உள்ளடக்கத்துக்குச் செல்

இராமானுச நூற்றந்தாதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இராமானுச நூற்றந்தாதி வைணவ சமய இலக்கியங்களுள் ஒன்று. இதைப் பாடியவர் திருவரங்கத்தமுதனார்.அந்தாதி எனும் சிற்றிலக்கிய அமைப்பில் அமைந்துள்ள இந்நூல் 108 கட்டளைக் கலித்துறைகளில் பாடப்பட்டுள்ளது.[1]

பாட்டுடைத் தலைவன் வைணவ மகாச்சாரியன் இராமானுசர் மாமுனிகள் ஆவார்

ஆழ்வார்கள் அருளிய திவ்வியப் பிரபந்தங்களை நாதமுனிகள் தொகுத்தார். பின்னர் வந்த மணவாள மாமுனிகள் இதில் இராமானுச நூற்றந்தாதியையும் சேர்த்து நாலாயிர திவ்வியப் பிரபந்தமாய்த் தொகுத்தார்.

வைணவர்கள் தினமும் ஓதும் பாசுரங்களில் இதுவும் ஒன்று.

நம்மாழ்வார் பாடிய திருவாய்மொழி நூலில் 100 பதிகங்கள் உள்ளன. அதன் ஒவ்வொரு பதிகத்துக்கும் ஒரு பாடல் என்ற முறையில் இந்த நூல் பாடப்பட்டுள்ளது.

வடமொழியில் இந்நூலைப் பிரபந்தகாயத்ரி என அழைப்பர்[2]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராமானுச_நூற்றந்தாதி&oldid=3304413" இலிருந்து மீள்விக்கப்பட்டது