சாரதா ஆறு
சாரதா ஆறு மகாகாளி ஆறு | |
---|---|
உத்தராகண்ட் மாநிலத்தில் ஜௌல்ஜிபி அருகே பாயும் சாரதா ஆறு | |
அமைவு | |
நாடுகள் | இந்தியா - நேபாளம் |
பிரதேசம் | நேபாள மாநில எண் 7, உத்தராகண்ட் & உத்தரப் பிரதேசம் |
சிறப்புக்கூறுகள் | |
மூலம் | |
⁃ அமைவு | பிதௌரகட் மாவட்டம், உத்தராகண்ட் மாநிலம், இந்தியா |
⁃ ஆள்கூறுகள் | 30°14′32″N 81°01′19″E / 30.2421°N 81.0219°E |
⁃ ஏற்றம் | 3,600 m (11,800 அடி) |
2nd source | |
⁃ அமைவு | நேபாளம்-திபெத் எல்லையில் உள்ளலிபுலெக் கணவாயின் தெற்கில் |
⁃ ஆள்கூறுகள் | 30°26′18″N 80°34′14″E / 30.4384°N 80.5706°E |
⁃ ஏற்றம் | 5,553 m (18,219 அடி) |
முகத்துவாரம் | |
⁃ அமைவு | காக்ரா ஆறு, உத்தரப் பிரதேசம், இந்தியா |
⁃ ஆள்கூறுகள் | 27°38′27″N 81°17′26″E / 27.6408°N 81.2905°E |
⁃ உயர ஏற்றம் | 115 m (377 அடி) |
நீளம் | 350 km (220 mi) |
வடிநில அளவு | 14,871 km2 (5,742 sq mi) |
வெளியேற்றம் | |
⁃ சராசரி |
|
வடிநில சிறப்புக்கூறுகள் | |
வடிநிலம் | கங்கை ஆறு |
துணை ஆறுகள் | |
⁃ இடது | நேபாளத்தின் சாமெலியா மற்றும் ராம்குன் ஆறுகள் |
⁃ வலது | இந்தியாவின் உத்தராகண்ட் மாநில குடி, தர்மா, கோரி, சர்ஜு, லாதியா ஆறுகள் |
சாரதா ஆறு (Sharda River), இமயத்தில் உள்ள நந்தா தேவி மலையின் கிழக்கு பகுதியில், 3,600 மீட்டர் உயரத்தில், இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தின் பிதௌரகட் மாவட்டத்தில் உள்ள காலாபானி பிரதேத்தில் உற்பத்தி ஆவதால், இதனை காளி ஆறு என்றும் அழைப்பர்.[1]உத்தராகண்ட் பகுதியில் இந்த ஆறு இந்தியா மற்றும் நேபாளத்திற்கு எல்லையாக உள்ளது.
இந்தியாப் பகுதியில் உற்பத்தியாகும் இந்த ஆறு கிழக்கே நேபாள மாநில எண் 7 வழியாக பாய்ந்து, பின் தென்மேற்காக திரும்பி, மீண்டும் இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில் பாய்கிறது. இதன் வடிநிலப் பகுதி 1,487 சதுர கிலோ மீட்டர் ஆகும். சாரதா ஆறு உத்தராகண்ட் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்கள் வழியாக 350 கிலோ மீட்டர் தொலைவு பாய்ந்து இறுதியாக கங்கை ஆற்றின் துணை ஆறான காக்ரா ஆற்றில் கலக்கிறது. [2] உத்தராகண்ட் மாநிலத்தில் இந்த ஆறு பாய்கையில் இதற்கு காளி ஆறு என்றும், தராய் பகுதியில் பாய்கையில் இதற்கு சாரதா ஆறு என்றும் அழைக்கப்படுகிறது.[3]
உத்தராகண்ட் மாநிலத்தில் சாரதா ஆற்றின் குறுக்கே பல நீர்த்தேக்கங்கள் அமைக்கப்பட்டு, மின்சார உற்பத்திக்கு பல புனல் மின் திட்டங்கள் செயல்படுகிறது. [4]
சாரதா ஆறு உற்பத்தியாகுமிடம் குறித்து இந்திய-நேபாள நாடுகளிடையே கருத்து வேற்றுமைகள் உள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Sarda River
- ↑ Midha, N.; Mathur, P.K. (2014). "Channel characteristics and planform dynamics in the Indian Terai, Sharda River". Environmental management 53 (1): 120–134. doi:10.1007/s00267-013-0196-4. http://www.rhinoresourcecenter.com/pdf_files/139/1390008106.pdf.
- ↑ Walton, H. G., ed. (1911). "Chapter I. General". Almora: A Gazetteer. District Gazetteers of the United Provinces of Agra and Oudh. Vol. 35. Allahabad: Government Press, United Provinces. p. 1–42.
{{cite book}}
: Unknown parameter|chapterurl=
ignored (help) - ↑ Himalayan Component Link Proposal NWDA, Govt of India (Accessed: June 2014)