உள்ளடக்கத்துக்குச் செல்

தகனம் (உடல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தோனேசியா

இறந்தவரின் உடலை மின்எரிமேடை மூலம் அல்லது வெளி எரிபொருள் கொண்டு எரிப்பது தகனம் எனப்படுகிறது. மரணமடைந்து விட்ட மனிதனின் உடல் சமய வழக்கங்களின்படி மண்ணில் புதைக்கப்பட்டோ அல்லது எரியூட்டப்பட்டோ அழிக்கப்பட்டு வருகிறது. உலகில் அதிக அளவாக இறந்து விட்ட மனித உடல்கள் புதைக்கப்படுகின்றன. குறிப்பிட்ட சில சமய வழக்கங்களின்படியோ அல்லது இடநெருக்கடி காரணமாகவோ இறந்து விட்ட மனித உடல்கள் எரியூட்டப்பட்டும் அழிக்கப்படுகின்றன. இத்தகைய தகனத்தின் போது உடல் முழுமையாக எரிந்து சாம்பலாவதில்லை.பதிலாக எலும்புகள் மட்டுமே எரியா நிலையில் கிடைக்கின்றன. இந்த எரியா நிலை எலும்புகளை அரவை மூலம் பொடியாக்கப்பட்டு புனித சாம்பலாக இறந்தவரின் உறவினரிடம் அவரின் புனித சடங்கிற்காகக் கொடுக்கப்படுகிறது. இதை பெரும்பாலும் மின் தகன அமைப்பின் மூலம் இம்மாதிரி செயல்கள் நடைபெறுகின்றன.இந்த எரியூட்டலுக்கு விறகு, எரிவாயு, மின்சாரம் போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. இந்த எரியூட்டலில் விறகு கொண்டு செய்யப்படும் நிலை சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்துவதாக இருந்தாலும் இவைதான் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மாறாக விறகுகள் வைத்து எரிக்கப்படுவைகளில் விறகுகளின் சாம்பலை மனித உடல்களின் சாம்பல் என்று நினைத்து அந்த சாம்பலை சடங்கிற்கு பயன்படுத்தி வருகின்றனர்.[சான்று தேவை]

மின் எரிமேடை

[தொகு]

மின் எரிமேடைகளில் அதன் மின் உலைகளில் சுமார் 870 முதல் 980 டிகிரி சென்டிகிரேட் (பாரன்ஹிட்-1600 டிகிரி முதல் 1800 டிகிரி வரை) அளவு வெப்பநிலையில் உடல்கள் எரிக்கப்படுகின்றன.உடல்கள் எரிமேடையில் உள்ள மின்னூட்டத் தகடுகளில் மேல் வைக்கப்பட்டு மின்னேற்றம் செய்யப்படுகிறது. உடல்களை தகட்டில் செலுத்துவதற்கு முன் அவ்வுடல்களின் மீதுள்ள நகைகள் கழற்றப்படுகின்றன. ஆனால் இங்கிலாந்தில் அவ்வாறு கழற்றுவதில்லை.அவர்கள் சவப்பெட்டியில் வைத்து உடல்களை எரிக்கின்றனர் அப்பெட்டியில் வைப்பதற்குமின் ஆபரணங்களை கழற்றிவிடுவர். இவ் வெப்பநிலையில் உடலின் மிருதுவான சருமங்கள் எரிந்து (ஆக்சிஜனேற்றம் அடைந்து) ஆவியாகிவிடுகின்றன. இவ்வேலை நடைபெறுவதற்காக எடுத்துக்கொள்ளப்படும் நேரம் 2 மணி நேரம் மட்டுமே. பெரும்பாலும் அனைத்து நாடுகளிலும் ஒரு சமயத்தில் ஒரு உடலை மட்டுமே எரிக்க இம்மேடைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.பல உடல்களை ஒரே சமயத்தில் எரிக்க பல நாடுகள் தடை விதித்துள்ளன.

நவீன எரிமேடைகள்

[தொகு]

இப்போது எரிமேடைகள் கணினி மயமாக்கப்பட்டுள்ளன. எரியூட்டப்படுவதை பல நாடுகளில் பார்வையாளர்கள் பார்ப்பதில்லை இந்து சமயக் கோட்பாடு உடையவர்களுக்காக பார்க்க அனுமதிக்கிறார்கள். பெரியவர்கள் உடல்களின் எரியா எலும்புகளின் எடை சுமார் 2.4 கிலோ கிராம் இருக்கும். இவைகள் தனியாக புனித ஜாடி அல்லது சிறிய பெட்டிகளில் அடைத்து உறவினர்களிடம் கொடுக்கப்படும்.தற்கால எரிமேடைகளில் எரிபொருளாக இயற்கை வாயு, புரோப்பேன் வாயு போன்றவைகள் பயன்படுத்தப்படுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தகனம்_(உடல்)&oldid=2744774" இலிருந்து மீள்விக்கப்பட்டது