திருப்பள்ளியெழுச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

திருப்பள்ளியெழுச்சி என்பது இறைவனைத் துயில் எழுப்புவதாகவும் நம்மில் ஆன்மீக விழிப்பின்றி உறங்கிக் கொண்டிருக்கும் ஆத்மாவைத் துயிலெழுப்பி இறைவனின் கருணையை உணரச் செய்வதாகவும் பாடப்படும் பாடல்கள் ஆகும். 'சுப்ரபாதம்' என்பது இதன் இணையான சமஸ்கிருதச் சொல்லாகும்.

திருவரங்கத்தைச் சேர்ந்த தொண்டரடிப்பொடியாழ்வார் தமிழில் இயற்றிய அரங்கநாதன் மீது பாடப்பட்ட திருப்பள்ளியெழுச்சியே திருப்பள்ளியெழுச்சிவகை படைப்புகளுக்கு முன்னோடியாக திகழ்கிறது.

பாவை நோன்பு மற்றும் திருவெம்பாவை நோன்பு பொதுவாகக் கன்னிப் பெண்களே கடைப்பிடிப்பர். நோன்புகாலத்தில் கன்னிப் பெண்கள் அதிகாலையில் எழுந்து தம் தோழியரைத் துயில் எழுப்பி அழைத்துக் கொண்டு நீர் நிலைகளுக்குச் சென்று திருப்பாவையில் கண்ணன் மற்றும் திருவெம்பாவையில் அம்மையப்பர் புகழ்பாடி நீராடுவர். அப்பொழுதில் பாடும் பாடல்களாகவும் இவை கொள்ளப்படுகின்றன.

திருப்பதியில் அதிகாலையில் ஆலயத்தில் இசைக்கப்படும் 'ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம்', இந்தியா முழுவதிலும் பிரசித்தி பெற்ற ஒன்று. சமஸ்கிருத மொழியிலமைந்த இந்த சுப்ரபாதம், கிபி பதினைந்தாம் நூற்றாண்டில் மணவாள மாமுனிகள் ஆணைக்கிணங்க காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பிரதிவாதிபயங்கரம் அண்ணங்காச்சாரியரால் இயற்றப்பட்டு இன்றளவும் பாடப்பெற்றுவருகிறது. எம். எஸ். சுப்புலக்ஷ்மியின் குரலில் இந்த சுப்ரபாதம் மிகுந்த வரவேற்பை பெற்றதோடு இதன் தமிழ் வடிவமும் எம். எஸ். சுப்புலக்ஷ்மியாலே பாடப்பட்டுள்ளது.

மார்கழியில் மட்டும் திருப்பதி உட்பட அனைத்து வைணவ ஆலயங்களிலும் தொண்டரடிப்பொடியாழ்வார் தமிழில் இயற்றிய அரங்கநாதன் மீது பாடப்பட்ட திருப்பள்ளியெழுச்சியே பாடப்பெற்று வருகிறது.

இவை தவிர சபரிமலையில் அதிகாலையில் 'ஐயப்ப சுப்ரபாதம்' இசைக்கப்படுகிறது, விக்னேஷ்வர சுப்ரபாதம், பாடகர் கே. ஜே. யேசுதாசால் பாடப் பெற்றுள்ளது.

திருப்பள்ளியெழுச்சிப் பாடல்கள்[தொகு]

தொண்டரடிப்பொடியாழ்வாரின் திருப்பள்ளியெழுச்சி[தொகு]

கதிரவன் குணதிசைச் சிகரம் வந்து அணைந்தான்!
கனைஇருள் அகன்றது, காலை அம் பொழுதாய்,
மது விரிந்து ஒழுகின மாமலர் எல்லாம்,
வானவர், அரசர்கள் வந்து வந்து ஈண்டி
எதிர்திசை நிறைந்தனர், இவரொடும் புகுந்த
இரும் களிற்று ஈட்டமும் பிடியொடு முரசும்
அதிர்தலில் அலைகடல் போன்று உளது எங்கும்,
அரங்கத்து அம்மா, பள்ளி எழுந்தருளாயே!

மணிவாசகரின் திருப்பள்ளியெழுச்சி[தொகு]

கூவின பூங்குயில்; கூவின கோழி;
குருகுகள் இயம்பின; இயம்பின சங்கம் ;
ஓவின தாரகை ஒளி; ஒளி உதயத்து
ஓருப்படுகின்றது; விருப்பொடு நமக்குத்
தேவ நற்செறிகழல் தாளிணை காட்டாய் !
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே !
யாவரும் அறிவரியாய் ! எமக்கெளியாய் !
எம்பெருமான் பள்ளியெழுந்தருளாயே !

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருப்பள்ளியெழுச்சி&oldid=1809450" இருந்து மீள்விக்கப்பட்டது