வர்க்காரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வர்க்காரி

வர்க்காரி (Varkari) (மராத்தி: वारकरी என்பது மகாராட்டிர மாநிலத்தை மையமாகக் கொண்ட ஒரு வைணவ பக்தி இயக்க வாழ்க்கை முறை. மராத்திய மொழியில் வர்க்காரி என்பதற்குப் புனித நடைப்பயணி (பாதயாத்ரீகர்) என்று பொருள். ஒவ்வோர் ஆண்டும் இவர்கள் பண்டரிபுரத்திற்கு மேற்கொள்ளும் புனிதப் பயணத்தால் இப் பெயர் ஏற்பட்டுள்ளது.


வர்க்காரிகள் விதோபா எனப்படும் விட்டலரை வணங்குகின்றனர். ஞானேஸ்வர் (தியானேஸ்வர்), நாமதேவர், துக்காராம், ஏகநாதர் போன்றோர் வர்க்காரி குருக்களில் குறிப்பிடத்தக்கவர்.

வர்க்காரி வாழ்க்கை முறை ஒழுக்கத்தையும் நன்னெறியையும் போதிக்கிறது. ஏகாதசியில் விரதமிருத்தல், மது, புகையிலை ஆகியவற்றைத் தவிர்த்தல், சைவ உணவு முறை போன்றவற்றை வர்க்காரி இயக்கத்தினர் கடைப்பிடிக்கின்றனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வர்க்காரி&oldid=1369784" இருந்து மீள்விக்கப்பட்டது