ஹயக்ரீவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹயக்ரீவர்
அதிபதிஞானம்
தேவநாகரிहयग्रीव
சமசுகிருதம்Hayagrīva
வகைதிரிமூர்த்தி
இடம்வைகுண்டம்
கிரகம்வைகுண்டம்
ஆயுதம்சுதர்சன சக்கரம், கௌமோதகி
துணைலட்சுமி

ஹயக்ரீவர் குதிரை முகமும், மனித உடலும் கொண்ட உருவானவர், இவரை விஷ்ணுவின் வடிவாகக் கருதி வைணவர்கள் வழிபடுகிறார்கள். ஹயக்ரீவரை கல்வித் தெய்வம் என குறிப்பிடுகின்றார்கள். இந்த அவதாரத்தினை தசாவதாரத்திற்குள் இணைப்பதில்லை.

அவதாரக் காரணம்[தொகு]

மது, கைடபன் எனும் அசுரர்கள் படைக்கும் கடவுளான பிரம்மாவிடமிருந்த வேதங்களை பறித்துக் கொண்டனர். அத்துடன் பாதாள உலகத்திற்குச் சென்றனர். அதனை மீட்டுத் தரும்படி பிரம்மா, காக்கும் கடவுளான விஷ்ணுவை வேண்டினார். மதுவும், கைடபனும் படைக்கும் தொழிலை செய்ய ஆசை கொண்டனர். அவர்கள் குதிரை முகம் உடையவர்கள் என்பதால் விஷ்ணுவும் குதிரை முக அவதாரம் எடுத்து அவர்களுடன் போர் புரிந்தார். இந்த ரூபமே ஹயக்ரீவர் என்று அழைக்கப்படுகிறது. அசுரர்களுடன் போரிட்டு வேதங்களை மீட்டு பிரம்மனிடம் தந்தார்.[1]

லட்சுமி ஹயக்ரீவர்[தொகு]

மது, கைடபன் அசுரர்களை அழித்த பின்னும் ஹயக்கிரீவருக்கு உக்கிரம் தனியாதால் லட்சுமி தேவியை அவர் மடியில் அமர வைத்துள்ளனர். இத்திருவுருவத்திற்கு லட்சுமி ஹயக்ரீவர் என்று பெயர். ஹயக்ரீவருக்கு கல்வி கருவாக இருந்தமையால் கல்விக்கு தெய்வமாகவும், லட்சுமி உடனிருப்பதனால் செல்வத்திற்கு தெய்வமாகவும் ஹயக்கிரீவர் வணங்கப்படுகிறார்.

ஹயக்ரீவர் ஸ்தோத்திரம்[தொகு]

தூய மெய்ஞ்ஞான வடிவமும் ஸ்படிகம் போன்று தூய்மையானவரும் அறிவு யாவற்றுக்கும் ஆதாரமானவருமாகிய ஹயக்கிரீவரை வணங்குகிறேன் எனும் பொருளுடைய ஸ்தோத்திரம்.

"ஞானானந்த மயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்ருதிம் ஆதாரம் ஸர்வ வித்யானாம் ஹயக்ரீவம் உபாஸ்மஹே"

ஹயக்ரீவர் காயத்திரி[தொகு]

'ஓம் தத் வாகீச்வராய வித்மஹே ஹயக்ரீவாய தீமஹி தந்நோ ஹஸெள ப்ரஸோதயாத்'

மூலமந்திரம்

'உத்கீத ப்ரணவோத்கீத, ஸர்வ வாகிச்வரேச்வர ஸர்வ வேதமயா சிந்த்யா, சர்வம் போதய போதய'.[2]

ஓம்கார உத்கீத ரூபாய ருக்யஜீ ஸாம மூர்த்தயே நம: அஸ்து தேவதேவாய வாஞ்சிதார்த்த ப்ரதாயினே: வேத வேதாந்த வேத்யாய வேதாஹரணே கர்மணே ஸர்வாஸ்த்வ மஹாமோஹ பேதினே ப்ரஸ்மணே நம:[3]

ஸ்ரீவாதிராஜரும் ஹயக்ரீவரும்[தொகு]

பொ.ஊ. 1480 ஆண்டு காலத்தில்[4] வாழ்ந்த மத்வ குருவான மகான் ஸ்ரீவாதிராஜர், ஹயக்ரீவரை உபாசனைத் தெய்வமாகக் கொண்டவர். அவர் தினமும் ஹயக்ரீவருக்கு படைக்கும் பிரசாதத்தை ஹயக்ரீவரே வந்து உண்பாராம்.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. அருள்மிகு லட்சுமி ஹயக்ரீவர் திருக்கோயில்
  2. "ஹயக்ரீவர் வழிபாடு". 2012-09-19 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-09-26 அன்று பார்க்கப்பட்டது.
  3. "கல்வியில் நல்ல முன்னேற்றம் தரும் ஹயக்ரீவர் ஸ்தோத்திரம்". 2012-08-27 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-09-26 அன்று பார்க்கப்பட்டது.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2015-01-09 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-12-09 அன்று பார்க்கப்பட்டது.
  5. http://www.dinamani.com/weekly_supplements/vellimani/article886595.ece?

வெளி இணைப்புகள்[தொகு]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹயக்ரீவர்&oldid=3722102" இருந்து மீள்விக்கப்பட்டது