பத்ரிநாத்

ஆள்கூறுகள்: 30°44′38″N 79°29′35″E / 30.744°N 79.493°E / 30.744; 79.493
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பத்ரிநாத்
பேரூராட்சி
பத்ரிநாத் நகரம்
பத்ரிநாத் நகரம்
பத்ரிநாத் is located in உத்தராகண்டம்
பத்ரிநாத்
பத்ரிநாத்
இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் பத்ரிநாத்தின் அமைவிடம்
பத்ரிநாத் is located in இந்தியா
பத்ரிநாத்
பத்ரிநாத்
பத்ரிநாத் (இந்தியா)
ஆள்கூறுகள்: 30°44′38″N 79°29′35″E / 30.744°N 79.493°E / 30.744; 79.493
நாடுஇந்தியா
மாநிலம்உத்தராகண்ட்
மாவட்டம்சமோலி
பரப்பளவு
 • மொத்தம்3 km2 (1 sq mi)
ஏற்றம்3,300 m (10,800 ft)
மக்கள்தொகை (2011)[1]
 • மொத்தம்2,438
 • அடர்த்தி810/km2 (2,100/sq mi)
மொழிகள்
 • அலுவல்இந்தி, கார்வாலி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்246422
வாகனப் பதிவுUK 11
இணையதளம்india.gov.in
நான்கு சிறு கோயில்கள்
Kedarnathji-mandir.JPG Badrinathji temple.JPG
கேதாரிநாத் பத்ரிநாத்
Gangotri temple.jpg Yamunotri temple and ashram.jpg
கங்கோத்ரி யமுனோத்திரி

பத்ரிநாத் (Badrinath) இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தின் கார்வால் கோட்டத்தில், சமோலி மாவட்டத்தில் அமைந்த பேரூராட்சி ஆகும். இங்கு உத்தராகண்டின் நான்கு புனிதத் தலங்களில் ஒன்றான பத்ரிநாத் கோயில் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும்.

தேசிய நெடுஞ்சாலை எண் 58 பத்ரிநாத் நகரத்தை ஜோஷி மடம், ரிஷிகேஷ் அரித்துவார் வழியாக புதுதில்லி அருகே உள்ள காசியாபாத் நகரத்துடன் இணைக்கிறது.

அமைவிடம்[தொகு]

ரிஷிகேசுக்கு வடக்கே 301 கிமீ தொலைவிலும், கௌரி குண்டத்திலிருந்து (கேதார்நாத்) 233 கிமீ தொலைவிலும் பத்திரிநாத் உள்ளது.

பெயர்க் காரணம்[தொகு]

பத்திரி என்ற வட மொழி சொல்லிற்கு இலந்தை மரம் என்று பொருள். நாத் என்ற சொல்லிற்கு தலைவர் எனப்பொருளாகும்.[2]பத்ரிநாத் பகுதியில் இலந்தை மரங்கள் அதிகம் வளர்கிறது.

வரலாறு[தொகு]

ஆதி சங்கரர் நிறுவிய நான்கு மடங்களில் ஒன்று பத்ரிநாத் அருகே உள்ள ஜோஷி மடம் ஆகும்.[3][4] சிறீ கிருஷ்ணரின் நண்பர் உத்தவர் இறுதியில் பத்ரிநாத்தில் உள்ள பத்திரிகாசிரமத்தில் தங்கி தவமிருந்து மோட்சம் அடைந்தார் என பாகவத புராணம் கூறுகிறது.[5][6]

பத்ரிநாத் கோயில்[தொகு]

பத்ரிநாத் கோயில் மூலவர்கள் விஷ்ணுவின் அம்சமான நர-நாராயணனர்கள் சாளக்கிராமம் வடிவத்தில் உள்ளனர். இக்கோயில் முன்புறத்தில் அலக்நந்தா ஆறு பாய்கிறது. கோயில் அருகில் வெந்நீர் ஊற்றுகள் உள்ளது.[7] பத்ரிநாத் கோயில் தீபாவளி அன்று மூடப்படும். பின்பு குளிர்காலம் முடிந்த பின் ஏப்ரல் மாதத்தில் இக்கோயில் திறக்கப்படும்.

புவியியல்[தொகு]

பத்ரிநாத் உத்தராகண்டின் கார்வால் கோட்டத்தின் இமயமலையில் 3,100 மீட்டர் (10,170 அடி) உயரத்தில், அலெக்நந்தா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. நர-நாராயணன் மலைத்தொடர்களுக்கு இடையில் பத்ரிநாத் ஊர் அமைந்துள்ளது. இம்மலைத்தொடரில் 6,596 மீட்டர் உயரத்தில் நீலகண்ட கொடுமுடி உள்ளது. நந்தா தேவி கொடுமுடிக்கு வடமேற்கே 62 கிமீ தொலைவில் பத்ரிநாத் உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, பத்ரிநாத் மக்கள் தொகை 2,438 ஆகும். மக்கள் தொகையில் 2,054 ஆண்களும் மற்றும் 384 பெண்களும் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை 68 ஆகும். சராசரி எழுத்தறிவு 92.9% ஆகும். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 113 மற்றும் 22 ஆக உள்ளனர்.[1]

இதனையும் காண்க[தொகு]

தட்ப வெப்பம்[தொகு]

தட்பவெப்ப நிலைத் தகவல், பத்ரிநாத், உத்தராகண்ட்
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 4.3
(39.7)
6.0
(42.8)
10.0
(50)
15.0
(59)
18.6
(65.5)
20.4
(68.7)
19.1
(66.4)
18.6
(65.5)
17.1
(62.8)
13.7
(56.7)
9.7
(49.5)
6.5
(43.7)
13.25
(55.85)
தினசரி சராசரி °C (°F) -0.3
(31.5)
1.2
(34.2)
5.0
(41)
9.3
(48.7)
12.6
(54.7)
15.0
(59)
14.9
(58.8)
14.7
(58.5)
12.6
(54.7)
8.3
(46.9)
4.5
(40.1)
1.5
(34.7)
8.28
(46.9)
தாழ் சராசரி °C (°F) -4.9
(23.2)
-4.6
(23.7)
0.0
(32)
3.6
(38.5)
6.7
(44.1)
9.6
(49.3)
10.8
(51.4)
10.8
(51.4)
8.1
(46.6)
3.0
(37.4)
-0.6
(30.9)
-3.4
(25.9)
3.26
(37.87)
பொழிவு mm (inches) 145.0
(5.709)
139.0
(5.472)
163.0
(6.417)
77.0
(3.031)
54.0
(2.126)
102.0
(4.016)
325.0
(12.795)
312.0
(12.283)
188.0
(7.402)
63.0
(2.48)
45.0
(1.772)
67.0
(2.638)
1,680
(66.142)
ஆதாரம்: [8]

அடிக்குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 "Census of India: Badrinath". www.censusindia.gov.in. 6 November 2019 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Ziziphus mauritiana - Ber". flowersofindia.net.
  3. "Badrinath". 15 June 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது.
  4. Wylie, C.G. "Himalayan journal : A PRE-SWISS ATTEMPT ON NILKANTA(1947)". The Himalayan Club. 25 நவம்பர் 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. 6 June 2013 அன்று பார்க்கப்பட்டது.
  5. Dowson's Classical Dictionary of Hindu mythology
  6. Gopal, Madan (1990). K.S. Gautam. ed. India through the ages. Publication Division, Ministry of Information and Broadcasting, Government of India. பக். 75. https://archive.org/details/indiathroughages00mada. 
  7. Randhir Prakashan, The Holy Places of Uttarakhand Yatra.
  8. "BADRINATH CLIMATE". CLIMATE-DATA.ORG. May 5, 2020 அன்று பார்க்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Badrinath
என்பதின் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்ரிநாத்&oldid=3561801" இருந்து மீள்விக்கப்பட்டது