கபீர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கபீர்
Kabir
கபீரும் அவரது சீடர்களும் (ஓவியம்)
கபீரும் அவரது சீடர்களும் (கிபி 1825 ஆண்டு ஓவியம்)
பிறப்பு அண். 1440
லகார்த்திரா, காசிக்கு அருகே (இன்றைய வாரணாசி)
இறப்பு அண். 1518
மகார்
பணி நெசவு, புலவர்
அறியப்படுவது பக்தி இயக்கம், சீக்கியம்,
கபீரின் நினைவாக 1952இல் வெளியிடப்பட்ட அஞ்சல் தலை

கபீர் (Kabīr, இந்தி: कबीर, பஞ்சாபி: ਕਬੀਰ, 1440 – 1518)[1][2][3][4] என்பவர் இந்தியாவின் ஒரு மதகுருவும் புனிதரும் ஆவார். இராமானந்தரால் சீடராக ஏற்றுக் கொள்ளப்பட்டவர். இந்து-முஸ்லிம் சமய ஒற்றுமைக்குப் பெரிதும் பாடுபட்டவர். கடவுளிடம் அன்பு செலுத்துவதே நற்கதி அடைய வழி என்றார். “உண்மையே இயல்பானது. அது எல்லோர் இதயத்திலும் உறைகின்றது. அவ்வுண்மை அன்பினால் வெளிப்படுகிறது” என்ற கருத்தை உடையவர் “பக்தியை வலியுறுத்தாத சமயம் சமயமன்று” என்றார். காசிக்கருகே ‘லகர்டேலோ’ என்ற ஏரியில் தாமரை மலரிலிருந்த குழந்தையை முஸ்லிம் நெசவாளர் ஒருவர் எடுத்து வளர்த்தார்.

இராமானந்தரின் சீடரான கபீர் இந்தி மொழியில் எழுதிய இரு வரியிலான பாடல்களை தோஹே என்றழைக்கப்படுகிறது. 'தோ' என்பது இரண்டைக் குறிக்கிறது. இந்திய அரசின் ஜவுளித்துறை அமைச்சகம் கபீரின் பெயரில் சிறந்த நெசவாளருக்கான சந்த் கபீர் விருது வழங்குகிறது. இவரது பெயரில் உத்தரப்பிர்தேசத்தில் சந்த் கபீர் எனும் மாவட்டமும் உள்ளது. மேலும் கபீரின் நினைவை போற்றும் விதமாக, 1952ஆம் ஆண்டில் இந்திய அரசு கபீரின் உருவ அஞ்சல் தலை வெளியிட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Encyclopædia Britannica
  2. Carol Henderson Garcia; Carol E. Henderson (2002). Culture and Customs of India. Greenwood Publishing Group. பக். 70–. ISBN 978-0-313-30513-9. http://books.google.com/books?id=CaRVePXX6vEC&pg=PA70. பார்த்த நாள்: 12 July 2012. 
  3. Hugh Tinker (1990). South Asia: A Short History. University of Hawaii Press. பக். 76–. ISBN 978-0-8248-1287-4. http://books.google.com/books?id=n5uU2UteUpEC&pg=PA76. பார்த்த நாள்: 12 July 2012. 
  4. "Narrative Section of a Successful Application". Claflin University. பார்த்த நாள் 12 July 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கபீர்&oldid=2225528" இருந்து மீள்விக்கப்பட்டது