உள்ளடக்கத்துக்குச் செல்

நம்பாடுவார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நம்பாடுவார் வைணவ அடியார்களில் ஒருவராவார்.[1] இவர் பாணர் மரபில் திருக்குறுங்குடிக்கு அருகில் உள்ள முனி எனும் ஊரில் பிறந்தவர். இவர் யாழை மீட்டி திருமாலை கைசிகப் பண் இசைத்துப் பாடிவந்தார். ஒருமுறை திருமாலைப் போற்றிப் பாடியவாறு அடர்ந்த காட்டினுள் நுழைந்தார். அதனால் அங்கிருந்த பிம்ராட்சனின் பிடியில் சிக்கினார். பிரம்ம ராட்சன் தன்னை உண்ணும் முன் திருமாலை வணங்கி வருவதாக வேண்டினார். அதற்கு பிரம்மராட்சனும் இணங்கினார். நம்பாடுவார் திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயிலுக்குச் சென்று திருமாலை வணங்கினார். பின்பு பிரம்மராட்சனிடம் வந்து தன்னை உண்ணுமாறு கூறினார். ஆனால் பிரம்மராட்சன் தன்னுடைய பாவங்களை நீக்கி வீடு பேறு அடைய வைக்க வேண்டுமென அவரிடம் வேண்டினார். அதன் படி நம்பாடியார் பாடலைப் பாடி பிரம்மராட்சனை வீடுபேறு அடைய வைத்தார். [2][3] இவர் திருக்குறுங்குடி பெருமாள் கோயிலில் உள்ள திருமாலின் அடி சேர்ந்ததாக நம்பிக்கை. இவர் கைசிகப் பண் இசைத்து பாடியநாளான கார்த்திகை மாத வளர்பிறை ஏகாதசி நாளன்று கைசிக ஏகாதசி விரதம் இருப்பர்.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. அருள்மிகு அழகிய நம்பிராயர் திருக்கோயில் தினமலர் கோயில்கள்
  2. கைசிக ஏகாதசியின் மகிமை
  3. அனைத்து தோசங்களைப் போக்கி மோட்சம் தரும் கைசிக ஏகாதசி விரதம்!

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நம்பாடுவார்&oldid=2852517" இலிருந்து மீள்விக்கப்பட்டது