ஏகநாதர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இவர் மஹாராஷ்டிரத்தைச் சேர்ந்தவர். பைத்தான் என்னும் ஊரில் பிறந்தார். சிறு வயதிலேயே இவரது உள்ளத்தில் பக்தி, கனல் விட்டு எரிந்தது. இல்வாழ்வில் ஈடுபட்ட இவர் தீண்டத்தகாதோரிடம் எல்லையற்ற அன்புடையவரானார். கண்ணனை அனைத்திலும் கண்டார். கண்ணனின் தீவிர பக்தர், பெரிய பாகவத புருஷர், சிறந்த இல்லற நெறியாளர், பெரிய ஞானி. இன்றும் மக்களுக்கு உயரிய எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றார். பதினாராம் நூற்றாண்டில் துக்காராம் என்பவரின் விவசாய குடம்பத்தில் பிறந்தார். அனைவரிலும் மிகச் சிறந்த பக்தர் இவர். பைதான் பிராம்மணராகிய ஏகநாத் ஞானேஸ்வரி என்ற நூல் (கி.பி. 1590) தற்போது நமக்கு கிடைக்கப்பட்டதற்கு இவரே காரணம். பல மராத்தி பாடல்களை இவர் கண்டுபிடித்து கொடுத்துள்ளார். நாட்டில் பஞ்சம் ஏற்பட்டபொழுது அதில் இருந்து தப்பி பிழைத்தார். இவர் தீண்டாமைக்கு எதிராகவும் செயல்பட்டார். இதனால் பிராமணர்களால் இவர் வெறுக்கப்பட்டார். இறுதியில் இவர் ஓர் ஆற்றில் மூழ்கி இறந்தார்.

(விவரங்களுக்கு பார்க்க. மாயையும் எதார்த்தமும் என்ற புத்தகம். அலைகள் வெளியீட்டகம், சென்னை.24)

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏகநாதர்&oldid=2718464" இருந்து மீள்விக்கப்பட்டது