உள்ளடக்கத்துக்குச் செல்

அனுமன் சாலிசா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அனுமன் சாலிசா
Hanuman Chalisa
அனுமன் சாலிசாவின் முழு வடிவம்
நூலாசிரியர்துளசிதாசர்
நாடுஇந்தியா
மொழிஅவாதி
வகைபக்தி இலக்கியம்

அனுமன் சாலிசா (ஆங்கிலம்: Hanuman Chalisa; இந்தி: हनुमान चालीसा "அனுமன் மீது பாடப்பட்ட நாற்பது பாடல்கள்") என்பது இறைவன் அனுமன் மீது பாடப்பட்ட பக்திப் பாடல் ஆகும்.[1] துளசிதாசரால் அவாதி மொழியில் இந்தப் பாடல் எழுதப்பட்டுள்ளது, மேலும் அவரால் பாடப்பட்ட ராமசரிதமனசாவை விட இதுவே சிறந்த இந்து உரையாகும்.[2][3]

பிரம்மச்சாரி தெய்வமான அனுமனின் அருள்பெற வேண்டி கோடிக்கணக்கானவர்களால் இச்சாலிசா பாடப்படுகிறது.

தனது நெஞ்சைப் பிளந்து இராமபிரானைக் காட்டும் அனுமன்

மேன்மை

[தொகு]
அனுமன் சாலிசாவை இயற்றிய துளசிதாசர்
வாரணாசியில் துளசிதாசர் பிறந்து வாழ்ந்த இடமான கங்கை நதியின் கறையில் அனுமன் சாலிசா இயற்றப்பட்ட இடம்

தற்போதைய இந்துக்களிடையே ஹனுமன் சாலிசா அதிமாகப் பிரபலமடைந்துள்ளது. பலர் இதைத் தினமும் அல்லது எல்லா வாரங்களும், பொதுவாகச் செவ்வாய் அல்லது சனிக்கிழமைகளில் இறைவணக்கத்தின் போது துதிக்கின்றனர்.

அனுமன் சாலிசாவின் ஒவ்வொரு 40 பாடல்களும் ஒரு குறிப்பிட்ட வரத்தை வழங்குகின்றது, பக்தரின் பக்தி அல்லது சிரத்தையைப் பொறுத்து, ஒவ்வொரு பாடலின் பலனையும் பெறுவார்கள் எனக் குறிப்பிடுகின்றது.

அனுமன் சாலிசாவின் 38 ஆம் பாடலில், யார் அனுமன் சாலிசாவை 100 நாட்கள் தினமும் 100 தடவை சொல்கிறார்களோ அவர்கள் பிறப்பு மற்றும் இறப்பு சக்கரத்திலிருந்து விடுபட்டு அதிக ஆனந்தத்தை அடைவார்கள் எனக் குறிப்பிடப்படுகின்றது.

குறிப்புதவிகள்

[தொகு]
  1. http://www.thehindubusinessline.com/2003/02/26/stories/2003022601521700.htm
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-03-04. Retrieved 2010-07-13.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2004-01-03. Retrieved 2010-07-13. {{cite web}}: Unknown parameter |= ignored (help)

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனுமன்_சாலிசா&oldid=4416417" இலிருந்து மீள்விக்கப்பட்டது