து உயிர்களிலும் ஆத்மாவாக திகழ்பவன் | பரமபுருஷன் | மேலான புருஷன் | |
பார்த்தசாரதி | அருச்சனனின் தேரை ஓட்டியவன் | பிரஜாபதி | அனைத்து சீவராசிகளையும் படைத்தவர் | |
புண்ணியவான் | தவத்தால் அடையத்தக்கவன் | புருசோத்தமன் | ஜீவாத்மாக்களில் மேலானவன் | |
ரவிலோசனன் | சூரியனைப் போன்ற கண்களை உடையவன் | சகஸ்ராட்சகன் | ஆயிரம் கண்களைக் கொண்டவன் | |
சஹஸ்ரஜித்தன் | ஆயிரம் பேர்களை அழித்தவன் | சாட்சி | அனைத்து செயல்களுக்கும் சாட்சியாக விளங்குபவன் | |
சனாதனன் | தொன்று தொட்டு விளங்குபவர் | சர்வஜனன் | அனைத்தும் அறிந்தவர் | |
சர்வபாலகன் | அனைத்தையும் காப்பவர் | சர்வேஸ்வரன் | அனைத்திற்கும் தலைவர் | |
சத்தியவசனன் | சத்தியம் மட்டும் பேசுபவர் | சத்தியவிரதன் | உண்மையையே இலக்காகக் கொண்டவர் | |
சாதனன் | அனைத்தறிவுக்கும் கருவியானவன் | சிரேஸ்டன் | மிகவும் புகழ்பெற்றவன் | |
ஸ்ரீகாந்தன் | இலக்குமியின் பிரியமானவன் | சியாம் | கருநிறத்தவன் | |
சியாமசுந்தரன் | கார்மேக அழகன் | சுதர்சனன் | சுதர்சனம் எனும் சக்கரத்தைக் ஆயுதமாகக் கொண்டவன். | |
சுமேதா | நுட்பமான அறிவினன் | சுரேஷ்வரன் | அனைத்து தெய்வங்களுக்கும் தலைவர் | |
சுவர்க்கபதி | சொர்க்கத்தின் தலைவர் | திரிவிக்கிரமன் | மூவுலகையும் அளந்தவன் | |
உபேந்திரன் | இந்திரனின் நண்பர் | வைகுந்தநாதன் | வைகுந்தத்தில் உறைபவன் | |
வர்தமானன் | அருவமான (உருமற்ற) இறைவன் | வாசுதேவபுத்திரன் | வசுதேவரின் மகன் | |
விஷ்ணு | பிரபஞ்சத்தின் இறைவன்/பிரபஞ்சம் | விஸ்வதட்சினன் | திறமை மற்றும் ஆளுமை மிக்கவன் | |
விஸ்வகர்மன் | அனைத்து பிரபஞ்சங்களையும் படைத்தவர் | விஸ்வமூர்த்தி | அனைத்து பிரபஞ்சங்களின் வடிவானவர் | |
விஸ்வரூபன் | பிரபஞ்சத்தின் வடிவாகக் காட்சியளிப்பவர் | விஸ்வாத்மா | பிரபஞ்சத்தின் ஆத்மா | |
விருசபர்வா | அறத்தின் நாயகன் | யாதவேந்திரன் | யாதவ குல தலைவர் | |
யோகி | யோகியானவன் | யோகினாம்பதி | யோகிகளின் தலைவர் (யோகீஸ்வரன்) |
கிருஷ்ண அஷ்டோத்திரம்[தொகு]
விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் கூறிய படி கிருஷ்ணரின், கீழ்கண்ட 108 திருப்பெயர்களை[6][7] உச்சரித்து, பூ அல்லது துளசி இலைகளைக் கொண்டு கிருஷ்ணரை பூசிக்க வேண்டும்.
- ஓம் கிருஷ்ணாய நமஹ
- ஓம் கமலநாதாய நமஹ
- ஓம் வாசுதேவாய நாமஹ
- ஓம் சனாதனாய நமஹ
- ஓம் வசுதேவாத்மஜாய நமஹ
- ஓம் புண்யாய நமஹ
- ஓம் லீலாமானுஷ விக்ரஹாய நமஹ
- ஓம் ஸ்ரீவத்ச கௌஸ்துபதாராய நமஹ
- ஓம் யசோதாவத்சலாய நமஹ
- ஓம் ஹரியே நமஹ
- ஓம் சதுர்புஜாத்த சக்ராசிகதா நமஹ
- ஓம் சம்காம்புஜா யுதாயுஜாய நமஹ
- ஓம் தேவகீநந்தனாய நமஹ
- ஓம் ஸ்ரீசாய நமஹ
- ஓம் நந்தகோப பிரியாத்மஜாய நமஹ
- ஓம் யமுனாவேகா சம்ஹாரினே நமஹ
- ஓம் பலபத்திர பிரியனுஜாய நமஹ
- ஓம் பூதனாஜீவித ஹராய நமஹ
- ஓம் சகடசூர பம்ஜனாய நமஹ
- ஓம் நந்தவிரஜா ஜனானம்தினே நமஹ
- ஓம் சச்சிதானந்த விக்ரஹாய நமஹ
- ஓம் நவநீத விலிப்தாம்காய நமஹ
- ஓம் நவநீத நடனாய நமஹ
- ஓம் முசுகுந்த பிரசாதகாய நமஹ
- ஓம் சோஷடஸஸ்திரீ சஹஸ்ரேஸாய நமஹ
- ஓம் திரிபம்கினே நமஹ
- ஓம் மதுராக்குறுதயா நமஹ
- ஓம் சுகவாக அம்ருதாப்தீம்தவே நமஹ
- ஓம் கோவிந்தாய நமஹ
- ஓம் யோகினாம் பதேய நமஹ
- ஓம் வத்சவாடி சராய நமஹ
- ஓம் அனந்தாய நமஹ
- ஓம் தேனுகாசூர பம்ஜனாய நமஹ
- ஓம் த்ருணீக்ருத திருணா வர்தாய நமஹ
- ஓம் யமளார்ஜுன பம்ஜனாயா நமஹ
- ஓம் உத்தலோத்தால பேத்திரே நமஹ
- ஓம் தமால சியாமலாக்கிறுதியோ நமஹ
- ஓம் கோபகோபீஸ்வராய நமஹ
- ஓம் யோகினே நமஹ
- ஓம் கோடிசூர்ய சமப்ரபாய நமஹ
- ஓம் இலாபதயே னம நமஹ
- ஓம் பரம்ஜோதியோதிஷே நமஹ
- ஓம் யாதவேம்த்ராய நமஹ
- ஓம் யதூத்வஹாய நமஹ
- ஓம் வனமாலினே நமஹ
- ஓம் பீதவாஸனே நமஹ
- ஓம் பாரிஜாதபஹாரகாய நமஹ
- ஓம் கோவர்தனாச லோத்தர்த்ரே நமஹ
- ஓம் கோபாலாய நமஹ
- ஓம் சர்வபாலகாய நமஹ
- ஓம் அஜாய நமஹ
- ஓம் நிரஞ்சனாய நமஹ
- ஓம் காமஜனகாய நமஹ
- ஓம் கம்ஜலோசனாய நமஹ
- ஓம் மதுக்னே நமஹ
- ஓம் மதுராநாதாய நமஹ
- ஓம் துவாரகாநாயகாய நமஹ
- ஓம் பலினே நமஹ
- ஓம் பிருந்தாவனாம்த சம்சாரிணே நமஹ
- ஓம் துளசிதாம பூஷனாய நமஹ
- ஓம் சமந்தக மணேர்ஹர்த்தரே நமஹ
- ஓம் நாராயாணாத்மகாய நமோ
- ஓம் குஜ்ஜ கிருஷ்ணாம்பரதாயா நமஹ
- ஓம் மாயினே நமஹ
- ஓம் பரமபுருஷாய நமஹ
- ஓம் முஷ்டிகாசூர சாணுர நமஹ
- ஓம் மல்யுத்த விசாரதாய நமஹ
- ஓம் சம்சாரவைரிணே நமஹ
- ஓம் கம்சாராயே நமஹ
- ஓம் முராரரே நமஹ
- ஓம் நாராகாம்தகாய நமஹ
- ஓம் அனாதி பிரம்மசாரிணே நமஹ
- ஓம் கிருஷ்ணாவ்யஸன கர்சகாய நமஹ
- ஓம் சிசுபாலஸித்சேத்ரே நமஹ
- ஓம் துர்யோதனகுலாம்தகாய நமஹ
- ஓம் விதுராக்ரூர வரதாய நமஹ
- ஓம் விஸ்வரூபப்பிரதர்சகாயே நமஹ
- ஓம் சத்யவாசே நமஹ
- ஓம் சத்ய சம்கல்பாய நமஹ
- ஓம் சத்யபாமாரதாய நமஹ
- ஓம் ஜெயினே நமஹ
- ஓம் சுபத்ரா பூர்வஜாய நமஹ
- ஓம் விஷ்ணவே நமஹ
- ஓம் பீஷ்மமுக்தி ப்ரதாயகாய நமஹ
- ஓம் ஜெகத்குரவே நமஹ
- ஓம் ஜகன்னாதாய நமஹ
- ஓம் வேணுநாத விசாரதாய நமஹ
- ஓம் விருஷபாசூர வித்வசினே நமஹ
- ஓம் பாணாசூர கராம்தக்றுதே நமஹ
- ஓம் யுதிஷ்திர பிரதிஷ்டாத்ரே நமஹ
- ஓம் பஹிபர்ஹவாதசம்சகாய நமஹ
- ஓம் பார்த்தசாரதியே நமஹ
- ஓம் அவ்யக்தாய நமஹ
- ஓம் கீதாம்றுத மஹொததியே நமஹ
- ஓம் காளீய பணிமாணிக்ய ரம்ஜித ஶ்ரீ பதாம்புஜாய நமஹ
- ஓம் தமோதராய நமஹ
- ஓம் யக்ஞபோக்த்ரே நமஹ
- ஓம் தானவேந்திரா விநாசகாய நமஹ
- ஓம் நாராயணாய நமஹ
- ஓம் பரப்பிரம்மனே நமஹ
- ஓம் பன்னகாஸன வாகனாய நமஹ
- ஓம் ஜலக்ரீடா ஸமாஸக்த நமஹ
- ஓம் கோபீவஸ்த்ராபஹாராகாய நமஹ
- ஓம் புண்ணியஸ்லோகாய நமஹ
- ஓம் தீர்தக்றுதே நமஹ
- ஓம் வேதவேத்யாய நமஹ
- ஓம் தயாநிதேயே நமஹ
- ஓம் சர்வதீர்தாத்மகாய நமஹ
- ஓம் சர்வக்ரஹ ருபிணே நமஹ
- ஓம் பராத்பராய நமஹ
பொதுப் பயன்பாடிற்கான பெயர்கள்[தொகு]
கிருஷ்ணரின் பொது பயன்பாட்டிற்கான பெயர்கள்:
பெயர் | பொருள் | பெயர் | பொருள் | பெயர் | பொருள் |
---|---|---|---|---|---|
அச்சலன் | குழந்தை | அச்சுதன் | தவறிழைக்காதவன் | அவ்வியக்தன் | தெள்ளத் தெளிவான மனதுடையவன் |
பங்கே பிகாரி | (வனத்தின் விகாரி என்பதன் திரிபுச் சொல்) (वन के विहारि) பிருந்தாவனக் காடுகளில் விளையாடுவதை நேசிப்பவன் | பிகாரி | விளையாட்டை நேசிப்பவன் | பக்தவத்சலன் | பக்தர்களை தூக்கி விடுபவர் |
பிரஜேஷா | விரஜ மக்களின் தலைவன் | சக்கரதாரன் | கையில் சக்கரத்தைக் கொண்டவன். | தாமோதரன் | அன்னை யசோதையால் இடுப்பில் கயிறு கட்டப்பட்டவன். |
தீனபந்து | துன்பத்திலிருப்போரின் உறவினன் | தீனநாதன் | ஆதரவற்றவர்களுக்கு அடைக்கலம் தருபவர் | துவாரகாதீசன் | துவாரகையின் தலைவர் |
துவாரகாநாதன் | துவாரகையின் தலைவர் | கண்ஷியாம் | கார்மேக நிறத்தவன் | கிரிதாரி | கோவர்தன மலையை கையால் உயர்த்தி பிடித்தவன் |
கோபாலன் | இடையன், பசுக்களை காப்பவன், (குறிப்பாக அனைத்து சீவராசிகளை காப்பவர்). | கோபிநாதன் | கோபியர் உளம் கவர் கள்வன் | கோவிந்தன் | ஆவினங்களை காப்பவர் |
கோவிந்தராஜன் | இடையர்களின் அரசன் | குருவாயூரப்பன் | குருவாயூர் கோயிலில் குடி கொண்டவன் | ஹரி | பாவங்களை நீக்குபவர், பிறவிச்சுழற்சியிலிருந்து விடுவிப்பவர். |
ஈஸ்வரன் | இறைவன் | ருஷீகேசன் | உணர்வுகளின் தலைவர் | ஜெகன்நாதர் | பிரபஞ்சத்தின் தலைவர் |
ஜெனார்தனன் | வரம் தருபவர் | காலதேவன் | காலத்திற்கு அதிபதி | கல்மஷாஹீனன் (Kalmashaheena) | பாவமற்றவன் |
கண்ணையா | பக்தர்களின் சுமைகளை பகிர்ந்து கொள்பவர் அல்லது பக்தர்களிடம் நெருக்கமாக இருப்பவர் | கேசவன் | நீண்ட முடியை உடையவன் | மதன மோகனன் | தன் அழகால் கலக்கமடையச் செய்பவன் |
மாதவன் | இலக்குமியின் நாயகன் | மதுசூதனன் | மது எனும் அரக்கனை கொன்றவர் | மணிகண்டன் | கௌஸ்துபம் எனும் மணிமாலையை அணிந்தவன் |
முராஹரி | முரா எனும் அரக்கனை கொன்றவர் | முகிலன் | கார்மேக நிறத்தவன் | முகுந்தன் | வீடுபேற்றுக்கான ஆன்மீக அறிவொளியை அருள்பவர். |
நந்தகோபாலன் | இடையர்களுக்குப் பிரியமானவன் | நந்தலால் | நந்தகோபனுக்குப் பிரியமானவன். | பாண்டுரங்கன் | பண்டரிபுரத்து வெள்ளை நிற கிருஷ்ணண் |
பரப்பிரம்மன் | அனைத்திற்கும் மேலான பிரம்மம் | பரமேஷ்வரன் | மேலான ஈஸ்வரன் | பார்த்தசாரதி | குருச்சேத்திரப் போரில் அருச்சுனனுக்கு தேரோட்டியவர். |
பிரதிபாவனன் | பாவத்தில் வீழ்ந்தவர்களை தூய்மைப்படுத்துபவர் | இராதாவல்லபவன் | ராதையின் அன்பிற்குரியவன் | இராஜகோபாலன் | இடையர்களின் அரசன் |
ரண்ச்சோதரை (Ranchhodrai) | அமைதி காக்கும் பொருட்டு போரை மறுத்து துவாரகைக்கு ஓடியவன் | சியாமசுந்தரன் | கருப்பழகன் | சந்தானம் | அன்பானவன் |
சந்தானசாரதி | வானுலக ஆன்மீக தோரோட்டி | சௌரி | சூரசேனரின் வழித்தோன்றல் | வாசுதேவன் | வசுதேவரின் மகன் |
யதுநந்தனன் | யதுக்களின் அன்பிற்குரியவன் | யோகீஷ்வரன் | யோகிகளின் தலைவர் | யசோதா நந்தனன் | யசோதையின் வளர்ப்பு மகன் |
இதனையும் காண்க[தொகு]
அடிக்குறிப்புகள்[தொகு]
- ↑ கிருஷ்ணனின் பெயர்களும் பொருளும்
- ↑ Knott 2000, ப. 56
- ↑ Knott 2000, p. 36, p. 15
- ↑ Richard Thompson, Ph.D. (December 1994). Reflections on the Relation Between Religion and Modern Rationalism. http://content.iskcon.com/icj/1_2/12thompson.html. பார்த்த நாள்: 2008-04-12.
- ↑ Mahony, W.K. (1987). "Perspectives on Krsna's Various Personalities". History of Religions (American Oriental Society) 26 (3): 333–335. doi:10.1086/463085. https://archive.org/details/sim_history-of-religions_1987-02_26_3/page/333.
- ↑ SRI KRISHNA ASHTOTTARA SATA NAMAVALI – தமிழ்
- ↑ Sri Krishna Ashtottara-shata-namavali - 108 names of Lord Sri Krishna
வெளி இணைப்புகள்[தொகு]
- 108 Names of Krishna
- Astottara-satanamas (108 names): Krishna devanagari mp3 audio
- Sahasranamas (1000 names): Krishna, Gopala, Balakrishna, Radha-Krishna
- List of more names of Lord Sri Krishna