பட்டர்
பட்டர் பொதுவாக வைணவக் கோயில்களில் பூஜை செய்பவர்களை மட்டும் பட்டர் என்பர். பட்டர் என்பது ஒரு வைணவ இலக்கிய ஆசிரியரான 1123-ஆம் ஆண்டில் பிற்ந்த நம்மாழ்வார் பிறந்த நாளுக்கு அடுத்த நாள் பட்டர் பிறந்தார்.[1] தந்தை கூரத்தாழ்வார். தாயார் பெயர் ஆண்டாள் . பிறந்தது இரட்டைப்பிள்ளை. இவருடன் அடுத்துப் பிறந்தவர் ஸ்ரீராமபிள்ளை . இராமானுசர் தம் சீடரான 'எம்பார்' என்பவரை அனுப்பி, இரு குழந்தைகளையும் எடுத்துவரச் செய்து, மூத்தவருக்குப் பராசரப் பட்டர் என்றும், இளையவருக்கு வேதவியாச பட்டர் என்றும் பெயர் சூட்டிப் பெருமை செய்தார். பிற்காலத்தில் மூத்தவர் 'பெரிய பட்டர்' எனவும், இளையவர் 'ஸ்ரீராம பிள்ளை' எனவும் போற்றப்படலாயினர். பட்டர் என்றாலே பெரிய பட்டரைத்தான் குறிக்கும்.
பட்டர் தன் மனைவி இறந்தபின் மற்றொரு மனைவியை மணந்துகொண்டு வாழ்ந்த இல்லறத்தார். தம் 28-ஆம் அகவையில் மூளை வெடித்து மாண்டார்.
செயல்கள்
- பட்டர் தெருவில்விளையாடிக்கொண்டிருந்தாராம். அப்போது சர்வக்ஞர் என்னும் பட்டர் பல்லக்கில் வந்தாராம். பட்டர் ஒரு பிடி மண்ணை அள்ளி இது எவ்வளவு என்று கேட்டாராம். சர்வக்ஞர் தெரியாமல் விழித்தாராம். பட்டர் 'இது ஒரு பிடி' எனச் சொல்லி நகைத்தாராம். (கற்பனை)
- வடநாட்டு வேதாந்தி ஒருவர் திருவரங்கம் வந்தார். பட்டர் அவருடன் வாதிட்டு, திருமங்கையாழ்வாரின் திருத்தாண்டகம் 21-ஆம் பாடலாகிய 'மைவண்ண நறுங்குறிஞ்சிக் குழல்பின் தாழ' என்னும் பாடலுக்கு விரிவுரை கூறி வேதாந்தியை வென்றார். வேதாந்தி பட்டரின் சீடர் ஆனார். இவர் நஞ்சீயர் எனப் போற்றப்படுபவர்.
- ஆளவந்தார் திருநாடு அலங்கரித்தாரை (இறந்தவரை) அவரது மாணாக்கர் இராமானுசர் கண்டார். ஆளவந்தாரின் விரல்கள் மூன்று மடங்கியிருந்தன. அதற்குக் காரணம் அவரது மூன்று ஆசைகள் நிறைவேறவில்லை என இராமானுசர் கூறினாராம். அவற்றைத் தாம் நிறைவேற்றித் தருவதாகப் பட்டர் இராமானுசரிடம் வாக்களித்தாராம். அப்போது ஆளவந்தாரின் மடங்கியிருந்த விரல்கள் விரிந்துகொண்டனவாம். (கதை) அவரது ஆசைகள்: (1) வியாச பராசரரிடத்திலே நன்றி பாராட்டும் ஒரு சீடர் வளர்ப்பக்கப்படவேண்டு, (2) 'நம்மாழ்வார் திருமொழி வியாக்கியானம்' எழுதப்ப வேண்டும். (3) வேத சூத்திரங்களுக்கு விசிட்டாத்துவைதம் நெறியில் விளக்கம் எழுதப்பட வேண்டும். - என்பன.
- பட்டர் 70 சுலோகங்கள் கொண்ட 'திருமஞ்ச கட்டியம்' என்னும் நூல் ஒன்றும் செய்தார் எனவும், அவருக்குப் பிறகு அவரது குடும்பத்தார் அந்த நூலின் ஏடுகளை ஆளுக்குக் கொஞ்சமாகப் பங்கிட்டுக்கொண்டார்கள் என்றும், அவற்றுள் சில ஓலைகள் சிலரிடம் இருந்ததாகவும் தெரிகிறது.
இவர் பல வடமொழி நூல்கள் இயற்றியுள்ளார்.
இவர் இயற்றிய தமிழ் நூல்கள்
- திருவாய்மொழி தனியன்கள் - தமிழ் வெண்பாக்கள்
- கைசிகப் புராண உரை
- மைவண்ண நறுங்குஞ்சி வியாக்கியானம்
கருவிநூல்
[தொகு]- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, இரண்டாம் பாகம், பதிப்பு 2005
அடிக்குறிப்பு
[தொகு]- ↑ கலியாண்டு 4424 (கி.பி.1123) வைகாசி விசாகத்தை அடுத்த நாள்