கோத்திரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கோத்திரம் (Gotra) என்பது குடும்பப் பெயர் போன்றதாகும். வர்ணாச்ரம தர்மப்படி முதல் மூன்று ஆசிரமத்தினர்க்கு கோத்திரங்கள் உண்டு.[1] வேதகால ரிஷிகளின் வழிவந்தமையால், அவர்களின் பெயர்களைக் கொண்டே கோத்திரங்களின் பெயர்களும் அமைந்த்துள்ளது. ஜாபாலி கோத்திரம், சௌனக கோத்திரம், பாரத்துவாஜ கோத்திரம், மார்க்கண்டேய கோத்திரம் போன்றவை சில எடுத்துக்காட்டுகளாகும் . வேதங்களின் படி ஒரே கோத்திரத்தில் பிறந்த ஆணும் பெண்ணும் சகோதர சகோதரிகளாவர்.[2]

மனுதரும சாத்திரப்படி ஒரே கோத்திரத்தில் திருமணம் செய்வது சமயப்படி குற்றமாகும். கோத்திரம் என்ற சொல்லுக்கு பசு-எழுத்தாணி என்று பொருளாகும்[3]. அக்காலத்தில் பசுக்கள் ஒரு குடும்பத்தின் விலைமதிக்கமுடியாத சொத்தாக கருதியதால் குடும்பப் பெயர் என்ற சொல்லுக்கு கோத்திரம் என்ற பெயர் வந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்[மேற்கோள் தேவை].

மேற்கோள்:[தொகு]

  1. http://www.salagram.net/Gotras.html
  2. Manusmriti:The Laws of Manu
  3. Cologne Digital Sanskrit Lexicon: http://webapps.uni-koeln.de/cgi-bin/tamil/recherche?dictionary=mwd&prst=exact&st=gotra

இதனையும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோத்திரம்&oldid=2294020" இருந்து மீள்விக்கப்பட்டது