உள்ளடக்கத்துக்குச் செல்

சடாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சடாரி அல்லது சடகோபம் என்பது திருமாலின் திருப்பாதம் பொறிக்கப்பெற்ற கிரீடமாகும். இந்த சடாரி வைணவ கோவில்களில் இறை தரிசனத்திற்கு பிறகு, பெருமாளின் திருவடிகளாக பாவித்து, பக்தர்களின் தலையில் வைத்து எடுக்கப்படுகிறது. [1]

சடகோபன் என்பவர் நாலாயிரதிவ்யபிரபந்த பாடல்களை பாடியதால் நம்மாழ்வாராக அறியப்பெறுகிறார். வைணவர்கள் நம்மாழ்வாரே, திருமாலின் திருவடியாக இருப்பதாக நம்புகிறார்கள். அதனால் திருமால் திருவடி சடகோபம் என்று அழைக்கப்பெறுகிறது.[2]

வானமாமலை தலத்தில் மட்டும் சடாரியில் நம்மாழ்வாரின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம்[தொகு]

  1. சடாரி தத்துவம்!
  2. http://www.jeyamohan.in/?p=9346,

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சடாரி&oldid=3242716" இலிருந்து மீள்விக்கப்பட்டது