திருமங்கையாழ்வார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
திருமங்கை ஆழ்வார்
பிறப்புதிருக்குரையலூர், சீர்காழி தமிழ்நாடு
இறப்புதிருநெல்வேலி மாவட்டம்
இயற்பெயர்கலியன்

திருமங்கையாழ்வார் (Thirumangai Alvar) என்பவர் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் இளையவர் மற்றும் இறுதியானவர். சோழ நாட்டில் உள்ள திருவாலிதிருநகரி என்னும் ஊருக்கு அருகில் உள்ள திருக்குரையலூரில் பிறந்தவர். இவரது இயற்பெயர் 'கலியன்' ஆகும். ஆதியில் இவர் சோழமன்னனுக்கு படைத்தலைவனாக இருந்தார். ஒருமுறை போர்க்களத்தில் இவருடைய வீரத்தைக் கண்ட அரசன் இவருக்கு சோழதேசத்தின் "திருமங்கை" நாட்டின் மன்னனாக்கினான். அன்று முதல் இவர் "திருமங்கை மன்னன்" என அழைக்கப்பட்டார்.

(வைணவ)க் காதல்[தொகு]

குமுதவல்லி எனும் மங்கை மீது கொண்ட காதலினால் வைணவம் அனுசரிக்க ஆரம்பித்தவர், அவளின் விருப்பத்தின்படி திருமால் அடியார்களுக்கு தினமும் அன்னம் இடுவதையும், திருக்கோயில் கைங்கரியங்களில் ஈடுபடுவதையும் செய்துவரலானார். காலப்பொழுதில் தன்னை முழுமையாக இதில் ஈடுபடுத்திக் கொண்டு தன் செல்வங்களையும், அரசு செல்வங்களையும் முழுக்க இழந்தவரானார். கடமையை நிறைவேற்ற யாசகமும் கைக்கொடுக்காதப்படியால் களவாடியாவது அடியார்களுக்கு தினமும் அன்னம் இடுவதையும், திருவரங்கத் திருக்கோயிலின் கைங்கரியங்களையும் செய்துவந்தார். இச்செயலை மெச்சி, இறைவனே இவர் களவாடும் பாதையில் வந்து, இவரை ஆட்கொண்டதோடு வேண்டிய செல்வங்களையும் கொடுத்தருளினார்.

இலக்கிய பணி[தொகு]

இவர் 1137 பாடல்கள் பாடியுள்ளார். அவைகளாவன

திருமங்கையாழ்வாரின் சிலை ஆழ்வார்திருநாகரி திருக்கோவில்
  • திருவெழுக்கூற்றிருக்கை (ஒரு பாடல் - 47 அடிகள்)
  • சிறிய திருமடல் (ஒரு பாடல் - 155 அடிகள்)
  • பெரிய திருமடல் (ஒரு பாடல் - 297 அடிகள்)
  • திருநெடுந்தாண்டகம் (30 பாடல்கள்)
  • திருக்குறுந் தாண்டகம் (20 பாடல்கள்)
  • பெரிய திருமொழி (1084 பாடல்கள்)

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருமங்கையாழ்வார்&oldid=2997731" இருந்து மீள்விக்கப்பட்டது