தியாகராஜர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள்

தியாகராஜ சுவாமிகள் (1767 -1848) தியாக பிரம்மம் என்று போற்றப்படுபவர். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவர். தென்னிந்திய இசைக்கு அளப்பரிய சேவைகள் ஆற்றிய இவர் ஒரு சிறந்த இசை ஞானியாக விளங்கியவர்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

கி.பி. 18ஆம் நூற்றாண்டில் சோழ நாட்டில் திருவாரூரில் ராம பக்தரான ராமபிரம்மம் என்பவருக்கும் சீதாம்மாவுக்கும் மூன்றாவது புதல்வராக இவர் பிறந்தார். இவர் பிறந்த பின் இவரின் குடும்பத்தினர் தஞ்சாவூருக்கு அண்மையில் உள்ள திருவையாறில் குடியேறினர். திருவையாறில் இவர் சமஸ்கிருத மொழியில் பயிற்சி பெற்றார். இவருக்கு 8 வது வயதிலேயே உபநயனம் நடைபெற்றது. நுட்ப புத்தியும் ராம பக்தியும் கொண்ட தியாகராஜர் ஓய்வு நேரங்களில் சோந்தி வெங்கடராமையரிடம் சங்கீதம் பயின்று வந்தார். குருவின் அருளாலும் வழிநடத்தலாலும் சங்கீத சம்பிரதாயங்களில் மிக சிறந்த முறையில் இவர் கற்று தேறினார். 18 வது வயதில் தியாகராஜருக்குத் திருமணம் நடந்தேறியது.

இசைப்புலமை[தொகு]

பல அபூர்வ இராகங்களில் கீர்த்தனைகளை இயற்றியிருப்பதால் அந்த இராகங்களில் சொருபங்களையும், இலக்கணங்களையும் நாம் அறிய முடிகின்றது. ஒரே இராகத்தில் பல கீர்த்தனைகளை இயற்றியிருப்பதிலிருந்து இவருடைய அபூர்வ சங்கீதத் திறமையும் கற்பனையும் வெளியாகின்றன. இவர் தனது தாய் மொழியான தெலுங்கில் பல கீர்த்தனைகள் அமைத்தமை குறிப்பிடத்தக்கது.

இவருடைய இசைத் திறமையைக் கேள்வியுற்ற தஞ்சாவூர் மராத்திய அரசு மன்னரான சரபோஜி இவரைத் தமது அரசவைக்கு அழைத்து, தம்மைப் பற்றி புகழ் பாடச் செய்ய வேண்டுமென விரும்பினார். ஆனால் தியாகராஜர் அரசவைக்கு செல்ல மறுத்து நிதிசால சுகமா என்ற கல்யாணி இராகக் கிருதியைப் பாடினார். இராம பக்தியிலேயே அவர் தம் மனதைச் செலுத்தி வந்தமையால், மனிதர்களை துதி செய்து பொருள் சம்பாதிக்க ஆசைப் படவில்லை.

ஏலநீதயராது கிருதியே தியாகராஜர் முதன் முதலில் பாடிய உருப்படியாகும். ஆரம்ப காலத்திலேயே தியாகராஜர் செய்த உருப்படிகள் அனேகமாக திவ்யநாமக்கீர்த்தனைகளாகவும், தனிச் சரணத்தை உடைய கிருதிகளாகவுமே அமைந்தன. இவை அனேகமாகத் தோத்திரங்களாகவே இருந்தன. இவர் இயற்றிய கீர்த்தனைகள் யாவும் தெலுங்கு மற்றும் வடமொழி தவிர வேறு மொழிகளில் அமையாதது இவரின் தாய் மொழி பற்றை நன்கு விளக்குவதாக அமைந்துள்ளது

அற்புதங்கள்[தொகு]

இசையுடன் கலந்த இன்ப வாழ்வில் இவர் ஈடுபடத் தொடங்கிய காலத்தில் காஞ்சீபுரத்தில் இருந்து இராமகிருஷ்ண யதீந்திரர் என்னும் மகான் வந்து இராம நாமத்தை 96 கோடி முறை செபிக்கும் படி தியாகராஜரிடம் கூறிச் சென்றார். இவர் அதனைத் தெய்வ வாக்காக எடுத்து அப்புனிதச் செயலை 21 ஆண்டுகளிற் செய்து முடித்தார். சராசரியாக ஒரு நாளைக்கு 125,000 முறை இராமநாமத்தைச் செபித்து வந்தார். இதனால் பல தடவைகள் இராம தரிசனத்தைப் பெறும் பாக்கியம் இவருக்குக் கிடைத்தது. இம் முக்கிய சந் தர்ப்பங்களில் ஏலநீதயராது (அடாணா இராகம்) கனுகொண்டினி (பிலகரி இராகம்) ஆகிய கீர்த்திகளை இயற்றினார்.

நாரத பகவான் ஒரு சந்நியாசி வேடத்தில் இவருக்குத் தரிசனமளித்து ஸ்வரார்ணம் என்ற சங்கீதக் கிரந்தத்தை கொடுத்து விட்டுப் போனார். தமக்குக் கிடைத்த அந்தக் கிரந்தத்தை ஆதாரமாகக் கொண்டு சிறீ தியாகராஜர் சங்கீத இலக்கணங்கள் அமைந்த பல கிருதிகளை இயற்றினார்.

இவர் இளமையிலேயே சிறீ இராம, சீதா, லக்ஷ்மண விக்கிரகங்களை வைத்துப் பூசை செய்வதும், சிறீ ராம நாமத்தை செபிப்பதும் வழக்கமாக இருந்தது. இவரது குணங்களை வெறுத்த இவரது தமையனார் ஜபேசன் ஒருநாள் இரவு இவர் பூஜித்து வந்த சீதா, ராம, லக்ஷ்மண விக்கிரகங்களைத் தூக்கி காவேரி நதியில் எறிந்து விட்டார். தமது வழிபாட்டு விக்கிரகங்களைக் காணாமல் வேதனையுற்ற தியாகராஜர் அவற்றைத் தேடி அலைந்து ஈற்றில் சிறீ இராமபிரான் அருளால் விக்கிரகங்கள் கிடக்குமிடத்தை அறிந்து மிக்க மகிழ்ச்சியோடு அவற்றை வீட்டுக்கு எடுத்துச் சென்றார்.

இவர் பல தலங்களுக்கும் யாத்திரைகள் சென்று அங்கங்கே பல கீர்த்திகளை இயற்றி வந்தார். வழியில் ஒரு தடவை இவர் திருடர்களிடம் அகப்பட்டுக்கொள்ள நேரிட்ட போது, இராம லக்ஷ்மணர்களே சேவகர்கள் வடிவில் வந்து திருடர்களை விரட்டி விட்டார்கள். இது போன்ற பல அற்புத நிகழ்ச்சிகள் இவர் வாழ்வில் நிகழ்ந்துள்ளன.

இசைப்பணிகள்[தொகு]

இவர் சுமார் 2400 உருப்படிகள் செய்திருக்கிறார். கீர்த்தனைகளைத் தவிர பிரகலாத பக்தி விஜயம், நௌகா சரித்திரம் முதலிய இசை நாடகங்களை இயற்றியுள்ளார். கனராக பஞ்சரத்தினம், நாரத பஞ்சரத்தினம், திருவொற்றியூர் பஞ்சரத்தினம், கோவூர் பஞ்சரத்தினம், சிறீரங்க பஞ்சரத்தினம், லால்குடி பஞ்சரத்தினம் ஆகிய கிருதிகளை இயற்றியுள்ளார். எல்லாக் கர்த்தா இராகங்களிலும் இவர் கிருதிகளை இயற்றியிருக்கின்றார். அவை அனைத்தும் பக்தி ரசம் ததும்புவன ஆகும்.

இவரது உருப்படிகள் உள்ளத்தை உருக்கும் படியான பாவத்துடன் அமைந்திருக்கும். முதன் முதலில் சங்கதிகளை உருப்படிகளில் ஒழுங்கான முறையில் பிரயோகித்தவர் இவரே ஆவார். சங்கதிகள் மூலம் கிருதிகளை மிகவும் அழகு பெறச் செய்யலாம் என்பதை இவர் நிரூபித்தார்.

சீடர்கள்[தொகு]

தியாகராஜரின் பெருமை பரவத் தொடங்கியதும் அவரிடம் பாடம் கேட்கப் பல சீடர்கள் வந்தனர். இந்திய இசை வரலாற்றில் வேறெந்த இசைப் புலவருக்கும் இல்லாத அளவு இவருக்கே எண்ணிறைந்த சீடர்கள் சேர்ந்தனர். இச் சீடர்களும், இவர்களின் சீடர்களும் பிற்காலத்திலே சிறந்த இசைக் கலைஞர்களாகவும், இசைப் புலவர்களாகவும் திகழ்ந்தனர். அவ்ர்களில் முக்கியமான சிலர் பின்வருமாறு:

 1. தஞ்சாவூர் ராமராவ் (சீடர்களில் வயதில் மூத்தவர். தியாகராஜரின் அந்தரங்க செயலாளராகவும் இருந்தவர்.)
 2. வீணை குப்பய்யர்.
 3. வாலாஜாபேட்டை - வேங்கடரமண பாகவதர்
 4. வாலாஜாபேட்டை கிருஷ்ணபாகவதர். (வேங்கடரமண பாகவதரின் மகன்)
 5. உமையாள்புரம் கிருஷ்ணபாகவதர்.
 6. உமையாள்புரம் சுந்தரபாகவதர்.
 7. சித்தூர் ராதாகிருஷ்ணையார்.
 8. நெமம் சுப்பிரமணிய ஐயர்.
 9. கன்னையா பாகவதர்.
 10. கோவிந்த சிவன்.
 11. அமிர்தலிங்கம் பிள்ளை.

இறுதிக்காலம்[தொகு]

வால்மீகி முனிவரே தியாகராஜராக அவதரித்தார் என்று கூறப்படுகின்றது. வால்மீகியானவர் 2400 சுலோகங்களில் இராமாயணத்தைச் செய்தார். இவர் 2400 கீர்த்தனைகளில் இராமாயணத்தை பாடியிருப்பதாகக் கூறப்படுகின்றது.

1845ஆம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டுப் பிறப்பிலே சுவாமிகளின் மனைவியார் காலமானார். 1847ஆம் ஆண்டில் தமது 80 ஆவது வயதில் தியாகராஜ சுவாமிகள் காலமானார். அவர் சித்திநிலை எய்துவதற்கு முன் வந்த தசமி இரவில் இன்னும் 10 நாட்களில் இறைவனின் பாதார விந்தத்தைச் சேருவதாகக் கனவு கண்டார். இதனை அச்சமயத்தில் இயற்றிய கிரிபை நெல எனும் சகானா இராக கிருதியில் விவரித்துள்ளார். இவரின் பூதவுடலானது அவர்தம் சீடர்களால் தக்க மரியாதைகளுடன் காவேரி ஆற்றங்கரையில் அவரது குருவின் (சொண்டி வெங்கட ரமணய்யர்) சமாதிக்கருகில் தகனம் செய்யப்பட்டது.

தியாகராஜ சுவாமிகளின் சமாதி திருவையாற்றில் காவேரி நதிக்கரையில் அழகொளிரக் காட்சியளிக்கின்றது. ஆண்டு தோறும் அங்கு இசைக் கலைஞர்கள் கூடி தியாகபிரம்மத்திற்கு பஞ்சரத்னக் கீர்த்தனைகளைப் பாடி அஞ்சலி செலுத்துகின்றனர். அன்னாரின் கீர்த்தனைகளை இசையுலகுக்கு அரும் பொக்கிசங்கள் ஆகும்.

தியாகராஜர் கையாண்ட அபூர்வ இராகங்கள்[தொகு]

 1. சிறீமணி (2)
 2. ரசாளி (4)
 3. மனோரஞ்சனி (5)
 4. தேசிய தோடி (8)
 5. சுத்தசீமந்தினி (8)
 6. கண்டா (8)
 7. வர்த்தனி (9)
 8. கலகண்டி (13)
 9. கலகடா (13)
 10. ஜூஜாஹூளி (13)
 11. வசந்த பைரவி (14)
 12. ஆகிரி (14)
 13. சிந்துராமக்கிரியா (15)
 14. குர்ஜரி (15)
 15. ரேவகுப்தி (15)
 16. குண்டக்கிரியா (15)
 17. கௌரி (15)
 18. கௌளிபந்து (15)
 19. பிந்துமாலினி (15)
 20. கலாவதி (16)
 21. வேகவாகினி (16)
 22. சுப்ரதீபம் (17)
 23. பைரவம் (17)
 24. பூர்ணலலித (19)
 25. சுத்ததேசி (20)
 26. ஜிங்கலா (20)
 27. இந்தோளவசந்தம் (20)
 28. மார்க்கஹிந்தோளம் (20)
 29. ஜயந்தசிறீ (20)
 30. வசந்தவராளி (20)
 31. அமிர்த வாகினி (20)
 32. கோகிலவராளி (20)
 33. உதயரவிச்சந்திரிக (20)
 34. கிரணாவளி (21)
 35. சித்தரஞ்சனி (22)
 36. ஆபேரி (22)
 37. தேவாம்ருதவர்ஷினி (22)
 38. சாலசபைரவி (22)
 39. கன்னடகௌளை (22)
 40. ருத்ரப்பிரிய (22)
 41. நாயகி (22)
 42. உசேனி (22)
 43. மனோகரி (22)
 44. தேவமனோகரி (22)
 45. ஜயமனோகரி (22)
 46. மஞ்சரி (22)
 47. பலமஞ்சரி (22)
 48. ஜயந்தசேனா (22)
 49. சுத்தபங்காள (22)
 50. கலாநிதி (22)
 51. ஜயநாரயனி (22)
 52. சுரபூஷனி (22)
 53. வீரவசந்தம் (24)
 54. கமலாமனோகரி (27)
 55. சிம்மவாகினி (27)
 56. நளினகாந்தி(27)
 57. கர்னாடக பியாக் (28)
 58. நாராயணகௌளை (28)
 59. சித்துகன்னட (28)
 60. சாமா (28)
 61. பலஹம்ச (28)
 62. குந்தலவராளி (28)
 63. சரஸ்வதிமனோகரி (28)
 64. உடாபரணம் (28)
 65. ஈசமனோகரி (28)
 66. ஆந்தாளி (28)
 67. ஆந்தோளிகா (28)
 68. நவரசகன்னட (28)
 69. நாராயணி (28)
 70. காபிநாராயணி (28)
 71. சாயாதரங்கிணி (28)
 72. பங்காள (28)
 73. பகுதாரி (28)
 74. கோகிலத்வனி (28)
 75. சுராவளி (28)
 76. நாகஸ்வராளி (28)
 77. ராகபஞ்சரம் (28)
 78. மாளவி (28)
 79. சுபோஷிணி (28)
 80. ரவிச்சந்திரிகா (28)
 81. பிரதாபவராளி (28)
 82. ஜஞ்ஜோடி (28)
 83. கருடத்வனி (28)
 84. டக்கா (29)
 85. கன்னட (29)
 86. கோலாகலம் (29)
 87. பூர்ணசந்திரிக்கா (29)
 88. ஜனரஞ்சனி (29)
 89. விவர்த்தனி (29)
 90. சாயாநட (34)
 91. கானவாரிதி (35)
 92. விஜயசிறீ (39)
 93. நபோமணி(40)
 94. சந்திரஜோதி (41)
 95. தீவிரவாகினி (46)
 96. துந்துபிப்பிரியா (48)
 97. மந்தாரி (50)
 98. தீபகம் (51)
 99. ராமமனோகரி (52)
 100. பூர்விகல்யாணி (53)
 101. விஜயவசந்தா (54)
 102. ரஞ்சனி (59)
 103. கைகவசி (60)
 104. ஹம்சநாதம் (60)
 105. சுருதிரஞ்சனி (61)
 106. பூஷாவளி (64)
 107. சரஸ்வதி (64)
 108. யமுனாகல்யாணி (65)
 109. அமீர்கல்யாணி (65)

வெளி இணைப்புக்கள்[தொகு]

பஞ்ச ரத்ன கீர்த்தனைகள்[தொகு]

ஜகதானந்த காரக[தொகு]

ப. ஜக3(தா3)னந்த3 காரக ஜய ஜானகீ ப்ராண நாயக

அ. க3க3(னா)தி4ப ஸத்-குலஜ ராஜ ரா(ஜே)ஸ்1வர ஸு-கு3(ணா)கர ஸுர ஸேவ்ய ப4வ்ய தா3யக ஸதா3 ஸகல (ஜ)

ச1.அமர தாரக நிசய குமுத3 ஹித பரிபூர்(ணா)னக4 ஸுர ஸுர பூ4ஜ த3தி4 பயோதி4 வாஸ ஹரண ஸுந்த3ர-தர வத3ன ஸுதா4-மய வசோ- ப்3ரு2ந்த3 கோ3விந்த3 (ஸா)னந்த3 மா-வ(ரா)ஜ(ரா)ப்த ஸு1ப4 க(ரா)னேக (ஜ)

ச2. நிக3ம நீர(ஜா)ம்ரு2தஜ போஷ(கா)னிமிஷ வைரி வாரித3 ஸமீரண க2க3 துரங்க3 ஸத்-கவி ஹ்ரு2(தா3)ல(யா)க3ணித வான(ரா)தி4ப ந(தா)ங்க்4ரி யுக3 (ஜ)

ச3. இந்த்3ர நீல மணி ஸன்னி(பா4)பக4ன சந்த்3ர ஸூர்ய நய(னா)ப்ரமேய வா(கீ3)ந்த்3ர ஜனக ஸக(லே)ஸ1 ஸு1ப்4ர நா(கே3)ந்த்3ர ஸ1யன ஸ1மன வைரி ஸன்னுத (ஜ)

ச4. பாத3 விஜித மௌனி ஸா1ப ஸவ பரிபால வர மந்த்ர க்3ரஹண லோல பரம ஸா1ந்த சித்த ஜனக(ஜா)தி4ப ஸரோஜ ப4வ வர(தா3)கி2ல (ஜ)

ச5. ஸ்ரு2ஷ்டி ஸ்தி2(த்ய)ந்த-கார(கா)மித காமித ப2ல(தா3)ஸமான கா3த்ர ஸ1சீ பதி நு(தா)ப்3தி4 மத3 ஹ(ரா)னுராக3 ராக3 ராஜித கதா2 ஸார ஹித (ஜ)

ச6. ஸஜ்ஜன மான(ஸா)ப்3தி4 ஸுதா4-கர குஸும விமான ஸுரஸா ரிபு க(ரா)ப்3ஜ லாலித சர(ணா)வ-கு3(ணா)ஸுர க3ண மத3 ஹரண ஸனாத(னா)ஜ நுத (ஜ)

ச7. ஓங்கார பஞ்ஜர கீர புர ஹர ஸரோஜ ப4வ கேஸ1(வா)தி3 ரூப வாஸவ ரிபு ஜன(கா)ந்தக கலா- த4ர கலா த4(ரா)ப்த க்4ரு2ணா-கர ஸ1ர(ணா)க3த ஜன பாலன ஸு-மனோ- ரமண நிர்விகார நிக3ம ஸாரதர (ஜ)

ச8. கர த்4ரு2த ஸ1ர ஜா(லா)ஸுர ம(தா3)பஹர(ணா)வனீ ஸுர ஸு(ரா)வன க(வீ)ன பி3லஜ மௌனி க்ரு2த சரித்ர ஸன்னுத ஸ்ரீ த்யாக3ராஜ நுத (ஜ)

ச9. புராண புருஷ ந்ரு2-வ(ரா)த்ம(ஜா)ஸ்1ரித ப(ரா)தீ4ன க2ர விராத4 ராவண வி-ராவ(ணா)னக4 பராஸ1ர மனோ- ஹ(ரா)விக்ரு2த த்யாக3ராஜ ஸன்னுத (ஜ)

ச10. அக3ணித கு3ண கனக சேல ஸால வித3ள(னா)ரு(ணா)ப4 ஸமான சர(ணா)பார மஹி(மா)த்3பு4த ஸு-கவி ஜன ஹ்ரு2த்-ஸத3ன ஸுர முனி க3ண விஹித கலஸ1 நீர நிதி4ஜா ரமண பாப க3ஜ ந்ரு2-ஸிம்ஹ வர த்யாக3ரா(ஜா)தி3 நுத (ஜ)

துடுகு கல[தொகு]

ப. து3டு3கு க3ல நன்(னே) தொ3ர கொடு3கு ப்3ரோசுரா எந்தோ (து3)

அ. கடு3 து3ர்விஷ(யா)க்ரு2ஷ்டுடை3 க3டி3ய க3டி3யகு நிண்டா3ரு (து3)

ஸ்வர ஸாஹித்ய - 1. ஸ்ரீ வனிதா ஹ்ரு2த்-குமு(தா3)ப்3ஜ அவாங்-மானஸ கோ3சர (து3)

2. ஸகல பூ4தமுல(ய)ந்து3 நீவை- (யு)ண்ட3க3 மதி லேக போயின (து3)

3. சிருத ப்ராயமு நாடே3 ப4ஜ(னா)ம்ரு2த ரஸ விஹீன கு-தர்கு(டை3)ன (து3)

4. பர த4னமுல கொரகு(னொ)ருல மதி3 கரக3 பலிகி கடு3பு நிம்ப திரிகி3(ன)ட்டி (து3)

5. தன மதி3னி பு4வினி ஸௌக்2யபு ஜீவனமே- (ய)னுசு ஸதா3 தி3னமுலு க3டி3பே (து3)

6. தெலியனி நட-விட க்ஷுத்3ருலு வனிதலு ஸ்வ-வஸ1(மௌ)ட(கு)பதே3ஸி1ஞ்சி ஸந்தஸில்லி ஸ்வர லயம்பு3(லெ)ருங்க3கனு ஸி1(லா)த்முலை ஸு-ப4க்துலகு ஸமான(ம)னு (து3)

7. த்3ரு2ஷ்டிகி ஸாரம்ப3கு3 லலனா ஸத3(னா)ர்ப4க ஸே(னா)மித த4(னா)து3லனு தே3வ தே3வ நெர நம்மிதினி கா3கனு ப(தா3)ப்3ஜ ப4ஜனம்பு3 மரசின (து3)

8. சக்கனி முக2 கமலம்பு3னு ஸதா3 நா மதி3லோ ஸ்மரண லேகனே து3ர்ம(தா3)ந்த4 ஜனுல கோரி பரிதாப- முலசே தகி3லி நொகி3லி து3ர்விஷய து3ராஸலனு ரோய லேக ஸதத- (ம)பராதி4னை சபல சித்து(டை3)ன (து3)

9. மானவ தனு து3ர்லப4(ம)னுசு(னெ)ஞ்சி பரமானந்த3(மொ)ந்த3 லேக மத3 மத்ஸர காம லோப4 மோஹுலகு தா3ஸுடை3 மோஸ போதி கா3க மொத3டி குலஜு(ட3)கு3சு பு4வினி ஸூ1த்3ருல பனுலு ஸல்புசுனு(யு)ண்டினி கா3க ந(ரா)த4முலனு கோரி ஸார ஹீன மதமுலனு ஸாதி4ம்ப தாருமாரு (து3)

10. ஸதுலகை கொன்னாள்(ளா)ஸ்திகை ஸுதுலகை கொன்னாள்ளு த4ன ததுலகை திரிகி3தி(ன)ய்ய த்யாக3ரா(ஜா)ப்த இடுவண்டி (து3)

ஸாதிஞ்செனே[தொகு]

ப. ஸாதி4ஞ்செனே ஓ மனஸா

அ. போ3தி4ஞ்சின ஸன்-மார்க3 வசனமுல பொ3ங்கு ஜேஸி தா பட்டின பட்டு (ஸா)

ச. ஸமயானிகி தகு3 மாட(லா)டெ3னே ஸ்வர ஸாஹித்ய ஸ்வ1. தே3வகி வஸு தே3வுல(னே)கிஞ்சி(ன)டு (ஸம)

ஸ்வ2. ரங்(கே3)ஸு1டு3 ஸத்3-க3ங்கா3 ஜனகுடு3 ஸங்கீ3த ஸாம்ப்ரதா3யகுடு3 (ஸம)

ஸ்வ3. கோ3பீ ஜன மனோரத2(மொ)ஸங்க3 லேகனே கே3லியு ஜேஸே வாடு3 (ஸம)

ஸ்வ4. வனிதல ஸதா3 ஸொக்க ஜேயுசுனு ம்ரொக்க ஜேஸே பரமாத்மு(ட3)தி3யு கா3க யஸோ1த3 தனயு(ட3)ஞ்சு முத3ம்பு3னனு முத்3து3 பெட்ட நவ்வு(சு)ண்டு3 ஹரி (ஸம)

ஸ்வ4(A). ஸா(ரா)ஸாருடு3 ஸனக ஸனந்த3ன ஸன்-முனி ஸேவ்யுடு3 ஸக(லா)தா4ருடு3 (ஸம)

ஸ்வ5. பரம ப4க்த வத்ஸலுடு3 ஸுகு3ண பாராவாருண்(டா3)ஜன்ம(ம)னகு4(டீ3) கலி பா3த4ல தீர்சுவா(ட3)னுசு நே ஹ்ரு2(த3)ம்பு3ஜமுன ஜூசு(சு)ண்ட3க3 (ஸம)

ஸ்வ6. ஹரே ராம சந்த்3ர ரகு4 கு(லே)ஸ1 ம்ரு2து3 ஸு-பா4ஷ ஸே1ஷ ஸ1யன பர நாரீ ஸோத3(ரா)ஜ விராஜ துரக3 ராஜ ராஜ நுத நிராம(யா)பக4ன ஸரஸீ-ருஹ த3(ளா)க்ஷ(ய)னுசு வேடு3கொன்ன நன்னு தா ப்3ரோவகனு (ஸம)

ஸ்வ7. ஸ்ரீ வேங்கடேஸ1 ஸ்வ-ப்ரகாஸ1 ஸர்(வோ)ன்னத ஸஜ்ஜன மானஸ நிகேதன கன(கா)ம்ப3ர த4ர லஸன்-மகுட குண்ட3ல விராஜித ஹரே(ய)னுசு நே பொக3ட3கா3 த்யாக3ராஜ கே3யுடு3 மான(வே)ந்த்3ருடை3ன ராம சந்த்3ருடு3 (ஸம)

ச. ஸமயானிகி தகு3 மாட(லா)டெ3னே ஸத்3-ப4க்துல நட3த(லி)ட்(ல)னெனே அமரிககா3 நா பூஜ கொனெனே அலுக வத்3(த3)னெனே விமுகு2லதோ சேர போகு(ம)னெனே வெத கலிகி3ன தாளுகொம்(ம)னெனே த3ம ஸ1(மா)தி3 ஸுக2 தா3யகுட3கு3 ஸ்ரீ த்யாக3ராஜ நுதுடு3 செந்த ராகனே (ஸா)

கன கன ருசிரா[தொகு]

ப. கன கன ருசிரா கனக வஸன நின்னு (கன)

அ. தி3ன தி3னமுனு மனஸுன சனுவுன நின்னு (கன)

ச1. பாலு காரு மோமுன ஸ்ரீ(ய)பார மஹிம தனரு நின்னு (கன)

ச2. கல-கலமனு முக2 கள கலிகி3ன ஸீத குலுகுசு(னோ)ர கன்னுலனு ஜூசு நின்னு (கன)

ச3. பா3(லா)ர்(கா)ப4 ஸு-சேல மணி-மய மா(லா)லங்க்ரு2த கந்த4ர ஸரஸி(ஜா)க்ஷ வர கபோல ஸு-ருசிர கிரீட த4ர ஸந்ததம்பு3 மன(ஸா)ரக3 (கன)

ச4. ஸா-பத்னி மாதயௌ ஸுருசி-சே கர்ண ஸூ1ல(மை)ன மாட வீனுல சுருக்(க)ன தாளக ஸ்ரீ ஹரினி த்4யானிஞ்சி ஸுகி2ம்பக3 லேதா3(ய)டு (கன)

ச5. ம்ரு2க3 மத3 லலாம ஸு1ப4 நிடில வர ஜடாயு மோக்ஷ ப2லத3 பவமான ஸுதுடு3 நீது3 மஹிம தெல்ப ஸீத தெலிஸி வலசி ஸொக்க லேதா3 ஆ ரீதி நின்னு (கன)

ச6. ஸு(கா2)ஸ்பத3 விமு(கா2)ம்பு3 த4ர பவன வி-தே3ஹ மானஸ விஹா(ரா)ப்த ஸுர பூ4ஜ மானித கு3(ணா)ங்க சி(தா3)னந்த3 க2க3 துரங்க3 த்4ரு2த ர(தா2)ங்க3 பரம த3யா-கர கருணா ரஸ வரு(ணா)லய ப4(யா)பஹர ஸ்ரீ ரகு4பதே (கன)

ச7. காமிஞ்சி ப்ரேம மீர கரமுல நீது3 பாத3 கமலமுல பட்டுகொனு வாடு3 ஸாக்ஷி ராம நாம ரஸிகுடு3 கைலாஸ ஸத3னுடு3 ஸாக்ஷி மரியு நாரத3 பராஸ1ர ஸு1க ஸௌ1னக புரந்த3ர நக3ஜா த4ரஜ முக்2யுலு ஸாக்ஷி காத3 ஸுந்த3(ரே)ஸ1 ஸுக2 கல(ஸா1)ம்பு3தி4 வா(ஸா)ஸ்1ரிதுலகே (கன)

ச8. ஸததமு ப்ரேம பூரிதுட3கு3 த்யாக3ராஜ நுத முக2 ஜித குமுத3 ஹித வரத3 நின்னு (கன)

எந்தரோ[தொகு]

ப. எந்த3ரோ மஹானுபா4வு(ல)ந்த3ரிகி வந்த3னமு

அ. சந்த்3ர வத3னுனி(ய)ந்த3 சந்த3முனு ஹ்ரு2த3(யா)ரவிந்த3முன ஜூசி ப்3ரஹ்(மா)னந்த3(ம)னுப4விஞ்சு வா(ரெந்த3ரோ)

ச1. ஸாம கா3ன லோல மனஸிஜ லாவண்ய த4ன்ய மூர்த4ன்யு(லெந்த3ரோ)

ச2. மானஸ வன சர வர ஸஞ்சாரமு ஸலிபி மூர்தி பா3கு3க3 பொட3க3னே வா(ரெந்த3ரோ)

ச3. ஸரகு3ன பாத3முலகு ஸ்வாந்த(ம)னு ஸரோஜமுனு ஸமர்பணமு ஸேயு வா(ரெந்த3ரோ)

ச4. பதித பாவனு(ட3)னே பராத்பருனி கு3ரிஞ்சி பர(மா)ர்த2மகு3 நிஜ மார்க3முதோனு பாடு3சுனு ஸல்லாபமுதோ ஸ்வர ல(யா)தி3 ராக3முலு தெலியு வா(ரெந்த3ரோ)

ச5. ஹரி கு3ண மணி-மய ஸரமுலு க3ளமுன ஸோ1பி4ல்லு ப4க்த கோடு(லி)லலோ தெலிவிதோ செலிமிதோ கருண கல்கி3 ஜக3(மெ)ல்லனு ஸுதா4 த்3ரு2ஷ்டிசே ப்3ரோசு வா(ரெந்த3ரோ)

ச6. ஹொயலு மீர நட3லு கல்கு3 ஸரஸுனி ஸதா3 கனுல ஜூசுசுனு புலக ஸ1ரீருலை ஆனந்த3 பயோதி4 நிமக்3னுலை முத3ம்பு3னனு யஸ1மு கல வா(ரெந்த3ரோ)

ச7. பரம பா4க3வத மௌனி வர ஸ1ஸி1 விபா4-கர ஸனக ஸனந்த3ன தி3(கீ3)ஸ1 ஸுர கிம்புருஷ கனக கஸி1பு ஸுத நாரத3 தும்பு3ரு பவன ஸூனு பா3ல சந்த்3ர த4ர ஸு1க ஸரோஜ ப4வ பூ4-ஸுர வருலு பரம பாவனுலு க4னுலு ஸா1ஸ்1வதுலு கமல ப4வ ஸுக2மு ஸ(தா3)னுப4வுலு கா3க(யெந்த3ரோ)

ச8. நீ மேனு நாம வைப4வம்பு3லனு நீ பராக்ரம தை4ர்யமுல ஸா1ந்த மானஸமு நீவு(ல)னு வசன ஸத்யமுனு ரகு4வர நீ(யெ)ட3 ஸத்3ப4க்தியு ஜனிஞ்சகனு து3ர்மதமுலனு கல்ல ஜேஸி(ன)ட்டி நீ மதி3- (னெ)ரிங்கி3 ஸந்தஸம்பு3னனு கு3ண ப4ஜ(னா)னந்த3 கீர்தனமு ஸேயு வா(ரெந்த3ரோ)

ச9. பா4க3வத ராமாயண கீ3(தா)தி3 ஸ்1ருதி ஸா1ஸ்த்ர புராணபு மர்மமுலனு ஸி1(வா)தி3 ஷண்மதமுல கூ3ட4முலனு முப்பதி3 முக்கோடி ஸு(ரா)ந்தரங்க3முல பா4வம்பு3ல- (னெ)ரிங்கி3 பா4வ ராக3 ல(யா)தி3 ஸௌக்2யமுசே சி(ரா)யுவுல் கல்கி3 நிரவதி4 ஸுகா2த்முலை த்யாக3ரா(ஜா)ப்து(லை)ன வா(ரெந்த3ரோ)

ச10. ப்ரேம முப்பிரிகொனு வேள நாமமு தலசே வாரு ராம ப4க்துடை3ன த்யாக3- ராஜ நுதுனி நிஜ தா3ஸுலைன வா(ரெந்த3ரோ)

"https://ta.wikipedia.org/w/index.php?title=தியாகராஜர்&oldid=1979264" இருந்து மீள்விக்கப்பட்டது