மானசரோவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Lake Manasarovar
མ་ཕམ་གཡུ་མཚོ།
Lake Manasarovar  མ་ཕམ་གཡུ་མཚོ། - (ஜூலை 2006)
(ஜூலை 2006)
அமைவிடம் திபெத்
புவியமைவுக் கூறுகள் 30°40′25.68″N 81°28′07.90″E / 30.6738000°N 81.4688611°E / 30.6738000; 81.4688611ஆள்கூறுகள்: 30°40′25.68″N 81°28′07.90″E / 30.6738000°N 81.4688611°E / 30.6738000; 81.4688611
மேற்பரப்பளவு 320 km2 (120 sq mi)
அதிக அளவு ஆழம் 90 m (300 ft)
மேற்பரப்பின் உயரம் 4,556 m (14,948 ft)
உறைதல் குளிகாலத்தில்

மானசரோவர் ஏரி கைலை மலையில் உள்ள நன்னீர் ஏரி, இது உலகத்திலேயே மிக உயரத்தில் உள்ள நன்னீர் ஏரி என்று கருதப்படுகின்றது. மானசரோவர் பரிக்ரமம் வரும்போது சுகு, ஜெய்தி ஆகிய இரண்டு இடங்களிலும் கயிலைமலையின் பிரதிபிம்பத்தை மானசரோவரில் காண முடியும். இது ஓர் அரிய காட்சியாகும். இந்தப் பிரதிபிம்பம் ’சிவமும் சக்தியும் சேர்ந்த அர்த்தநாரீஸ்வரர் வடிவம்’ என்ற கருத்தில் ’கெளரி சங்கர்’ என்று அழைக்கப்படுகிறது. இக்குளம் 51 சக்தி பீடங்களில் தேவியின் வலது உள்ளங்கை விழுந்த பீடமாகும்.

இதன் அருகே ராட்சதலம் ஏரியும் உள்ளது. இந்த ராட்சதலம் ஏரியில் இருந்து இராவணன் தவம் புரிந்ததாக ஒரு கதை உள்ளது.இந்த ஏரி மானசரோவருக்கு மேற்கில் சுமார் 10 கி.மீ தூரத்தில் தொலைவில் உள்ளது.கைலாச யாத்திரை செல்லும் யாத்திரிகர்கள் இந்த ராட்சதலம் ஏரியில் நீராடும் வழக்கம் கிடையாது.

உதவி நூல்[தொகு]

  • கைலாஸ் மானசரோவர் யாத்திரை; எழுதியவர் சுவாமி கமலாத்மானந்தர்;சென்னை இராமகிருஷ்ண மடம் வெளியீடு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மானசரோவர்&oldid=1876558" இருந்து மீள்விக்கப்பட்டது