பாகேஸ்வர் மாவட்டம்
பாகேசுவர் மாவட்டம்
बागेश्वर जिला | |
---|---|
மாவட்டம் | |
உத்தரகண்ட மாநிலத்தில் பாகேசுவர் மாவட்ட அமைவிடம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | உத்தராகண்டம் |
மண்டலம் | குமாவன் |
பெயர்ச்சூட்டு | shahi cevil network kaplote |
தலைமையிடம் | பாகேசுவர் |
பரப்பளவு | |
• மொத்தம் | 2,302 km2 (889 sq mi) |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 2,49,462 |
• அடர்த்தி | 108/km2 (280/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழி | இந்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
இணையதளம் | bageshwar |
பாகேசுவர் மாவட்டம் (Bageshwar District), வடக்கு இந்தியாவின் உத்தராகண்டம் மாநிலத்தில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் நிர்வாக தலைமையிடம் பாகேசுவர் நகரமாகும்.
மாவட்ட எல்லைகள்
[தொகு]உத்தராகண்ட மாநிலத்தில் குமாவன் மண்டலத்தின் கிழக்கு திசையில் அமைந்துள்ள பாகேஸ்வர் மாவட்டம் மேற்கிலும், வடமேற்கிலும் சமோலி மாவட்டம், வடகிழக்கிலும், கிழக்கிலும் பிதௌரகட் மாவட்டம் மற்றும் அல்மோரா மாவட்டம் எல்லைகளாக கொண்டுள்ளது.
உத்தராகண்ட மாநிலத்தின் பதின்மூன்று மாவட்டங்களில் மக்கள்தொகை மிகவும் குறைந்த மாவட்டங்களில் ருத்ரபிரயாக் மாவட்டம் மற்றும் சம்பாவத் மாவட்டத்திற்கு அடுத்து மூன்றாம் இடத்தில் உள்ளது.[1]
மாவட்ட நிர்வாகம்
[தொகு]நிர்வாக வசதிக்காக பாகேஸ்வர் மாவட்டம் பாகேஸ்வர், கந்தா, கப்கோட் மற்றும் கரூர் என நான்கு வருவாய் வட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. பாகேஸ்வர் வருவாய் வட்டத்தில் 415 கிராமங்களும், கந்தா வட்டத்தில் 180 கிராமங்களும், கப்கோட் வட்டத்தில் 156 கிராமங்களும், கரூர் வட்டத்தில் 197 கிராமங்களும் உள்ளது.
புவியியல்
[தொகு]இமயமலையின் சிவாலிக் மலைதொடரில் அமைந்த மாவட்டமிது. சர்ஜூ, கோமதி மற்றும் புங்கர் ஆறுகள் இம்மாவட்டத்தில் பாய்கிறது.
மக்கள் வகைப்பாடு
[தொகு]2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை ஆக 259,898 உள்ளது. அதில் ஆண்கள் 124,326 ஆகவும், மற்றும் பெண்கள் 135,572 ஆகவும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு பெண்கள் 1090 வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 116 பேர் வீதம் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 80.01% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 92.33% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 69.03% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 35,560 ஆக உள்ளது.[2]
சமயம்
[தொகு]இம்மாவட்டத்தில் இந்து சமயத்தவரின் மக்கள்தொகை 257,509 ஆகவும், இசுலாமியர் மக்கள்தொகை 1,440 ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள்தொகை 397 ஆகவும், சமயம் குறிப்பிடாதவர்கள் 381 ஆகவும், பிற சமய மக்கள்தொகை கணிசமாக உள்ளது.
அரசியல்
[தொகு]பாகேஸ்வர் மாவட்டம், கப்கோட் சட்டமன்ற தொகுதி (பொது) மற்றும் பாகேஸ்வர் சட்டமன்ற தொகுதி (பழங்குடி மக்கள்-ST) என இரண்டு சட்டமன்ற தொகுதிகளை கொண்டுள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.
- ↑ http://www.census2011.co.in/census/district/581-bageshwar.html