வாசுகி தால் ஏரி
வாசுகி தால் ஏரி | |
---|---|
அமைவிடம் | உத்தராகண்டம் |
வடிநில நாடுகள் | ![]() |
கடல்மட்டத்திலிருந்து உயரம் | 4135 மீ |
வாசுகி தால் ஏரி (Vasuki Tal lake) என்றறியப்படும் இவ்வேரி, இந்தியாவின் வட பகுதியில் அமைந்துள்ள உத்தராகண்டம் மாநிலத்தின் கேதார்நாத் என்ற நகரிலிருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவிலும், கடல்மட்டத்திலிருந்து சுமார் 4135 மீட்டர் உயரத்திலும் அமைந்துள்ளது. சௌகம்பா (Chaukhamba) எனும் சிகரங்களின் அருகில் அமைந்துள்ள இந்த ஏரி, உயர் மலை முகடுகளால் சூழப்பட்டுள்ளது.[1]
பின்புலம்[தொகு]
இமயமலை சாரலிலுள்ள சதுரங்கி, மற்றும் வாசுகி என்ற இரு பனி ஆற்றின் பின்புலத்தில் அமைந்துள்ள இந்த வாசுகி தால் ஏரி, சூன் மாதம் முதல்- அக்டோபர் மாத இடைப்பட்ட பருவத்தில் மட்டுமே பனியகன்று காணப்படுகிறது.[2] வாசுகி ஏரியிலிருந்து வெளியேறும் உபரிநீர், கேதார்நாத்தின் வளதுபுறம் அமைந்திருந்கும் மலைத்தொடரின் கீழேயுள்ள கேதார்நாத் கிராமத்தின் நுழைவாயிலுக்கு செல்லும் இரும்புப் பாலத்தின் அருகே "பால் கங்கை" (தூத் கங்கா) என்ற பெயருடன் மந்தாகினி ஆற்றில் கலக்கிறது.[3]
சுற்றுலா தளம்[தொகு]
இமயமலைத் தொடரின் அடிவாரத்தில் 14,200 அடிகள் உயரத்தில் கார்வால் பகுதியில் அமைந்துள்ள வாசுகி தால் ஏரி, பனியின் குளிச்சியாலும், பருவகால பூக்களாலும் அப்பிராந்தியத்தை அழகுற வைத்துள்ளது. மலை ஏறும் பயணிகளும், கேதார்நாத் கோயிலுக்கு வருகைதரும் பக்தர்களும் இவ்வேரி பகுதிக்கு அதிகளவில் வந்து செல்கின்றனர். கேதார்நாத்திலிருந்து வாசுகி தால் செல்ல ஒரு குறுகிய, நெடிய மலையேற்ற தடங்களில் நடைபயணம் மேற்கொள்வதாக உள்ளது. [4] மேலும், வாசுகி தால் ஏரியை சுற்றிலும் சிறு வண்ண பூக்கள் பலவகை இருப்பினும்,கள்ளி இனத்தைச் சேர்ந்த பிரம்ம கமலம் எனும் அபூர்வ வகை பூக்கள் பெருமளவில் காணப்படுகிறது. வடஇந்திய தொன்மை திருவிழாவான ரக்சா பந்தன் கொண்டாடும் காலங்களில் (தமிழ்: ஆவணி மாதத்தில்) விஷ்ணு என்ற கடவுள் இந்த ஏரியில் நீராடியதால் "வாசுகி தால்" என பெயர் பெற்றதாக நம்பப்படுகிறது.[5]
புற இணைப்புகள்[தொகு]
- நேட்டிவ் பிளானெட் தமிழ் | வாசுகி தால், கேதார்நாத் |வலைக்காணல்: சூன் 29 2016]
- வாசுகி தால் அல்லது வாசுகி ஏரியின் எழில் தோற்ற படிமம்
சான்றாதாரங்கள்[தொகு]
- ↑ "Vasuki Tal". www.himalaya2000.com (ஆங்கிலம்) (Copyright © Himalayas). பார்த்த நாள் 22 சூன் 2016.
- ↑ "வாசுகி தால், கேதார்நாத்". tamil.nativeplanet.com (தமிழ்) (© 2016). பார்த்த நாள் 22 சூன் 2016.
- ↑ தினமணி|கங்கையின் கோர தாண்டவம்!|(மினி தொடர் - பகுதி 4)|Published: Jul 17, 2013 1:11 PM|வலைகாணல்: சூன் 22 2016
- ↑ www.trawell.in/uttarakhand/kedarnath/vasuki-tal | VASUKI TAL - TRAVEL INFO | (ஆங்கிலம்) | வலைக்காணல்: சூன் 30 2016
- ↑ "Vasuki Tal Trek Kedarnath". uttarakhandpravasi.com (ஆங்கிலம்) (SEPTEMBER 13, 2014). பார்த்த நாள் 29 சூன் 2016.