பெரிய திருமடல்
பெரிய திருமடல் என்பது திருமங்கையாழ்வாரால் இயற்றிய ஒரு தமிழ் இலக்கியமாகும். இது நாராயணனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு இயற்றியப்பட்ட இந்நூல் மடல் என்னும் சிற்றிலக்கிய வகை முன்னோடி நூல்களில் ஒன்றாகயுள்ளது. நாலாயிர திவ்வியப் பிரபந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. இந்நூல் பெண்கள் மடலூர்தல் இல்லை என்ற பழைய மரபை மாற்றி இயற்றப்பட்டுள்ளது.[1][2]
இலக்கியப் புரட்சி
[தொகு]மடலேறுதல் என்பது தலைவன் தான் விரும்பிய தலைவியை அடைவதற்காக மடலூர்தல் வழக்கம். காதலில் தோல்வியுற்ற சங்ககாலத் தலைவன், ஊரார் தன் காதலை உணரும் பொருட்டு மேனியில் சாம்பலைப் பூசிக் கொண்டு யாரும் சூடாத எருக்கு போன்ற மலர்களைச் சூடிக் கொண்டு பனைமரத்தின் அகன்ற மடல்களால் செய்யப்பட்ட குதிரை ஒன்றில் ஊர்ந்து காண்போர் கேட்கும் வண்ணம் தலைவியின் பெயரைக் கூவிக்கொண்டு செல்தல் ஆகும். சங்கக் காலத்தில் பெண்கள் மடலேறுதல் வழக்கமில்லை.
பழைய மரபை மாற்றி பெரிய திருமடலில் ஆழ்வார் தன்னை நாயகியாக எண்ணி இறைவன் மீது எல்லை இல்லாத பேரின்பக் காதல் கொண்டுள்ளாள் தலைவி மடலேறுகிறார்.[3][1]
பாசுர எண்ணிக்கை
[தொகு]பெரிய திருமடல் பாசுர எண்ணிக்கையில் அறிஞர்களிடையே பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. பெரும்பாலான பதிப்பாசிரியர்கள் வேதாந்த தேசிகரின் பிரபந்தசாரக் குறிப்பைப் பின்பற்றி[note 1], பெரிய திருமடலை 78 பாசுரங்களாகக் கொள்கின்றனர். சில ஏட்டுப் பிரதிகளின்படி, சிறிய திருமடல் 38 பாசுரங்களாகவும், பெரிய திருமடல் 80 பாசுரங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இரு மடல்களும் சேர்ந்து 118 பாசுரங்கள் என்ற கணக்கு வருகிறது. அப்பிள்ளையாசிரியர் ஒரு கண்ணியை ஒரு பாசுரமாகக் கணக்கிட்டு, பெரிய திருமடலில் 148.5 பாசுரங்கள் இருப்பதாகக் குறிப்பிடுகிறார்.[4]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- http://www.tamilvu.org/courses/degree/p103/p1033/html/p10335fr.htm
- http://www.tamilvu.org/courses/degree/p103/p1033/html/p103323.htm
- 1 2 "2.3 மடல் இலக்கியம்". www.tamilvu.org. Retrieved 2026-04-13.
- ↑ "Tamil Virtual University". www.tamilvu.org. Retrieved 2026-04-13.
- ↑ Kanaiyazhi (2024-10-02). Kanaiyazhi - October 2024. Pustaka Digital Media.
- ↑ "வைணவமும் தமிழும்/நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் - விக்கிமூலம்". ta.wikisource.org. Retrieved 2026-04-13.
- ↑ தே.பி. 379
<ref> tags exist for a group named "note", but no corresponding <references group="note"/> tag was found.