பொன்னடிக்கால் ஜீயர்
Appearance
பொன்னடிக்கால் ஜீயர் | |
---|---|
பிறப்பு | அழகிய வரதர் வானமாமலை, நாங்குநேரி |
மணவாள மாமுனிகளின் முதன்மை சீடர்களுள் ஒருவரான பொன்னடிக்கால் சீயர் நாங்குநேரியிலுள்ள வானமாமலை எனும் சிற்றூரில் புரட்டாசி மாதம் புனர்பூசம் நட்சத்திரத்தில் அரங்காச்சாரியார் எனும் பண்டிதருக்கு இரண்டாம் மகவாய் பிறந்தார். பெற்றோர் இவருக்கு இட்ட பெயர் அழகியவரதர் என்பதாகும்.
பிறபெயர்கள்
[தொகு]- வானமாமலை சீயர்
- வானாத்ரி யோகி
- இராமானுச சீயர்
- இராமானுச முனி
- வானமாமலை இராமானுச சீயர் (வானமாமலை மூலவரான தெய்வநாயக பெருமாள் அழைத்தருளியது)
- பொன்னடிக்கால் சீயர் ( மணவாள மாமுனிகள் அருளியது )
சீடர்கள்
[தொகு]- தொட்டாச்சாரியர் எனப்படும் சோழசிம்மபுரம் மஹார்யர்
- சமரபுங்கவாச்சாரியர்
- சுத்த சத்வம் அண்ணா
- ஞானக்கண்ணாதன்
- இராமானுசம் பிள்ளை
- பள்ளக்காய் சித்தர்
- கோஷ்டி புரத்தாயர்
- அப்பாச்சிரியரண்ணா
இலக்கியபணி
[தொகு]திருப்பாவை சுவபதேச வியாக்யானம் எனப்படும் திருப்பாவை விளக்கவுரை
சிறப்பு
[தொகு]- மணவாளமாமுனிகளின் முதல் மாணவர். மாமுனிகள் சந்நியாசம் ஏற்கும் முன்னரே பொன்னடிக்கால் சீயர் மாமுனிகளை தன் ஆச்சாரியனாக வரித்துக்கொண்டார்.
- மணவாளமாமுனிகள் ஆணைப்படி வானமாமலை மடத்தை உருவாக்கி அதன் முதல் மடாதிபதியாய் கோயில்நிர்வாகம் செய்தவர்.
- அப்பிள்ளை மற்றும் அப்புள்ளார் ஆகியோரை ஆட்கொண்டு மணவாளமாமுனிகளுக்கு சீடர்களாக்கியது
- மணவாளமாமுனிகள் தனக்கு அமைத்துக் கொண்ட அஷ்டதிக் கஜங்கள் போன்றே பொன்னடிக்கால் சீயருக்கும் தனியே அஷ்டதிக் கஜங்கள் அமைத்துக் கொடுத்து வைணவத்தை போதிக்க பணித்தருளினார்.
தனியன்
[தொகு]ஆச்சாரியரின் புகழ்பாடும் வடமொழி தனியன் இதோ:
- ரம்ய ஜாமாத்ரு யோகீந்த்ர பாதரேகா மயம் ஸதா
- ததா யத்தாத்ம ஸத்தாதிம் ராமானுஜ முநிம் பஜே
வைணவம் தொடரின் ஒரு பகுதி |
---|