திருநெடுந்தாண்டகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருநெடுந்தாண்டகம் என்பது திருமங்கையாழ்வாரருளிய நூல். இது தாண்டகம் என்ற செய்யுள் வகையைச்சார்ந்து இயற்றப்பட்டதாகும்.

பெயர்க்காரணம்[தொகு]

பாடலின் ஒவ்வொரு அடியும் இடையிலே தாண்டுவதை இந்தப் பாடல்களில் காணலாம். பாடலின் அகத்தே தாண்டுவது தாண்டகம். ஒவ்வொரு அடியிலும் எட்டு சீர்கள் வந்தால் அது நெடுந்தாண்டகம் என்றுரைப்பர். திருநெடுந்தாண்டகம் என்பது வைணவக்கடவுளைப் பற்றிய செய்யுளாதலால் 'திரு' என்று பெயர் தொடங்குகிறது.

நாலாயிரத்திவ்யபிரபந்தத்திரட்டில் பங்கு[தொகு]

இது நாலாயிரத்திவ்யப் பிரபந்தத்தில் 2052 முதல் 2081 வரையிலான பாடல்கள் இரண்டாவது ஆயிரத்தில் இடம்பெற்றுள்ளன. இதில் 30 பாடல்கள் உண்டு[1].

திருநெடுந்தாண்டகம் முதற்செய்யுள்[தொகு]

மின்னுருவாய் முன்னுருவாய் வேதம் நான்கில்
விளங்கொளியாய் முளைத்தெழுந்த திங்கள் தானாய்
பின்னுருவாய் முன்னுருவில் பிணிமூப் பில்லாப்
பிறப்பிலியாய் இறப்பதற்கை எண்ணா(து) எண்ணும்
பொன்னுருவாய் மணியுருவில் பூதம் ஐந்தாய்ப்
புனலுருவாய் அனலுருவில் திகழும் சோதி
தன்னுருவாய் என்னுருவில் சின்ற எந்தை
தளிர்புரையும் திருவடிஎன் தலைமே லவ்வே. [2]

உசாத்துணை[தொகு]

  1. http://www.tamilkalanjiyam.com/literatures/divya_prabandham/thirunedunthaandakam.html
  2. திருமங்கையாழ்வார், திருநெடுந்தாண்டகம், பானல் 1
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருநெடுந்தாண்டகம்&oldid=1717902" இருந்து மீள்விக்கப்பட்டது