உள்ளடக்கத்துக்குச் செல்

துளசிதாசர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துளசிதாசர்
வாரணாசியின் சிறீகங்கா பப்ளிஷர்ஸ் 1949-ல் வெளியிடப்பட்ட துளசிதாசரின் படம், ராமசரிதமானஸ் இதழில் வெளியிடப்பட்டது.
பிறப்பு(1511-08-11)11 ஆகத்து 1511
சோரோன், தில்லி சுல்தானகம்
(நவீன உத்தரப் பிரதேசம், இந்தியா)
இறப்பு30 சூலை 1623(1623-07-30) (அகவை 111)[சான்று தேவை]
வாரணாசி, அயோத்தி இராச்சியம், முகலாயப் பேரரசு (நவீன வாரணாசி, உத்தரப் பிரதேசம், இந்தியா)
இயற்பெயர்இராம்போலோ துபே
சமயம்இந்து சமயம்
தலைப்புகள்/விருதுகள்கோசுவாமி, துறாவி , அபிநவ வால்மீகி, பக்தசிரோன்மணி
Sect associatedஇராமநந்தி சம்பிரதாயம்
தத்துவம்விசிட்டாத்துவைதம்
குருநரஹரிதாசர் (நரஹரியானந்தாச்சரியர்)
மேற்கோள்

சீதையும் இராமனும் முழுப் படைப்பிலும் வியாபித்திருப்பதை உணர்ந்து, அவர்கள் அனைவரையும் நான் கூப்பிய கைகளுடன் வணங்குகிறேன்”.[1][2]

Tulsidas Home in Varanasi Where Ramacharitra Manas Hanuman Chalisa was written located near Tulsi Ghat Varanasi
இராமசரிதமானஸ், அனுமன் சாலிசா போன்றவை எழுதப்பட்ட வாரணாசியின் துளசி படித்துறை அருகே அமைந்துள்ளது துளசிதாசரின் இல்லம்.

துளசிதாசர் என்று அழைக்கப்படும் இராம்போலா துபே (Rambola Dubey) (11 ஆகஸ்ட் 1511-30 ஜூலை 1623), இந்து சமயத்தைச் சேர்ந்த வைணவத் (இராமநந்தி சம்பிரதாயம்) துறவியும் கவிஞரும் ஆவார். இவர் இந்துக் கடவுள் இராமர் மீதான பக்திக்கு புகழ்பெற்றவர்.[3]  துளசிதாசர் சமசுகிருதம், அவதி மற்றும் பிராஜ் பாஷா ஆகிய மொழிகளில் பல பிரபலமான படைப்புகளை எழுதினார். மேலும், அனுமன் சாலிசா மற்றும் இராமரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட சமசுகிருத இராமாயணத்தின் மறுவடிவமான ராமசரிதமானஸ் என்ற காவியத்தின் ஆசிரியர் என்று நன்கு அறியப்பட்டவர்.[4][5]

துளசிதாசர் தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை வாரணாசி மற்றும் அயோத்தி நகரங்களில் கழித்தார்.[6] வாரணாசியில் உள்ள கங்கையில் உள்ள துளசி படித்துறை இவரது பெயரால் அழைக்கப்படுகிறது. இவர் வாரணாசியில் அனுமனை பார்த்ததாக நம்மப்படும் இடத்தில் சங்கட மோட்ச அனுமன் கோயிலை நிறுவினார். துளசிதாசர் இராமாயணத்தின் நாட்டுப்புற-நாடகத் தழுவலான இராமலீலை நாடகங்களைத் பரப்பத் தொடங்கினார்.[7]

இந்தி, இந்திய மற்றும் உலக இலக்கியங்களில் மிகச்சிறந்த கவிஞர்களில் ஒருவராக துளசிதாசர் பாராட்டப்படிகிறார்.[8][9][10][11] இந்தியாவின் கலை, கலாச்சாரம் மற்றும் சமூகத்தில் துளசிதாசர் மற்றும் இவரது படைப்புகளின் தாக்கம் பரவலாக உள்ளது. இன்றும் உள்ளூர் மொழி, இராமலீலை நாடகங்கள், இந்துஸ்தானி இசை, பிரபலமான இசை மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் தொடர்கிறது.[7][12][13][14][15][16]

வால்மீகி அவதாரம்

[தொகு]

துளசிதாசரை வால்மீகியின் மறு அவதாரம் என்று பலர் நம்புகிறார்கள்.[17] மகாபுராணங்களில் ஒன்பதாவது புராணமான பவிசிய புராணத்தில், இறைவன் இராமனின் புகழைப் பாடுவதற்கு கலி யுகத்தில் அவதாரம் எடுப்பதற்காக அனுமனிடமிருந்து வால்மீகி எவ்வாறு ஒரு வரத்தைப் பெற்றார் என்று சிவன் தனது மனைவி பார்வதியிடம் கூறுகிறார்.[18]

நாபதாசர் தனது பக்தமாலை என்ற நூலில் கலியுகத்தில் வால்மீகியே மீண்டும்துளசிதாசராக அவதாரம் எடுத்ததாக எழுதுகிறார்.[19][20][21][22] இதை இராமநந்தி பிரிவும் திடமாக நம்புகிறது.[18]

ஆரம்பகால வாழ்க்கை.

[தொகு]
துளசிதாசர் பிறந்த இடம்

பிறப்பு

[தொகு]

துளசிதாசர் இந்து நாட்காட்டியின்படி தமிழ் மாதமான ஆவணியில் (ஜூலை-ஆகஸ்ட்) சுக்ல பட்சத்தின் ஏழாவது நாளான சப்தமியில் பிறந்தார்.[23][24] இது கிரெகொரியின் நாட்காட்டி ஆகஸ்ட் 11,1511 உடன் தொடர்புடையது. இவரது பிறப்பிடமாக மூன்று இடங்கள் குறிப்பிடப்பட்டிருந்தாலும், பெரும்பாலான அறிஞர்கள் இந்த இடத்தை உத்தரபிரதேசத்தின் கன்ஷி ராம் நகர் மாவட்டத்தில் கங்கை ஆற்றங்கரையிலுள்ள ஒரு நகரமான சோரோன் என அடையாளம் காண்கின்றனர். 2012 ஆம் ஆண்டில் உத்தரபிரதேச அரசாங்கத்தால் துளசி தாசரின் பிறப்பிடமாக சோரோன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.[18][25] இவரது பெற்றோர் ஹுல்சி மற்றும் ஆத்மராம் துபே ஆவர். பெரும்பாலான ஆதாரங்கள் இவரை பரத்வாஜ கோத்திரத்தைச் சேர்ந்த சனாத்யா பிராமணர் என்று அடையாளம் காட்டுகின்றன. ஜார்ஜ் ஆபிரகாம் கிரியெர்சன் துளசிதாசர் பிறந்த ஆண்டை விக்ரமாண்டு 1568 (பொ.ஊ. 1511) என்று குறிப்பிடுகின்றனர்.[26] இந்திய அரசும் மாநில அரசுகளும் பிரபலமான கலாச்சாரத்தில் துளசிதாசர் பிறந்த ஆண்டிற்கு ஏற்ப பொ.ஊ. 2011 ஆம் ஆண்டில் இவரது 500 வது பிறந்த நாளைக் கொண்டாடின.

பயணங்கள்

[தொகு]

துறவியான பிறகு, துளசிதாசர் தனது பெரும்பாலான நேரத்தை வாரணாசி, பிரயாகை, அயோத்தி மற்றும் சித்ரகூடம் போன்ற இடங்களில் வாழ்ந்துள்ளார். மேலும் இந்தியா முழுவதும் பல இடங்களுக்குச் சென்று, பல்வேறு நபர்களுடன் உரையாடி, துறவிகள் மற்றும் சாதுக்களைச் சந்தித்து, தியானம் செய்தார்.[27] இந்துக்களின் நான்கு புனித தலங்கள் (பத்ரிநாத், துவாரகா, பூரி மற்றும் ராமேஸ்வரம்) மற்றும் இமயமலை இவர் மேற்கொண்ட பயணங்களைப் பற்றி மூல கோசைன் சரிதம் விவரிக்கிறது.[27][28] இன்றைய திபெத்திலுள்ள மானசரோவர் பகுதிக்கும் சென்று இராம்சரிதமனசில் நான்கு கதை சொல்பவர்களில் ஒருவரான காகபுசுண்டியை (காகம்) இவர் தரிசனம் செய்தார்.[29][30]

அனுமன் தரிசனம்

[தொகு]

துளசிதாசர் தனது படைப்புகளில் பல இடங்களில் அனுமன் மற்றும் இராமனை நேருக்கு நேர் சந்தித்ததாக சுட்டிக்காட்டுகிறார்.[27][31] அனுமன் மற்றும் இராமனுடனான இவரது சந்திப்புகள் பற்றிய விரிவான விவரங்கள் பிரியதாசரின் பக்திராசபோதினி என்ற படைப்பில் கொடுக்கப்பட்டுள்ளன.[32] பிரியதாசாரின் கூற்றுப்படி, துளசிதாசர் வாரணாசிக்கு வெளியே உள்ள காடுகளுக்கு காலையில் சென்று தண்ணீர் பானையில் நீரை எடுத்து வந்துள்ளார். நகரத்திற்குத் திரும்பியதும், மீதமுள்ள தண்ணீரை ஒரு குறிப்பிட்ட மரத்திற்கு ஊற்று வந்தார். அந்த மரத்தில் குடியிருந்த பிரேதம் என்ற தாகத்தைத் தணிக்கும் ஒரு வகை பேய் ( எப்போதும் தண்ணீருக்காக தாகமாக இருப்பதாக நம்பப்படுகிறது) துளசிதாசர் முன் தோன்றி இவருக்கு ஒரு வரத்தை வழங்கியது.[33] துளசிதாசர் தனது கண்களால் இராமனைப் பார்க்க விரும்புவதாகக் கேட்கிறார். அதற்கு பிரேதம் அது தனது சக்திக்கு அப்பாற்பட்டது என்றும் அனுமனிடம் வேண்டினால் வரம் கிடைக்கும் எனவும் துளசிதாசரை வழிநடத்தியது. மேலும் துளசிதாசரின் இராமகதையைக் கேட்க தினமும் ஒரு தொழு நோயாளியைப் போல அனுமன் தினமும் வந்து செல்வதாகவும் கூறுகிறார்.

அன்று மாலை தனது கதையைக் கேட்க வந்த தொழுநோயாளியை பின்தொடர்ந்து காடுகளுக்குச் செல்கிறார். இன்று சங்கட மோட்ச அனுமன் கோயில் அமைந்துள்ள இடத்தில்[34], துளசிதாசர் தொழுநோயாளியின் காலில் விழுந்து, "நீ யார் என்று எனக்குத் தெரியும்" என்றும் "நீ என்னிடமிருந்து தப்பிக்க முடியாது" என்றும் கூறுகிறார். அவர் அறியாதவர் போல நடித்தாலும் துளசிதாசர் மனம் தளரவில்லை. இறுதியில் தொழுநோயாளி தனது அனுமன் வடிவத்தை வெளிப்படுத்தி துளசிதாசரை ஆசீர்வதித்தார். மேலும் துளசிதாசர் அனுமனிடம் இராமனை நேருக்கு நேர் பார்க்க விரும்புவதாகவும் கூறினார். அனுமன் சித்திரகூடம் சென்றால் இராமனை காணலாம் எனவும் கூறுகிறார்.

இராமனின் தரிசனம்

[தொகு]

பிரியதாசாரின் கூற்றுப்படி, துளசிதாசர் அனுமனின் அறிவுறுத்தலைப் பின்பற்றி சித்ரகூடம் பகுதியில் ராம்காட் என்ற இடத்தில் ஒரு ஆசிரமத்தில் வசிக்கத் தொடங்கினார். ஒரு நாள் துளசிதாசர் சித்ரகூட மலையை சுற்றிவருகிறார். அபோது பச்சை நிற ஆடைகளை அணிந்த இரண்டு இளவரசர்கள், கறுப்பு நிறத்திலும் சிகப்பு நிறத்திலுமான இரு குதிரைகள் மீது ஏறி கடந்து செல்வதை பார்க்கிறார். துளசிதாசர் அதைக் கண்டு மயங்கி விடுகிறார்.[27][29][34] துளசிதாசர் இந்த சம்பவத்தை கீதாவளி பாடலில் குறிப்பிட்டுள்ளார். [27]

அடுத்த நாள் காலை, புதன்கிழமை, அமாவாசை நாளில், விக்ரம் 1607 (பொ.ஊ. 1551 அல்லது பொ.ஊ. 1621 (பொ.ஊ. 1565) சில ஆதாரங்களின்படி, ராமர் மீண்டும் துளசிதாசருக்கு தோன்றினார்.[27][28][29][34]

இராமசைரிதமானஸ்

[தொகு]

துளசிதாசர் இந்த நூலை விக்ரம்_நாட்காட்டி 1631ல் (பொ.ஊ. 1574) அயோத்தி நகரில் இயற்றியுள்ளார்.[n 1] [37]

இந்த நூல் எழுதப்பட்டபோது இந்தியாவில் முகலாய மன்னர் அக்பர் ஆட்சியிலிருந்தார். இதிலிருந்து துளசிதாசரும் ஆங்கிலக்கவிஞரான வில்லியம் ஷேக்ஸ்பியரும் சமகாலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வருகிறது.[n 2][n 3]

இந்த நூல் வால்மீகி இராமாயணத்தின் மறுஆக்கமாக கருதப்பட்டாலும்[43][44][45][46][47] [n 4], அவதி என்ற பேச்சு வழக்கில் எழுதப்பட்ட இந்த நூல்[57][58][59], மொழி பெயர்ப்பு இல்லை. உண்மையில், இந்த நூல் சமசுகிருதம் மற்றும் பிற இந்திய மொழியில் எழுதப்பட்டுள்ள பல்வேறு இராமாயணங்களையும், புராணங்களையும் தழுவி உருவாக்கப்பட்டுள்ளது.

இறப்பு

[தொகு]

துளசிதாசர் தனது 91வது வயதில், 1623 ஜூலை 31 அன்று (விக்ரம் 1680ஆம் ஆண்டின் சிரவண மாதம்) கங்கை ஆற்றங்கரையில் அமைந்துள்ள அசி படித்துறையில் காலமானார். இவரது பிறந்த ஆண்டைப் போலவே, பாரம்பரிய கணக்குகளும் வாழ்க்கை வரலாற்றாசிரியர்களும் இவரது இறப்பு தேதியில் உடன்படவில்லை.[60][61]

இதனையும் காண்க

[தொகு]

குறிப்பு

[தொகு]
  1. In verse 1.33.2[35] of Bālkānd, the first chapter of Rāmcaritmanas, Tulsidas mentions 1631 as the date according to Vikram Samvat calendar, which is 1574 in கிரெகொரியின் நாட்காட்டி or பொது ஊழி.[36]
  2. Pronounced as tool-see-DAHSS [38]
  3. Tulsidas was a contemporary of அக்பர், மகாராணா பிரதாப், and வில்லியம் சேக்சுபியர்[39][40][41][42]
  4. In fact, Tulsidās is regarded as the incarnation of வால்மீகி, the author of the original இதிகாசம் Ramayana in Sanskrit[48][49][50][51][52][53][54][55][56]

மேற்கோள்கள்

[தொகு]
  1. मानस पियूष भाग १, गीताप्रेस गोरखपुर, २०११ रीप्रिंट, पेज ३५.
  2. Rambhadracharya 2008, p. 12: सीय राममय सब जग जानी । करउँ प्रनाम जोरि जुग पानी ॥ (Ramcharitmanas 1.8.2). (Note: Siyaramamay means to be manifest of Sita and Rama. It does not mean to be born of Sita and Rama.)
  3. pp. 23–34.[சான்று தேவை]
  4. K.B. Jindal (1955), A history of Hindi literature, Kitab Mahal, ... The book is popularly known as the Ramayana, but the poet himself called it the Ramcharitmanas or the 'Lake of the Deeds of Rama' ... the seven cantos of the book are like the seven steps to the lake ...
  5. Lallan Prasad Vyas (1992), Ramayana, its universal appeal and global role, Har-Anand Publications, ... Its original name is Ram Charit Manas, but people call it Tulsi Krit Ramayan. (This has been the custom to name the Ramayan after its author). Tulsi Krit Ramayan was written in the 16th Century AD. This is most popular and world renowned ...
  6. Prasad 2008, quoting Mata Prasad Gupta: Although he paid occasional visits to several places of pilgrimage associated with Rama, his permanent residence was in Kashi.
  7. 7.0 7.1 Handoo 1964: ... this book ... is also a drama, because Goswami Tulasidasa started his Ram Lila on the basis of this book, which even now is performed in the same manner everywhere.
  8. Prasad 2008: He is not only the supreme poet, but the unofficial poet-laureate of India.
  9. Prasad 2008: Of Tulasidasa's place among the major Indian poets there can be no question: he is as sublime as Valmiki and as elegant as Kalidasa in his handling of the theme.
  10. Jones, Constance; Ryan, James D. (2007). Encyclopedia of Hinduism (Encyclopedia of World Religions) (Hardbound, Illustrated ed.). New York City, United States of America: Infobase Publishing. p. 456. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780816054589. It can be said without reservation that Tulsidas is the greatest poet to write in the Hindi language. Tulsidas was a Brahmin by birth and was believed to be a reincarnation of the author of the Sanskrit Ramayana, Valmikha singh.
  11. Sahni, Bhisham (2000). Nilu, Nilima, Nilofara. New Delhi, India: Rajkamal Prakashan Pvt Ltd. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788171789603.
  12. Lutgendorf 1991: ... – scores of lines from the Rāmcaritmānas have entered folk speech as proverbs – ...
  13. Mitra, Swati. Good Earth Varanasi City Guide. New Delhi, India: Eicher Goodearth Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788187780045.
  14. Subramanian, Vadakaymadam Krishnier (2008). Hymns of Tulsidas. New Delhi, India: Abhinav Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788170174967. Famous classical singers like Paluskar, Anoop Jalota and MS Subbulakshmi have popularised Tulsidas's hymns among the people of India.
  15. Lutgendorf 1991: The hottest-selling recording in the thriving cassette stalls of Banaras in 1984... was a boxed set of eight cassettes comprising an abridged version of the Manas sung by the popular film singer Mukesh... it is impossible to say how many of the sets were sold, but by 1984 their impact was both visible and audible. One could scarcely attend a public or private religious function in Banaras that year without hearing, over the obligatory loudspeaker system, the familiar strains of Murli Manohar Svarup's orchestration and Mukesh's mellifluous chanting.
  16. Lutgendorf 1991: On 25 January 1987, a new program premiered on India's government-run television network, Doordarshan... it was the first time that television was used to present a serialized adaption of a religious epic. The chosen work was the Ramayan and the major source for the screenplay was the Manas. Long before the airing of the main story concluded on 31 July 1988, the Ramayan had become the most popular program ever shown on Indian television, drawing an estimated one hundred million viewers and generating unprecedented advertising revenues. Throughout much of the country, activities came to a halt on Sunday mornings and streets and bazaars took on a deserted look, as people gathered before their own and neighbors' TV sets.... The phenomenal impact of the Ramayan serial merits closer examination than it can be given here, but it is clear that the production and the response it engendered once again dramatized the role of the epic as a principal medium not only for individual and collective religious experience but also for public discourse and social and cultural reflection.
  17. Jones, Constance; Ryan, James D. (2007). Encyclopedia of Hinduism (Encyclopedia of World Religions) (Hardbound, Illustrated ed.). New York City, United States of America: Infobase Publishing. p. 456. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780816054589. It can be said without reservation that Tulsidas is the greatest poet to write in the Hindi language. Tulsidas was a Brahmin by birth and was believed to be a reincarnation of the author of the Sanskrit Ramayana, Valmikha singh.Jones, Constance; Ryan, James D. (2007). Encyclopedia of Hinduism (Encyclopedia of World Religions) (Hardbound, Illustrated ed.). New York City, United States of America: Infobase Publishing. p. 456. ISBN 9780816054589. It can be said without reservation that Tulsidas is the greatest poet to write in the Hindi language. Tulsidas was a Brahmin by birth and was believed to be a reincarnation of the author of the Sanskrit Ramayana, Valmikha singh.
  18. 18.0 18.1 18.2 Rambhadracharya 2008, p. xxv.
  19. Lutgendorf 1991, pp. 29.
  20. Growse 1914, p. v.
  21. Prasad 2008, p. xix.
  22. Lamb 2002, p. 38
  23. Lochtefeld, James G. The Illustrated Encyclopedia of Hinduism: N-Z. Rosen Publishing Group.
  24. Gita Press Publisher 2007, p. 25.
  25. Sivananda, Swami. "Goswami Tulsidas By Swami Sivananda". Sivananda Ashram, Ahmedabad. பார்க்கப்பட்ட நாள் 12 July 2011.
  26. Ralhan 1997 pp. 187–194.
  27. 27.0 27.1 27.2 27.3 27.4 27.5 Ralhan 1997, pp. 194–197.
  28. 28.0 28.1 Shukla 2002, pp. 30–32.
  29. 29.0 29.1 29.2 Gita Press Publisher 2007, pp. 27–29.
  30. Lutgendorf 1991, p. 25.
  31. Pradas 2008, p. 878, quoting J. L. Brockington: ... for in his more personal Vinayapatrika Tulasi alludes to having visions of Rama.
  32. Lutgendorf 1991, pp. 49–50.
  33. Growse 1914, p. ix.
  34. 34.0 34.1 34.2 Rambhadracharya 2008, pp. xxix–xxxiv.
  35. Tulsidas 1574, ப. 45
  36. Saraswati 2001, ப. 485
  37. O.P. Ralhan (1997), The Great Gurus of the Sikhs, Volume 1, Anmol Publications Pvt Ltd, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7488-479-4, ... It was on a Tuesday, the ninth day of Chaitra in the Samvat year 1631, that Tulsidas started writing the Ramcharitmanas in the city of அயோத்தி on the banks of the sacred சரயு. The place and date are significant, அயோத்தி being the birthplace and the day being the birthday of Sri இராமர் ...
  38. Duiker 2012, ப. 3.1
  39. Pant 2012, ப. 64
  40. Singh 1990, ப. 121
  41. Mathew 2012, ப. H-39
  42. Ghosh 2002, ப. 104
  43. Lamb 2002, ப. 29
  44. Agarwal 2005, ப. 114
  45. MacFie 2004, ப. 115
  46. Bakker 2009, ப. 122
  47. Rajagopal 2001, ப. 99
  48. Pillai & Bharti 2005, ப. 120
  49. Lutgendorf 2006, ப. 293
  50. Mathur & Chaturvedi 2005, ப. 67
  51. Melton 2011, ப. 875
  52. Quinn 2009, ப. 456
  53. Jones & Ryan 2006, ப. 456
  54. Pinch 2006, ப. 217
  55. Callewaert 2000, ப. 58
  56. Bulcke & Prasāda 2010, ப. xi
  57. Lochtefeld 2002, ப. 713
  58. Coogan 2003, ப. 141
  59. Richman 2001, ப. 9
  60. Pandey 2008, pp. 58–60: संवत् सोरह सै असी असी गंग के तीर। श्रावण शुक्ला सत्तमी तुलसी तज्यो शरीर॥ quoting Mata Prasad Gupta, and also संवत् सोरह सै असी असी गंग के तीर। श्रावण श्यामा तीज शनि तुलसी तज्यो शरीर॥ quoting the Mula Gosain Charita.
  61. Rambhadracharya 2008, p. xxxiv: संवत् सोरह सै असी असी गंग के तीर। श्रावण शुक्ला तीज शनि तुलसी तज्यो शरीर॥

குறிப்புகள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=துளசிதாசர்&oldid=3949995" இலிருந்து மீள்விக்கப்பட்டது